இலங்கையின் மழைக்காட்டு மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையின் மழைக்காட்டு மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிப்போடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: குரோசிடுரா
இனம்: கு. கிக்மியா
இருசொற் பெயரீடு
குரோசிடுரா கிக்மியா
மேகசுகும்புரா மற்றும் பலர், 2007
குரோசிடுரா கிக்மியா பரம்பல்

குரோசிடுரா கிக்மியா (Crocidura hikmiya) என்பது சிங்கராசா மூஞ்சூறு அல்லது இலங்கையின் மழைக்காட்டு மூஞ்சூறு அழைக்கப்படும் மூஞ்சுறு சிற்றினம் ஆகும். இது உருவவியல் மற்றும் மூலக்கூறு தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் மழைக்காட்டுகளில் காணப்படும் மூஞ்சுறுகளின் ஓர் சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நெருங்கிய சகோதர சிற்றினமாக இலங்கையின் நீண்ட வால் மூஞ்சுறு உள்ளது. இலங்கையில் உள்ள மற்றொரு மூஞ்சுறு, குரோசிடுரின் மூஞ்சுறு இலங்கையில் மத்திய மலைப்பகுதிகளின் உயரமான வாழிடங்களில் காணப்படுகின்றது. கு. கிக்மியாவுக்கு இலங்கையின் நீண்ட வால் மூஞ்சுறுவினைவை விடச் சிறிய வால் உள்ளது. இரண்டு சிற்றினங்களையும் வேறுபடுத்தும் மற்ற குணாதிசயங்களில் பெரும்பாலானவை எலும்பியல் தொடர்பானவை.[2]

சொற்பிறப்பியல்[தொகு]

கிக்மியா என்ற குறிப்பிட்ட அடைமொழியானது 'மூஞ்சூறு' என்பதன் சிங்கள சொல்லாகும். இது சிங்களத்தில் சிறீ லங்கா சிங்கராஜ குனு கிக்மியா (ශ්‍රී ලංකා සිංහරාජ කුනු හික් මීයා) என அழைக்கப்படுகிறது.

வாழ்விடம்[தொகு]

குடாவா மற்றும் மார்னிங்சைடில் உள்ள சிங்கராஜாக் காட்டு விளிம்பு தளமான குடாவா மற்றும் மார்னிங்சைடில் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Meegaskumbura, S.; Meegaskumbura, M. (2008). "Crocidura hikmiya". IUCN Red List of Threatened Species 2008: e.T136596A4316355. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T136596A4316355.en. https://www.iucnredlist.org/species/136596/4316355. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. S. H. Meegaskumbura; M. Meegaskumbura; K. Manamendra-Arachchi; R. Pethiyagoda; C. J. Schneider (2007). "Crocidura hikmiya, a new shrew (Mammalia: Soricomorpha: Soricidae) from Sri Lanka". Zootaxa 1665: 19–30. http://www.mapress.com/zootaxa/2007f/z01665p030f.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]