இறுதிச் சடங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பின்பு, அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டோ அழிக்கப்படுகிறது. உயிர் பிரிந்த உடல் அழிக்கப்படுவதற்கு முன்பாக சில சடங்குகள் (நடைமுறைகள்) செய்யப்படுகின்றன. இதற்கு இறுதிச் சடங்கு என்று பெயர். இவை பெரும்பான்மையாக அவர்கள் சார்ந்துள்ள சமயங்களின் கொள்கைகளுக்கும் அவற்றின் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாக உள்ளது.

இந்து சமய ஈமச் சடங்குகள்[தொகு]

இந்து சமயத்தில் இறந்தோருக்காகச் செய்யப்படும் ஈமச் சடங்குகள் சாதிகள் வாரியாகவும், பூவியியல் அடிப்படையில் சில மாற்றங்களோடு நிகழ்கின்றன. இச்சடங்குகள் இறப்புச் சடங்குகள், ஈமச் சடங்குகள், ஈமக் கிரியைகள் என்றும் வழங்கப்படுகின்றன.[1]

ஒருவர் இறந்துவிட்டதாக அறிந்தபின்னர், அவருக்கு நல்லாடையினை அணிவித்து வடக்கு தெற்காக தரையில் படுக்க வைக்கின்றனர். அவர் சைவ சமயத்தவர் என்றால் நெற்றியில் திருநீறு பட்டையிடுவர், வைணவராக இருந்தால் திருநாமம் தரிப்பர். இறந்தவரது தலைக்கு மேலே நெல் நிறைந்த மரக்கால் வைப்பதும், அருகே காமாட்சி விளக்கேற்றி வைப்பதும் நிகழ்கிறது.

  • தேங்காய் உடைத்தல்
  • நல்லெண்ணெய், சீகற்காய் வைத்தல்
  • தண்ணீர் கொண்டு வருதல்
  • குளிப்பாட்டுதல்
  • கோடி போடுதல்
  • பின்னப்பூ இடுதல்
  • கண்பார்த்தல்
  • நெய்ப்பந்தம் காட்டுதல்
  • பாடை மாற்றுதல்
  • கொள்ளி வைத்தல்

ஆதாரங்கள்[தொகு]

  1. இறப்புச் சடங்குகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறுதிச்_சடங்கு&oldid=3762366" இலிருந்து மீள்விக்கப்பட்டது