இராமநாதபுரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமநாதபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் இராமநாதபுரம் நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வட்ட நிர்வாகம்[தொகு]

இராமநாதபுரம் வட்டம் இராமநாதபுரம், தேவிபட்டனம், பெருங்குளம் மற்றும் மண்டபம் என நான்கு உள்வட்டங்களும், 43 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 399,232 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 202,047 ஆண்களும், 197,185 பெண்களும் உள்ளனர். 92,369 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 56.8% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 85.03% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 976 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 42072 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 973 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 54,787 மற்றும் 711 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 68.98%, இசுலாமியர்கள் 27.61%, கிறித்தவர்கள் 2.3% மற்றும் பிறர் 1.10.% ஆகவுள்ளனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்
  2. இராமநாதபுரம் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
  3. இராமநாதபுரம் தாலுகா மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாதபுரம்_வட்டம்&oldid=2713785" இலிருந்து மீள்விக்கப்பட்டது