இந்திய எண்ணிம நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய எண்ணிம நூலகம் (Digital Library of India) என்பது ஒரு பல்மொழி, பல்துறை நூல்கள் எண்ணிமமாக்கத் திட்டமாகும். அரசு ஆதரவு பெற்ற இந்த திட்டத்தின் நோக்கம் 1 மில்லியன் நூல்களை எண்ணிமமாக்கலாகும். பொதுவாக பழைய, காப்புரிமை விலக்கப்பட்ட நூல்களே எண்ணிமமாக்கப்படுகின்றன. தற்போது இங்கு தமிழில் 278 நூல்கள் மட்டுமே உள்ளன. ஆங்கிலத்தில் 36,283, தெலுங்கில் 14,182, கன்னடத்தில் 511 நூல்கள் உட்பட வேறு பல மொழிகளிலும் நூல்கள் உண்டு[1]. இவற்றை இலவசமாகப் படிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-25. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_எண்ணிம_நூலகம்&oldid=3543567" இலிருந்து மீள்விக்கப்பட்டது