இங்கிலாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்து
சார்புஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஜெதர் நைட்
பயிற்றுநர்லிசா கெய்ட்லி
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைFull member (1909)
ஐசிசி மண்டலம்ஐரோப்பிய துடுப்பாட்ட அவை
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
பெ.ப.ஒநா3ஆவது2ஆவது (01-Oct-2015)
பெஇ20ப2ஆவது2ஆவது
பெண்கள் தேர்வு
முதலாவது பெ.தேர்வுv  ஆத்திரேலியா பிரிஸ்பேன்; டிசம்பர் 28–31 ,1934
கடைசி பெதேர்வுv  ஆத்திரேலியா ஜூலை 18–21 ,2019
பெ.தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [2]9520/14
(61 சமன்கள்)
நடப்பு ஆண்டு [3]00/0 (0 draws)
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம்
கடைசி பெஒநாv  நியூசிலாந்து பல்கலைக்கழக ஓவல், துனெடின், துனெடின்; பெப்ரவரி 28, 2021
பெஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]351206/132
(2 ties, 11 no result)
நடப்பு ஆண்டு [5]32/1
(0 ties, 0 no result)
பெண்கள் உலகக்கிண்ணம்11
பெண்கள் பன்னாட்டு இருபது20
kadaisi பெப20இv  நியூசிலாந்து at வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம், வெலிங்டன், நியூசிலாந்து; மார்ச் 7,2021
பெப20இ(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]149106 7/38
(3 ties, 1 no result)
நடப்பு ஆண்டு [7]33/0
(0 ties, 0 no result)
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள்6
சிறந்த பெறுபேறுவாகையாளர் (2009)
இற்றை: மார்ச் 7,2021

இங்கிலாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி (England women's cricket team) பெண்கள் பன்னாட்டு அளவில் விளையாடும் துடுப்பாட்ட வடிவத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அணியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம் (ஈசிபி) நிர்வகிக்கிறது. ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தனது முதல் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 2-0 எனும் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

2017 ஆம் ஆண்டில், இந்த அணி பிபிசி விளையாட்டில் ஆளுமைமிக்க அணிக்கான விருதை வென்றனர்.

வரலாறு[தொகு]

1935, சிட்னியில் நடந்த இரண்டாவது பெண்கள் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள்.

முன்னோடிகள்[தொகு]

1934-35இல் இங்கிலாந்து அணி பெட்டி ஆர்க்டேல் தலைமையில் ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் கலந்து கொண்டனர்.

அந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றது மற்றும் மூன்றாவது போட்டியினை சமன் செய்து தொடரைக் கைப்பற்றியது. பின்னர் நியூசிலாந்தை ஓர் ஆட்டப்பகுதி மற்றும் 337 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [8]

முதல் உலகக் கிண்ணம்[தொகு]

மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதுவரை தேர்வு போட்டியில் விளையாட அனுமதி வழங்கப்படவில்லை, ஆனால் இங்கிலாந்து 1969-70 மற்றும் 1970-71 ஆம் ஆண்டுகளில் சர் ஜாக் ஹேவர்டின் நிதியுதவியுடன் இரண்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டது. [9]

2005[தொகு]

2005 உலகக் கோப்பையில், அரையிறுதியில் இங்கிலாந்து ஆத்திரேலியாவிடம் தோற்றது. இருப்பினும், ஆத்திரேலியாவுக்கு எதிரான இரண்டு தேர்வு போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் வென்றது, 42 ஆண்டுகளில் முதல் முறையாக பெண்கள் ஆஷஸைக் கோரியது.

போட்டி வரலாறு[தொகு]

உலகக் கோப்பை[தொகு]

  • 1973 : வெற்றியாளர்கள்
  • 1978 : இரண்டாம் இடம்
  • 1982 : இரண்டாம் இடம்
  • 1988 : இரண்டாம் இடம்
  • 1993 : வெற்றியாளர்கள்
  • 1997 : அரையிறுதி
  • 2000 : ஐந்தாவது இடம்
  • 2005 : அரையிறுதி
  • 2009 : வெற்றியாளர்கள்
  • 2013 : மூன்றாம் இடம்
  • 2017 : வெற்றியாளர்கள்

சான்றுகள்[தொகு]

  1. "ICC Rankings". International Cricket Council.
  2. "Women's Test matches - Team records". ESPNcricinfo.
  3. "Women's Test matches - 2019 Team records". ESPNcricinfo.
  4. "WODI matches - Team records". ESPNcricinfo.
  5. "WODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  6. "WT20I matches - Team records". ESPNcricinfo.
  7. "WT20I matches - 2019 Team records". ESPNcricinfo.
  8. Only Test: New Zealand Women v England Women, Christchurch, 16–18 February 1935, from Cricinfo, retrieved 6 June 2006
  9. When the women set the agenda, by Jenny Thompson, Cricinfo, retrieved 7 September 2006