ஆலங்குடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலங்குடி வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆலங்குடி நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் வல்லநாடு , கீரமங்கலம், வெண்ணவால்குடி மற்றும் ஆலங்குடி என 4 உள்வட்டங்களும், 73 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 170,419 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 84,023 ஆண்களும், 86,396 பெண்களும் உள்ளனர். 40,983 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 83.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 80.01% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 18319 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 965 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 24,375 மற்றும் 24 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.41%, இசுலாமியர்கள் 4.06%, கிறித்தவர்கள் 4.48% மற்றும் பிறர் 0.05% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்குடி_வட்டம்&oldid=2725064" இலிருந்து மீள்விக்கப்பட்டது