ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 2000

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓயாத அலைகள் மூன்று
ஓயாத அலைகள் மூன்று, வடமுனைச் சமர்
காலம் மார்ச் 26 - ஏப்ரல் 22, 2000
இடம் ஆனையிறவு
அணிகள்
இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள்
தலைவர்கள்
காமினி ஹெட்டியாராச்சி பிரிகேடியர் பால்ராஜ்[1]
குழுவினர்
81000[2] 1200[2]

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும்.[1] ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது.

தாக்குதல் வடிவமைப்பு[தொகு]

குடாரப்பில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1,200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.

தாக்குதலின் பின்னணி[தொகு]

  • கண்டி வீதியில் நிலை கொள்ளல் - குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது.
  • பளை ஆட்லெறித் தள உள்நுழைவு - கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.
  • தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு - வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.
  • இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் - தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
  • பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி - இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது.
  • உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் - வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 29 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.
  • காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் - இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டிற்கு மேற்பட்ட தடவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும், ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக இருந்த காமினி ஹெட்டியாராச்சி அவரின் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.
  • ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை - இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களுக்குப் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

மேற்கோள்களும் மூலங்களும்[தொகு]

  1. 1.0 1.1 D.B.S. JEYARAJ (May. 13 - 26 2000). "The taking of Elephant Pass". Frontline Volume 17 (Issue 10). doi:20 சனவரி 2015. http://www.frontline.in/static/html/fl1710/17100100.htm. 
  2. 2.0 2.1 செகத்துக் கேசுப்பர் (சூலை 2009). "மாவீரன் பால்ராஜ்". நக்கீரன். doi:சனவரி 20, 2015. http://nakkheeran.in/users/frmNews.aspx?N=11590. பார்த்த நாள்: 2015-01-19.