அஸ்டா நீல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிடா நீல்சன்
1925 இல் அவரது வீட்டில்
பிறப்புஅசிடா சோபி அமலி நீல்சன்
(1881-09-11)11 செப்டம்பர் 1881
வெசிடர்புரோ, டென்மார்க்
இறப்பு24 மே 1972(1972-05-24) (அகவை 90)
ஃபிரடெரிக்சுபெர்க், டென்மார்க்
தேசியம்டேனிசு
படித்த கல்வி நிறுவனங்கள்ராயல் டேனிசு நாடக அரங்கு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1902–1936
துணைவர்கிரிகோரி சமரா (1923-1930s)
பிள்ளைகள்1

அசிடா சோபி அமலி நீல்சன் (Asta Sofie Amalie Nielsen 11 செப்டம்பர் 1881 – 24 மே 1972) ஒரு ஊமைத் திரைப்பட நடிகை ஆவார். 1910 ஆம் ஆண்டுகளில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். முதல் சர்வதேச நடிகையாக அறியப்பட்டார்.[1]

1920 ஆம் ஆண் டில் பெர்லினில் சொந்தமாக படமனை ஒன்றினை நிறுவினார். பின்னர் செருமனியில் நாசிக்களின் எழுச்சியினைத் தொடர்ந்து இவர் 1937 ஆம் ஆண்டில் மீண்டும் இவர் டென்மார்க் சென்றார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அசிடா சோபி அமலி நீல்சன் பிறந்தார் தென்மார்க்கு, கோப் பென்காமில் உள்ள வெசுதர்புரோவில் 11 செப்டம்பர் 1881 இல் பிறந்தார். இவரின் தந்தை ஓர் கொல்லர் ஆவார். இவரின் தாய் துணிகளைத் துவைக்கும் பணிகளைச் செய்து வந்தார். இவரின் பெற்றோருக்குப் போதிய அளவு பணிகள் கிடைக்காததால் இவரின் குடும்பம் அடிக்கடி பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இவர்கள் சுவீடனில் உள்ள மால்மோவில் சில ஆண்டுகாலம் தங்கிருந்தனர். அங்கு இவரின் தந்தை சோள அரவை ஆலையில் பணிபுரிந்தார். பின் இவரது தந்தை வேலை இழந்தபின்னர் இவர்கள் கோபென்ககென்னிற்கு சென்றனர்.[2]இவரின் பதினான்காம் வயதில் இவரின் தந்தை இறந்தார். தனது 18 ஆம் வயதில் இவர் ராயல் டேனிசு தியேட்டர் எனும் நாடகப் பள்ளியில் இவர் சேர்ந்தார். அந்த சமயத்தில் பீட்டர் செர்ன்ட்ராஃப் என்பவரது நடிப்புத் திற்னை கூர்ந்து கவனித்தார்.[3] தனது 21 ஆம் வயதில் 1901 ஆம் ஆண்டில் இவர் செசுடா எனும் மகளைப் பெற்றார். ஆனால் அதன் தந்தை யார் என்று கூறவில்லை. தனது தாய் மற்றும் மூத்த சகோதரிகளின் உதவியோடு இவர் தனது மகளை வளர்த்தார்.[4]

நீல்சன் நாடகப் பள்ளியில் 1902 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார் . அடுத்த மூன்று ஆண்டுகள் இவர் டக்மர் நாடகத் திரையரங்கில் பணி புரிந்தார்.பின்னர் 1905 முதல் 1907 ஆம் ஆண்டுகள் வரை இவர் நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு டி ஓட்டே அண்ட் தெ பீட்டர் செசுட்ரப் நிறுவனம் சார்பாக சென்றார். பின்னர் 1907 ஆம் ஆண்டு முதல் 1910 ஆம் ஆண்டு வரை இவர் டெட் நி தியேட்டரில் பணிபுரிந்தார்.அம்க்கு பணிபுரிந்த சமயங்களில் மேடி நடிகையாகத் தோன்றினார். தற்போது வரை இவரின் நடிப்பு அங்கு பரவலாக அறியப்படுகிறது.[5]

உறவுகள் மற்றும் இறப்பு[தொகு]

நீல்சன் நான்கு நபர்களிடம் நீண்ட கால உறவு முறைகளில் இருந்தார். அதில் இருமுறை விவாகரத்து பெற்றார் . 1912 ஆம் ஆண்டில் டேனிசு மொழி இயக்குநரான ஐபன் காட் என்பவரைத் திருமணம் செய்தார். இவருடன் இணைந்து 1911 ஆம் ஆண்டில் செருமனியில் சொந்தமாக படமனை ஒன்றினை நிறுவினர்.[6]1919 ஆம் ஆண்டில் இவர்கள் விவாகரத்துப் பெற்றனர். பின்னர் இவர் சுவீடன் நாட்டினைச் சேர்ந்த கப்பல் கட்டும் நிறுனத்தின் நிறுவனரான ஃபிரட்டி விண்ட்கார்த் என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால் இந்தத் திருமண வாழ்க்கை மிகக் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. 1920 ஆம் ஆண்டில் இந்தத் தம்பதி விவாகரத்துப் பெற்றனர். பின்பு உருசிய நடிகரான கிரிகோரி சமரா என்பவர் மீது காதல் கொண்டார். இவர்கள் 1923 ஆம் ஆண்டு முதல் 130 ஆம் ஆண்டு வரை இணைந்திருந்தனர். 1960 ஆம் ஆண்டுகளில் கிறிட்டியன் தீதே என்பவருடன் உறவுநிலையில் இருந்தார். தனது 88 ஆம் வயதில் 77 வயது ஆன திதேவினைத் திருமணம் செய்தார். தனது 90 ஆம் வயதில் மே 25, 1972 இல் இவர் இறந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. Morris 1996.
  2. Malmkjær 2000.
  3. DFI.
  4. Malmkjær 2000, ப. 45.
  5. Neiiendam 1939.
  6. Allen, Julia K. (August 25, 2013). Icons of Danish modernity: Georg Brandes and Asta Nielsen. University of Washington Press. பக். 127–227. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780295804361. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்டா_நீல்சன்&oldid=3524742" இலிருந்து மீள்விக்கப்பட்டது