அலறல் (ஓவியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலறல் ( The Scream )
Skrik
ஓவியர்எட்வர்ட் முஞ்ச் (Edvard Munch)
ஆண்டு1893
வகைஎண்ணை வர்ணம், சுவர்ப் பூச்சு, தடித்த அட்டையில் வண்ணத் தீட்டுக்கோல்
பரிமானங்கள்91x73.5
இடம்நேஷனல் காலரி, ஓஸ்லோ, ஓஸ்லோ, நார்வே

அலறல் (ஓவியம்) (ஆங்கில மொழி: The Scream) (நோர்வே: Skrik) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியரான எட்வர்ட் மண்ச் என்பவரால் வரையப்பட்டப் புகழ்பெற்ற ஒரு ஓவியமாகும். இந்த ஓவியம் 2012- ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஏலத்தில் 119.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 1895 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த ஓவியம், சோதபி என்ற நியூயோர்க் ஏலவிற்பனைக் கூடத்தில் அநாமதேய நபர் ஒருவரினால் வாங்கப்பட்டது. 40 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து ஏலம் ஆரம்பித்து 12 நிமிடங்களில் இந்த ஓவியம் விற்கப்பட்டது. இந்த விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு நோர்வேயில் புதிய அருங்காட்சியகம், உணவகம், கலைக்கூடம் ஆகியன அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலறல்_(ஓவியம்)&oldid=1369588" இலிருந்து மீள்விக்கப்பட்டது