அமுதவல்லி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமுதவல்லி
இயக்கம்ஏ. கே. சேகர்
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
திரைக்கதைஆர். இராமநாதன்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
எம். என். ராஜம்
தாம்பரம் லலிதா
ஒளிப்பதிவுஇராஜகோபால்
ஜி. கே. இராமு
படத்தொகுப்புஎஸ். பி. எஸ். வீரப்பன்
கலையகம்ஜூபிட்டர் பிக்சர்சு
வெளியீடு27 நவம்பர் 1959 (1959-11-27)
ஓட்டம்198 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அமுதவல்லி - ஜூபிடர் பிக்சர்சு தயரிப்பாக 1959ல் வெளிவந்த திரைப்படம். இதில் டி. ஆர். மகாலிங்கம் கதாநாயகனாகவும், எஸ். ஏ. நடராஜன் வில்லனாகவும் நடித்தார்கள். டி. ஆர். மகாலிங்கம் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.[1][2][3]

இடம்பெற்ற பாடல்[தொகு]

டி. ஆர். மகாலிங்கமும், பி. சுசீலாவும் பாடிய பின்வரும் பாடல் மிகவும் புகழ் பெற்றது:

"ஆடை கட்டி வந்த நிலவோ - கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ - குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ - நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ"

துணுக்குகள்[தொகு]

இத்திரைப்படம் பற்றி "கல்கி" பத்திரிகையில் வந்த விமர்சன வரிகள்- "படத்தில் சந்திரகாந்த ரசம் அருந்தினால் பழைய ஞாபகங்கள் மறையும் எனக் கூறுகிறார்கள். அது கிடைத்தால் நாமும் இப்படத்தை மறக்க தோதாக இருக்கும்"

மேற்கோள்கள்[தொகு]

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails4.asp. 
  2. Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 574. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. "Amudhavalli". Archived from the original on 15 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுதவல்லி_(திரைப்படம்)&oldid=3800248" இலிருந்து மீள்விக்கப்பட்டது