அனைத்துலக மக்களாட்சி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.[1][2][3]

சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.

மேலும், உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆகுமென பொதுச்சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல நாடுகளினதும் பிரதிநிதிகள், ஐ.நா.வின் சகல அமைப்புகள், அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐநா கேட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஐக்கிய நாடுகள் General Assembly Session 62 Resolution 7. Support by the United Nations system of the efforts of Governments to promote and consolidate new or restored democracies A/RES/62/7 page 3. 8 November 2007. Retrieved 2008-08-23.
  2. "Universal Declaration on Democracy". பார்க்கப்பட்ட நாள் 15 September 2016.
  3. "icnrd.org - This website is for sale! - icnrd Resources and Information". Archived from the original on 6 November 2018. பார்க்கப்பட்ட நாள் 15 September 2016. {{cite web}}: Cite uses generic title (help)