அட்லசு மலைத்தொடர்

ஆள்கூறுகள்: 31°03′43″N 07°54′58″W / 31.06194°N 7.91611°W / 31.06194; -7.91611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்லசு மலைத்தொடர்
மொராக்கோவில் காணப்படும் உயர்ந்த அட்லசு மலைத்தொடரின் தெளப்கல் தேசிய பூங்காவில் உள்ள தெளப்கல் மலைச்சிகரம்
உயர்ந்த இடம்
உச்சிதெளப்கல், மொராக்கோ
உயரம்4,167 m (13,671 அடி)
பட்டியல்கள்
ஆள்கூறு31°03′43″N 07°54′58″W / 31.06194°N 7.91611°W / 31.06194; -7.91611
புவியியல்
வட ஆப்பிரிக்காவின் குறுக்காக அட்லசு மலைத்தொடரின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது)
நாடுகள்மொராக்கோ, அல்சீரியா and தூனிசியா
நிலவியல்
பாறையின் வயதுதொன்மை பேரூழிக்காலம்

அட்லசு மலைத்தொடர் (The Atlas Mountains) (அரபு மொழி: جِـبَـال الْأَطْـلَـس‎; idurar n waṭlas) மக்ரிபில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இந்த மலைத்தொடர் 2500 கி.மீ (1600 மைல்கள்) தொலைவிற்கு மொராக்கோ, அல்சீரியா மற்றும் தூனிசியா ஆகிய நாடுகளின் வழியாக விரவிக் கிடக்கிறது. இந்த மலைத்தொடரின் உயர்ந்த சிகரமானது தெளப்கால் (உயரம் 4,167 மீட்டர் அல்லது 13,671 அடி)ஆகும். இந்த சிகரமானது மொராக்கோவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரானது, நடுநிலக்கடல் மற்றும் அத்திலாந்திக்குப் பெருங்கடல் கடற்கரைகளைச் சகாரா பாலைவனத்திலிருந்து பிரிக்கிறது.[1] அட்லசு மலைத்தொடரில் பேர்பர்கள் (குறிப்பிட்ட இன மக்கள்) முதன்மையாக வசித்து வந்தனர்[2] மலை என்பதற்கான பேர்பர் மொழி வார்த்தைகள் அட்ரார் மற்றும் அட்ராஸ் ஆகும். அட்லசு என்பதற்கான பெயராய்வியலில் மேலே சொன்ன வார்த்தைகள், மொழியியல் உடன்பிறப்புகளாகக் கருதப்படுகின்றன. இந்த மலைத் தொடரானது பெரும்பான்மையாக ஐரோப்பாவில் உள்ளதைப் போல ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் தனித்தன்மை வாய்ந்த பல்வேறு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது. அவற்றுள் பல அருகிய இனமாகவும் சில ஏற்கெனவே அற்றுவிட்ட இனங்களாகவும் ஆகிவிட்டன. 

நிலவியல்[தொகு]

வடக்கு ஆப்பிரிக்காவின் குறுக்காக அட்லசு மலைத் தொடரின் அமைவிடத்தைக் காட்டும் நில வரைபடம்

பெரும்பான்மையான ஆப்பிரிக்கா கண்டப்பகுதியின் அடித்தளப் பாறையானது, தொன்மைமுந்திய மாபேரூழிக் காலத்தில் உருவானதாகும். மேலும், அட்லசு மலைகள் கண்டப் பகுதியில் காணப்படுவதைக் காட்டிலும் மிகவும் முந்தைய காலத்தைச் சார்ந்ததாகும். அட்லசு மலைத்தொடரானது, பூமியின் புவியியல் மூன்று அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டதாகும். தொண்மை ஊழிக்காலத்தில் ( ~300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்), கண்டத்திட்டுகளுக்கு இடையேயான மோதல்களின் விளைவாக, முதல் புவி ஓட்டு சீர்குலைவு என்பது ஆண்டிஅட்லசு மலைப்பகுதியிலேயே ஏற்பட்டது.வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்டிருந்தன.

புவியோட்டு எல்லை

ஆண்டி-அட்லசு மலைத்தொடர்கள் உண்மையில் அல்லேகெனியன் மலையாக்கச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக உருவாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஆபிரிக்காவும், அமெரிக்காவும் மோதிக்கொண்டபோது இந்த மலைகள் உருவாகியதோடு இன்றைய இமயமலையோடு போட்டியிடுகின்ற ஒரு சங்கிலித்தொடர் போல் இருந்தன. இன்று, இந்த சங்கிலித் தொடரின் எஞ்சிய பகுதிகளை, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கிழக்குப் பகுதியில் காணப்படும் அத்திலாந்திக்குக் கடலோர எல்லைக் கோட்டுப்பகுதியில் காணலாம். சில எஞ்சிய பகுதிகளை வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அப்பலேச்சியன் மலைத்தொடர் பகுதியிலும் காண முடியும்.

மைய ஊழிக்காலத்தில் (~ 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இரண்டாவது கட்ட உருவாக்கமானது நிகழ்ந்திருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் தான் புவியின் மேலோடு பரவலான விரிவாக்கத்தைக் கொண்டிருந்தது. பிளவுகள் மற்றும் வெடிப்புகள் காரணமாக கண்டங்கள் பிரிந்தன. இந்த நீட்டிப்பு தற்போதைய அட்லசு உள்ளிட்ட பல தடிமனான கண்டங்களை இணைக்கும் வண்டல் படிவுகள் உருவாவதற்குக் காரணமாக இருந்துள்ளது. தற்போதைய அட்லசு மலையின் மேற்பரப்பை உருவாக்கியுள்ள பாறைகளில் பெரும்பாலானவை அந்த நேரத்தில் பெருங்கடலினுள் படிவாக்கப்பட்டன. இறுதியாக, தொன்னெழு காலம் மற்றும் புதுவெழு காலம் ஆகியவற்றில் (~66 மில்லியன் முதல் ~ 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்), ஐபீரியத் தீபகற்பத்தின் தெற்கு முனையில் ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நிலப்பகுதிகள் மோதிக்கோண்ட போது, மலைத்தொடர் சங்கிலியைக் கொண்டிருந்த தற்போதைய அட்லசு நிலத்திற்கு மேல் உயர்த்தப்பட்டது.

மேற்கோள்கள் மற்றும் குறிப்புகள்[தொகு]

  1. "Atlas Mountains - Students | Britannica Kids | Homework Help" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  2. "Atlas Mountains: Facts and Location | Study.com" (in en). Study.com. http://study.com/academy/lesson/atlas-mountains-facts-and-location.html. பார்த்த நாள்: 2017-07-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லசு_மலைத்தொடர்&oldid=2531278" இலிருந்து மீள்விக்கப்பட்டது