அக்னி நட்சத்திரம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்னி நட்சத்திரம்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துசக்தி ஜெகன் (வசனம்)
திரைக்கதைஎஸ்.குமரேசன்
இயக்கம்
  • ஏ.பி.ராஜேந்திரன் (1-67)
  • எம்.கே.அருந்தவராஜா (68-140)
  • ரகு (141-196)
  • ஆர். கார்த்திகேயன் (197-235)
  • அருள்ராஜ் (236-414)
படைப்பு இயக்குனர்
  • பி.ரவி குமார்
  • தன்பால் ரவிக்குமார்
நடிப்பு
முகப்பு இசைஹரி
முகப்பிசை"அழகான நதியில்"
ஸ்ரீ நிஷா (பாடகர்)
கிருதியா (பாடல்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்414
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புபி. திவ்யா பிரியா
தயாரிப்பாளர்கள்பி. வி. பிரசாத் (1-67)
பி.ரவிக்குமார் (68-140)
விஷன் குழு (141-414)
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
ஒளிப்பதிவுமோகன்
தொகுப்புகிறிஸ்டோபர்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் (1-140)
விஷன் குழு (141-414)
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்27 மே 2019 (2019-05-27) –
3 ஏப்ரல் 2021 (2021-04-03)
வெளியிணைப்புகள்
இணையதளம்

அக்னி நட்சத்திரம் என்பது சன் தொலைக்காட்சியில் மே 27, 2019 முதல் ஏப்ரல் 3, 2021 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் வர்ஷினி அர்சா, காயத்ரி ராஜ், வசந்குமார் மற்றும் ராஜ்குமார் மானோகரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.[1] இந்த தொடர் ஏப்ரல் 3, 2021 முதல் 414 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை இரண்டு இணைபிரியா நண்பர்கள் பற்றிய கதை. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த செல்வம் மற்றும் பணக்கார குடும்பத்தை சேர்த்த சந்திரசேகர் இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். என்னதான் நண்பரானாலும் செல்வதை ஏளனமாக பார்க்கும் சந்திரசேகரன் மனைவி நளினி.

ரெண்டு பேரும் ஒண்ணா கல்யாணம் செய்துக்கறாங்க. ரெண்டு பேர் மனைவியும் ஒண்ணா கர்ப்பமாகி, ஒரே நாளில் பிரசவத்துக்கு வைத்தியசாலைக்கு செல்கின்றனர். அங்கு ஜெயந்தி மற்றும் செல்வத்திற்கு இரட்டை பெண்குழந்தை பிறக்கின்றது ஆனால் நளினிக்கு பிறந்த குழந்தை இறந்து பிறக்க ஜெயந்தி கண் விழிப்பதற்குள் ஒரு குழந்தையை தன் முதலாளி நண்பன் கிட்ட குடுத்துடறார் செல்வம். சந்திரசேகர் குடும்பத்தில் பணக்காரா திமிர் பிடித்த பெண்ணாக வளரும் அகிலா இங்கு ஜெயந்தி மற்றும் செல்வத்திற்கு ஒரே அன்பான பெண்ணாக வளர்கிறாள். ஆரம்பகாலம் முதல் இருவரும் எலியும் பூனையுமாக வளர்க்கின்றனர்.

20 வருடம் கழித்து ஸ்ரீதரை காதலிக்கும் அகிலா ஆனால் ஸ்ரீதர் மீராவை காதலித்து திருமணம் செய்கின்றனர். இதனால் மீரா மற்றும் ஸ்ரீதருக்கு எதிராக மாறும் அகிலா. இதற்க்கு பிறகு இவர்களின் வாழ்வில் வரும் பிரச்சனைகளை இக்கதை விளக்குகின்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • வர்ஷினி அர்சா - மீரா ஸ்ரீதர்
  • மெர்ஷீனா நீனு (1-249) → காயத்ரி ராஜ் - அகிலா
  • வசந்குமார் - ஸ்ரீதர்
  • ராஜ்குமார் மானோகரன் - சூர்யா

துணை கதாபாத்திரம்[தொகு]

  • மௌனிகா[2] → கீர்த்தனா - ஜெயந்தி செல்வம்
  • ரிஷி கேசவன் - செல்வம்
  • வினோதினி → பரமோதினி → சில்பா → காயத்ரி பிரியா - நளினி சந்திரசேகர்
  • பரத் கல்யாண் - சந்திரசேகர்
  • சாந்தி ஆனந்தராஜ் - சாந்தி
  • அனுராதா - கங்காதேவி
  • ஸ்ரீ வித்யா ஷங்கர் - மைதிலி
  • முரளி - கார்த்திகேயன்
  • நவீந்தர் - நவீன்
  • மனஸ் காவாலி - ரஞ்சித்
  • பாபூஸ் - அய்யாதுரை

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதலில் பிரியமானவள் என்ற தொடரின் மறு ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக மே 27, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் ஆகஸ்ட் 5, 2019 முதல் காலை 11:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது. கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 14, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகி, நவம்பர் 30, 2020 முதல் மதியம் 12 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பானது. பிப்ரவரி 15, 2021 முதல் ஏப்ரல் 3,2021 வரை காலை 11:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பானது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
27 மே 2019 - 3 ஆகஸ்ட் 2019
திங்கள் - சனி
13:00 1-60
5 ஆகஸ்ட் 2019 - 27 மார்ச் 2020
திங்கள் - சனி
11:30 61-249
14 செப்டம்பர் 2020 - 28 நவம்பர் 2020
திங்கள் - சனி
11:30 250-312
30 நவம்பர் 2020 - 13 பிப்ரவரி 2021
திங்கள் - சனி
12:00 313-380
15 பிப்ரவரி 2021 - 3 ஏப்ரல் 2021
திங்கள் - சனி
11:30 381 - 414

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2019 3.2% 4.3%
2020 3.5% 4.8%
2.3% 4.0%
2021 2.4% 3.9%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Agni Natchathiram New Serial".
  2. "Agni Natchathiram: Actress Mounika to make her TV comeback after a decade".

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை காலை 11:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அக்னி நட்சத்திரம்
அடுத்த நிகழ்ச்சி
திரைப்படம் நந்தினி
(மறு ஒளிபரப்பு)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை மதியம் 12 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அக்னி நட்சத்திரம் அடுத்த நிகழ்ச்சி
நிலா நிலா
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை காலை 11:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அக்னி நட்சத்திரம் அடுத்த நிகழ்ச்சி
--- திரைப்படம்
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை பிற்பகல் 1 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அக்னி நட்சத்திரம்
அடுத்த நிகழ்ச்சி
பிரியமானவள் தமிழ்ச்செல்வி