மெசுத் ஓசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: el:Μεζούτ Εζίλ; மேலோட்டமான மாற்றங்கள்
சி தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டியைத் (playerhistory.com) திருத்துதல்
வரிசை 174: வரிசை 174:
* [http://www.transfermarkt.de/de/spieler/35664/mesutoezil/profil.html Profile at Transfermarkt.de] {{de icon}}
* [http://www.transfermarkt.de/de/spieler/35664/mesutoezil/profil.html Profile at Transfermarkt.de] {{de icon}}
* [http://en.qantara.de/webcom/show_article.php/_c-478/_nr-912/i.html The Polite Boy with the Faux-Hawk]
* [http://en.qantara.de/webcom/show_article.php/_c-478/_nr-912/i.html The Polite Boy with the Faux-Hawk]
* [http://www.playerhistory.com/Default.aspx?page=player_details&playerID=104892 Profile at PlayerHistory.com] {{en icon}}
* [http://www.playerhistory.com/player/104892/ Profile at PlayerHistory.com] {{en icon}}


{{Germany Squad 2010 World Cup}}
{{Germany Squad 2010 World Cup}}

21:23, 9 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

மெசுத் ஓசில்

ரியால் மாட்ரிட் அணிக்காக விளையாடும் ஓசிழ்
Personal information
முழு பெயர்மெசுட் ஓசிழ்
பிறந்த நாள்15 அக்டோபர் 1988 (1988-10-15) (அகவை 35)
பிறந்த இடம்கெல்சென்கிர்ச்சென, மேற்கு ஜெர்மனி
உயரம்1.82 மீ[1]
விளையாட்டு நிலைதாக்கும் நடுக்கள வீரர் (Attacking midfielder)
Club information
தற்போதைய கிளப்ரியால் மட்ரீட்
எண்23
Youth career
1995–1998வெஸ்ட்ஃபாலியா 04 கெல்சென்கிர்ச்சென்
1998–1999டியுட்டோனியா ஷால்கே-நோர்ட்
1999–2000ஃபால்கே கெல்சென்கிர்ச்சென்
2000–2005ரோட்-வெய்ஸ் எஸ்சன்
2005–2006ஷால்கே 04
Senior career*
YearsTeamApps(Gls)
2006–2008ஷால்கே 0430(0)
2008–2010வெர்தெர் பிரெமென்71(13)
2010–ரியால் மாட்ரிட்7(1)
National team
2006–200719 வயதுக்குட்பட்ட ஜெர்மானிய தேசிய அணி11(4)
2007–200921 வயதுக்குட்பட்ட ஜெர்மானிய தேசிய அணி16(5)
2009–ஜெர்மானிய தேசிய அணி21(3)
* Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 16 அக்டோபர் 2010.

† Appearances (Goals).

‡ National team caps and goals correct as of 12 அக்டோபர் 2010

மெசுட் ஓசிழ் (Mesut Özil, பி. அக்டோபர் 15, 1988) ஒரு ஜெர்மானிய [2] கால்பந்தாட்ட வீரர். தற்போது எஸ்பானிய லீக் (லா லிகா) பிரிவில் ரியால் மட்ரீட் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 2006ம் ஆண்டிலிருந்து ஜேமானிய இளைஞர் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். 2009ம் ஆண்டிலிருந்து ஜெர்மானிய தேசியக் கால்பந்தாட்ட அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

ஓசிழ் 2010 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் தங்கப்பந்து (Golden Ball) விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டதன் மூலம் பிரபலமானார். 2010 உலகக்கோப்பைப் போட்டிகளில் அவரது சிறந்த ஆட்டம் அவருக்கு ரியால் மட்ரீட் அணியில் இடம் பெற்றுத்தந்தது. காலபந்தாட்டத்தில் கோலடிக்க வாய்ப்பு அமைத்து தரும் இவரது திறன் பார்சிலோனா சங்கம் மற்றும் அர்ஜெண்டைனா தேசிய அணிகளுக்கு விளையாடும் லியோனல் மெஸ்ஸியை ஒத்து இருப்ப்தால், “ஜெர்மானிய மெஸ்ஸி” என்று அழைக்கப்படுகிறார். ஓசிழின் குடும்பத்தார் இரு தலைமுறைகளுக்கு முன் துருக்கியிலிருந்து ஜெர்மனிக்கு குடி பெயர்ந்தவர்களாவர்.[3] துருக்கி ரக கால்பந்தாட்ட நுணுக்கத்தை ஜெர்மானிய ஒழுங்குடன் கலந்து தான் ஆடுவதாக ஓசிழ் கூறியுள்ளார்.


சங்க தொழில் வாழ்க்கை

கெல்சென்கிர்சென் மற்றும் றொட்-வெஇச்ச் ஏச்சென்

மெசுட் ஓசிழ் தனது இளமை பருவத்தில் கெல்சென்கிர்சென்லிலுள்ள கழகங்களுக்காக விளையாடத் தொடங்கியதன் மூலம் காலபந்தாட்ட உலகில் நுழைந்தார். அதன் பிறகு றொட்-வெஇச்ச் ஏச்சென் கழகத்திற்காக ஐந்து வருடங்கள் விளையாடினர்.

ஸ்சல்கெ 04

2005ல் இவர் இளைஞர் ஸ்சல்கெ 04 திணைக்களமத்திற்கு நகர்த்தார்.அங்கு இவர் ஒரு நடுக்கள வீரராக இருந்தார் .அத்துடன் அன்று இவரது இலக்கம் 11 ஆகும். ளிகபொகல் போட்டிகளின் பொது ளின்கொல்ன் இடைநிறுத்தப்பட்டதால் பயெர் ளெவெர்குசென் மற்றும் பயெர்ன் முனிச் கழகங்களுடனான போட்டியில் தாக்கும் நடுக்கள வீரராக (Attacking midfielder) ஸ்சல்கெ 04 அணிக்காக விளையாடினர். இதுவே இவர் முதலாவது தாக்கும் நடுக்கள வீரராக விளையாடிய போட்டியாகும்.[4]

வெர்தெர் பிரெமென்

இவர் 31 ஜனவரி 2008ல் வெர்தெர் பிரெமென் என்னும் ஜெர்மானிய சங்கத்திற்கு 30 ஜூன் 2011 வரை விளையாடுவாதற்காக €4.3 மில்லியன் தொகைக்கு ஒப்பந்தமானார்.[1]

ரியால் மாட்ரிட்

17 அக்டோபர் 2010ல் €15 மில்லியன் இடமாற்று தொகையைப் பெற்றுக் கொண்டு ஓசிழை ரியால் மாட்ரிட் அணுக்கு மாற்ற வெர்தெர் ப்ரெமென் ஒப்புக்கொண்டது. ரியால் மாட்ரிட் அணுக்காக அவர் விளையாடிய முதல் ஆட்டம் 22 ஆகஸ்டில் ஹர்குலெஸ் அணியுடனான போட்டியாகும். இதில் ரியால் மாட்ரிட் 3க்கு 1 என்ற வித்தியாசத்தில் ஹர்குலெஸ் அணியை தோற்கடித்தது.[5] லாலிகா தொடரில் ரியால் மாட்ரிட் இற்கான தனது கன்னி போட்டியில் 62ம் நிமிடத்தில் ஏன்ஞ்சல் டி மரியா(Ángel di María) இற்கு பதிலாக மெல்லோர்கா(mallorca) கழகத்திற்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.அப்போட்டி 0–0 கோல் கணக்கில் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. [6]

சர்வதேச விளையாட்டு வாழ்க்கை

2006 செப்டம்பரில் ஓசிழ் ஜெர்மனியின் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2007ல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் உறுப்பினரானார். 29 ஜூன் 2009ல் நடைபெற்ற U-21 யுரோபியன் சாம்பியன்ஷிப் ( U-21 European Championship) இறுதிப்போட்டியில் இங்கிலாந்துடன் 4க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் ஜெர்மானிய அண்இ வெற்றிபெற காரணமாக இருந்தார். 11 பெப்ரவரி 2009ல் நடந்த நோர்வே உடனான நட்புறவு போட்டி, இவர் ஜெர்மனி தேசிய அணிக்காக விளையாடிய முதல் போட்டியாகும். ஓசிழ் ஜெர்மன் தேசிய அணிக்கான தனது முதலாவது கோலை ளெவெர்குசென்(Leverkusen)ல் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான தனது மூன்றாவது போட்டியில் அடித்தார்.

2010 உலகக்கோப்பை

ஓசிழ் 2010 உலகக்கோப்பை போட்டிகளில் ஜெர்மனி தேசிய அணிக்கு விளையாடத் தெரிவானார். முதல் நான்கு போட்டிகளிலும் திறமையுடன் விளையாடினார். கானா அணிக்கெதிரான போட்டியில் கடினமான கோலை அடித்தது மூலம் ஜெர்மனிக்கு குழுவில் முதலாவது இடத்தை உறுதிப்படுத்தினார். 27 ஜுன் 2010ல் இங்கிலாந்துடனான போட்டியில் நான்காவது கோலை போட தோமஸ் முலாருக்கு உதவினார். இது இங்கிலாந்துடனான 16 ஆவது தொடர் வெற்றியாகும். இப்போட்டியில் 4க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் ஜெர்மன் அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்தது. கால் இறுதியில் ஆர்ஜன்டினா உடனான போட்டியில் மிரோசலாவ் குளோசே இற்கு பந்தைக் கடத்தியது மூலம் இரண்டாவது கோலை போட உதவினார். இப்போட்டியில் 4க்கு 1 என்ற வித்தியாசத்தில் ஜெர்மன் அணி ஆர்ஜன்டினா அணியை தோற்கடித்தது. பிபா இவரை தங்கப்பந்து (Golden Ball) விருதுக்கான 10 பேர்களில் ஒருவராக பரிந்துரை செய்தது.

சர்வதேச கோல்கள்

# தேதி இடம் எதிரணி ஸ்கோர் போட்டி
1 5 செப்டம்பர் 2009 பே எரீனா, லெவர்குசென், ஜெர்மனி  தென்னாப்பிரிக்கா 2–0 நட்பு ரீதியான போட்டி
2 23 ஜூன் 2010 கால்பந்து நகரம், ஜொஹனஸ்பர்க், தென்னாப்பிரிக்கா  கானா 1–0 2010 பிபா உலகக் கோப்பை
3 8 அக்டோபர் 2010 ஒலிம்பிக் அரங்கம், பெர்லின், ஜெர்மனி  துருக்கி 2–0 யூஈஎஃப்ஏ யூரோ 2012 கோப்பை தகுதிச்சுற்று
Correct as of 8 October 2010

தொழில் வாழ்க்கைப் புள்ளிவிவரங்கள்

இற்றைபடுத்தப் பட்ட தேதி: அக்டோபர் 23, 2010[7][8]

சங்க அணி ஆண்டு லீக் கோப்பை ஐரோப்பா மொத்தம்
ஆடியவை கோல்கள் உதவிகள் ஆடியவை கோல்கள் உதவிகள் ஆடியவை கோல்கள் உதவிகள் ஆடியவை கோல்கள் உதவிகள்
ஷால்கே 04 2006–07 19 0 1 1 0 0 1 0 0 21 0 1
2007–08 11 0 4 1 1 0 4 0 0 16 1 4
மொத்தம் 30 0 5 2 1 0 5 0 0 37 1 5
வெர்தெர் பிரெமென் 2007–08 12 1 1 0 0 0 2 0 0 14 1 1
2008–09 28 3 15 5 2 1 14 0 7 47 5 23
2009–10 31 9 17 5 0 2 8 0 7 44 9 26
2010–11 1 0 1 1 0 1
மொத்தம் 71 13 33 11 2 4 24 0 14 106 15 51
ரியால் மாட்ரிட் 2010–11 8 2 4 0 0 0 3 1 2 11 3 6
மொத்தம் 8 2 4 0 0 0 3 1 2 11 3 6
தொழில் வாழ்க்கை மொத்தம் 109 15 42 13 3 4 32 1 16 154 19 62

சாதனைகள்

சங்கம்

வெர்தெர் பிரெமென்
  • 2009 டிஃப்பி-பொகல் இறுதிப்போட்டி
  • 2009 யூஈஃப்ஏ 21 வயதுக்குட்பட்டொருக்கான ஐரோப்பிய போட்டி

நாடு

ஜெர்மனி

தனிப்பட்ட வாழ்க்கை

ஓசிழின் சகோதரர் முட்லுவும் ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார்.இவர் கெல்சென்கிர்செனிலுள்ள ஹெலெர் 06 என்னும் அணிக்காக விளையாடி வருகிறார்.இவர் மூன்றாவது தலைமுறை ஜெர்மன் வாழ் துருக்கி இனத்தை சார்ந்தவர்.இவரின் மூதாதையர்கள் வட துருக்கியிலிருந்து வந்த டெவ்ரெக், சொங்குல்தக் இனத்தை சார்ந்தவர்.இவர் அவரின் ஒவ்வொரு போட்டியின் போதும் அவதானமாக இருக்க போட்டி ஆரம்பிக்கும் முன் குர்ஆன் ஓதுவார்.இவர் பேட்டி ஒன்றின் பொது "நான் ஒவ்வொரு போட்டியின் முன்னும் இதை செய்து வருகிறேன் மற்றும் தொழுகிறேன் இவ்வேளையில் எனது அணி வீரர்கள் என்னுடன் கதைக்க முடியாது என அறிவார்கள் " என தெரிவித்தார்.

குறிப்புகள்

  1. 1.0 1.1 "23 Mesut Özil" (in German). transfermarkt.de. பார்க்கப்பட்ட நாள் 4 October 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Mesut Ozil to play for Real Madrid". Real Madrid. 17 August 2010. பார்க்கப்பட்ட நாள் 4 October 2010.
  3. "Group A preview: Turkey make trip to Germany". UEFA.com. 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 7 October 2010.
  4. Jean-Julien Beer (27 July 2006). "Ein 17-Jähriger soll Lincoln ersetzen" (in German). kicker.de. பார்க்கப்பட்ட நாள் 13 November 2007.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Madden, Paul (22 August 2010). "Hercules 1-3 Real Madrid: Benzema Brace Seals Friendly Triumph". Goal.com. பார்க்கப்பட்ட நாள் 23 August 2010.
  6. "Report: The Whites make their debut in the 2010/11 edition of La Liga". Real Madrid. 29 August 2010. பார்க்கப்பட்ட நாள் 16 September 2010.
  7. "Özil, Mesut" (in German). kicker.de. பார்க்கப்பட்ட நாள் 17 September 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "UEFA.com - UEFA Champions League - Özil". uefa.com. பார்க்கப்பட்ட நாள் 29 September 2010.

வெளிப்புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mesut Özil
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Germany Squad 2010 World Cup வார்ப்புரு:Real Madrid C.F. squad

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெசுத்_ஓசில்&oldid=975529" இலிருந்து மீள்விக்கப்பட்டது