மாடர்ன் தியேட்டர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 72: வரிசை 72:


==படிமம்==
[[File:Modern Theatre.jpg|thumb|விளக்கத்தை இங்கு சேர்க்கவும்]]

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

12:39, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

சேலம் மாடர்ன் தியேட்டர் வளாக நுழைவாயில்
மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்
முன்னைய வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிலைமூடப்பட்டது
நிறுவுகை1935
நிறுவனர்(கள்)டி. ஆர். சுந்தரம்
செயலற்றது1982
தலைமையகம்ஏற்காடு சாலை, சேலம் - 636 008, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
முதன்மை நபர்கள்டி. ஆர். சுந்தரம்
தொழில்துறைதிரைப்படங்கள்
உற்பத்திகள்திரைப்படங்கள்

மோடேர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் (Modern Theaters Ltd) 1935ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) துவக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.

வரலாறு

குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்

  • 1940இல் பி. யூ. சின்னப்பா நடித்த உத்தமப் புத்திரன் திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடம் அறிமுகமானது.
  • 1942ஆம் ஆண்டில் பி. யூ. சின்னப்பா மற்றும் டி.ஆர் ராஜகுமாரி நடித்து வெளியான "மனோன்மணி" என்றத் திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
  • 1938ஆம் ஆண்டு நோடானி இயக்கிய பாலன் என்ற திரைப்படமே முதல் மலையாள பேசும் திரைப்படமாக அமைந்தது. [2]
  • 1961ஆம் ஆண்டு கண்டம் வெச்ச கொட்டு என்ற மலையாளத்திரைப்படம் அம்மொழியில் எடுக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம் ஆகும்.[2]
  • தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம்: மோடேர்ன் தியேட்டர்சும் அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலத் திரைப்படத்தை - தி ஜங்கிள், தயாரித்தனர்.
  • புகழ்பெற்ற நகைச்சுவை நடிகை மனோரமா கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1963ஆம் ஆண்டில் வெளியான கொஞ்சும் குமரி டி.ஆர். சுந்தரத்தின் 97ஆவது திரைப்படமாக அமைந்தது.
  • மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் திரைப்படம்: சௌ சௌ. மூன்று கதைகள்: கலிகால மைனர், ஸ்கூல் டிராமா மற்றும் சூரப்புலி
  • தொலை அணுக்கவில்லை கண்டறியாத காலத்திலேயே அத்தகைய ஓர் உணர்வை உருவாக்கிய பொன்முடி பட காமெராமேனுக்கு பிரெஞ்சு அரசு விருதளித்துப் பாராட்டியது.
  • இந்தியாவின் ஐந்து முன்னாள் முதலமைச்சர்களை தனது சம்பளப் பட்டியலில் கொண்டிருந்த தனிப்பெருமை கொண்ட நிறுவனம்.
  • தனது திரைப்படங்களில் தரமான தயாரிப்பு அமைய அடிக்கடி வெளியிலிருந்து இயக்குனர்களை, எல்லிசு ஆர். டங்கன், மணி லால் டண்டன், பொம்மன் டி.இரானி போன்றவர்களை, பயன்படுத்தியது.


படிமம்

விளக்கத்தை இங்கு சேர்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடர்ன்_தியேட்டர்ஸ்&oldid=969261" இலிருந்து மீள்விக்கப்பட்டது