மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Kapaleeswarar Gopuram.jpg|thumb|200px|கபாலீஸ்வரர் கோயில் கோபுரங்களில் ஒன்று]]
[[படிமம்:Kapaleeswarar Gopuram.jpg|thumb|200px|கபாலீஸ்வரர் கோயில் கோபுரங்களில் ஒன்று]]
தமிழ் நாட்டின் தலைநகரமான [[சென்னை]]யில் உள்ள [[மயிலாப்பூர்]] பகுதியில் புகழ் பெற்ற '''கபாலீஸ்வரர் கோயில்''' அமைந்துள்ளது. இங்கே சிவன், கபாலீஸ்வரர் என்ற பெயரிலும், சக்தியான உமாதேவியார், கற்பகவல்லி என்னும் பெயரிலும் வணங்கப் படுகிறார்கள். இன்று இருக்கும் கோயில் தற்போது உள்ள இடத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. பிற்காலத் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், [[திருக்குளம்]] முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
தமிழ் நாட்டின் தலைநகரமான [[சென்னை]]யில் உள்ள [[மயிலாப்பூர்]] பகுதியில் புகழ் பெற்ற '''கபாலீஸ்வரர் கோயில்''' அமைந்துள்ளது. இங்கே சிவன், கபாலீஸ்வரர் என்ற பெயரிலும், சக்தியான உமாதேவியார், கற்பகவல்லி என்னும் பெயரிலும் வணங்கப் படுகிறார்கள். இன்று இருக்கும் கோயில் தற்போது உள்ள இடத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. கபாலீஸ்வரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், [[திருக்குளம்]] முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.


==வரலாறு==
==வரலாறு==

10:55, 20 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Kapaleeswarar Gopuram.jpg
கபாலீஸ்வரர் கோயில் கோபுரங்களில் ஒன்று

தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் புகழ் பெற்ற கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கே சிவன், கபாலீஸ்வரர் என்ற பெயரிலும், சக்தியான உமாதேவியார், கற்பகவல்லி என்னும் பெயரிலும் வணங்கப் படுகிறார்கள். இன்று இருக்கும் கோயில் தற்போது உள்ள இடத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. கபாலீஸ்வரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

வரலாறு

இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீஸ்வரர் கோயில் மிகவும் வழமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீஸ்வரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.

ஐதீகங்கள்

திருஞானசம்பந்தர் வாழ்ந்தகாலத்திலே, சிவனேசச் செட்டியார் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் மரணமாகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, செட்டியார் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீஸ்வரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் ஐதீகம். இன்றைய கபாலீஸ்வரர் கோயிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருப்பதைக் காணமுடியும். இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான சிலைகள் மூலம் விளக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.