சுந்தரம் பாலச்சந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16: வரிசை 16:
'''சுந்தரம் பாலச்சந்தர் ''' (Sundaram Balachander, சனவரி 18, 1927 – ஏப்ரல் 13, 1990), ஓர் சிறந்த [[வீணை]] கலைஞராகவும் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களை]] இயக்கிய [[திரைப்பட இயக்குனர்|இயக்குனராகவும்]] பெயர் பெற்றவர். [[சென்னை]]யில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்பட்டுத்தினார். தாமியக்கியத் திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்.
'''சுந்தரம் பாலச்சந்தர் ''' (Sundaram Balachander, சனவரி 18, 1927 – ஏப்ரல் 13, 1990), ஓர் சிறந்த [[வீணை]] கலைஞராகவும் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களை]] இயக்கிய [[திரைப்பட இயக்குனர்|இயக்குனராகவும்]] பெயர் பெற்றவர். [[சென்னை]]யில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்பட்டுத்தினார். தாமியக்கியத் திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்.
==குடும்பமும் இளமையும்==
==குடும்பமும் இளமையும்==
பாலச்சந்தர் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரின்]] ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவரது அண்ணன் ராஜமும் புகழ்பெற்ற கருநாடக இசை பாடகரும் ஆசிரியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி [[சிவகவி]] என்ற திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.
பாலச்சந்தர் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரின்]] ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவரது அண்ணன் [[சு. ராஜம்|ராஜமும்]] புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி [[சிவகவி]] என்ற திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.


தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். [[கஞ்சிரா]]வில் பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் [[தபலா]], [[மிருதங்கம்]], [[ஆர்மோனியம்]], [[புல்புல்தாரா]], [[தில்ருபா]] மற்றும் [[செனாய்]] இசைக்கருவிகளை கற்றார்.
தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். [[கஞ்சிரா]]வில் பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் [[தபலா]], [[மிருதங்கம்]], [[ஆர்மோனியம்]], [[புல்புல்தாரா]], [[தில்ருபா]] மற்றும் [[செனாய்]] இசைக்கருவிகளை கற்றார்.

12:51, 22 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

சுந்தரம் பாலச்சந்தர்
பிறப்புசனவரி 18, 1927
இறப்புஏப்ரல் 13, 1990
பணிவீணை கலைஞர், இயக்குனர்
விருதுகள்பத்ம பூசன்

சுந்தரம் பாலச்சந்தர் (Sundaram Balachander, சனவரி 18, 1927 – ஏப்ரல் 13, 1990), ஓர் சிறந்த வீணை கலைஞராகவும் தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய இயக்குனராகவும் பெயர் பெற்றவர். சென்னையில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்பட்டுத்தினார். தாமியக்கியத் திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்.

குடும்பமும் இளமையும்

பாலச்சந்தர் தஞ்சாவூரின் ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவரது அண்ணன் ராஜமும் புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி சிவகவி என்ற திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.

தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். கஞ்சிராவில் பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் தபலா, மிருதங்கம், ஆர்மோனியம், புல்புல்தாரா, தில்ருபா மற்றும் செனாய் இசைக்கருவிகளை கற்றார்.

பணிவாழ்வு

தமது பன்னிரெண்டாவது அகவையிலேயே பாலச்சந்தர் சிதார் இசைப்பதில் தனிக் கச்சேரி நடத்துமளவு திறமை பெற்றார். பதினைந்து முதல் பதினெட்டு வயதிலேயே சென்னை அகில இந்திய வானொலியில் ஊதியம் பெறும் கலைஞராக பணியாற்றினார். விரைவிலேயே வீணை இசைப்பதில் நாட்டம் கொண்டு முழுநேரத்தையும் அதற்கே செலவிடலானார். இரண்டாண்டுகளில் எந்த ஆசிரியத் துணையுமின்றி கச்சேரி நடத்துமளவிற்கு பயிற்சி பெற்றார். குருவின் தாக்கமில்லாது இவரது பாணி தனித்துவமிக்கதாக அமைந்திருந்தது[1].கருநாடக இசை தவிர இந்துத்தானி இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

திரைப்படங்களிலும் திரைக்கதை, இசையமைப்பு, பாடல்களை தாமே மேற்கொண்டு இயக்கத்தையும் கவனித்தார். இவரது கலைச்சேவைகளுக்காக 1962ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது. [2]

திரைப்படங்கள்

1932ஆம் ஆண்டில் ஒரு குழந்தை நட்சத்திரமாக "சீதா கல்யாணம்" என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து "ரிஷயசிருங்கர்" (1934), "ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்" (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: தேவகி (1951), ராஜாம்பாள் (1951), ராணி (1952), இன்ஸ்பெக்டர் (1953), பெண் (1954), கோடீஸ்வரன் (1955), டாக்டர் சாவித்திரி (1955) மற்றும் மரகதம் (1959).

திரைப்படங்களில் நடித்ததுடன் 1960களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். இது நிஜமா (1948), என் கணவர் (1948), கைதி (1951), அவனா இவன்? (1962), பொம்மை (1964) மற்றும் நடு இரவில் (1965) போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணி பாடகர், இயக்கம் என பல துறைகளில்ம் பங்களித்திருந்தார். அவர் இயக்கிய அந்த நாள் (1954) எந்தவொரு பாடலுமின்றி ஓர் முன்னோடித் திரைப்படமாக விளங்கியது.

எதி நிஜம் (1956) என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.[3]

மேற்கோள்கள்

  1. Liner notes. Nonsuch Explorer Series LP, 7/2003 "The Music Of South India", 1960s.
  2. "Padma Awards". Ministry of Communications and Information Technology (India). பார்க்கப்பட்ட நாள் 2009-06-10.
  3. Edi Nijam in Naati 101 Chitralu, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2006; pp: 134-5.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரம்_பாலச்சந்தர்&oldid=959104" இலிருந்து மீள்விக்கப்பட்டது