தேடுபொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: mk:Пребарувач
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: xmf:ოგორალი სისტემა
வரிசை 95: வரிசை 95:
[[uz:Veb qidiruv tizimi]]
[[uz:Veb qidiruv tizimi]]
[[vi:Máy truy tìm dữ liệu]]
[[vi:Máy truy tìm dữ liệu]]
[[xmf:ოგორალი სისტემა]]
[[yi:זוכמאשין]]
[[yi:זוכמאשין]]
[[zh:搜索引擎]]
[[zh:搜索引擎]]

16:15, 12 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

கூகிள் தேடல்
படிமம்:Alphasearch.PNG
யாஹூ!வின் சோதனையில் இருக்கும் ஆல்பாத் தேடல் http://au.alpha.yahoo.com

தேடுபொறி அல்லது தேடற்பொறி என்பது ஒர் கணினி நிரலாகும். இது இணையத்தில் குவிந்து கிடக்கும் தகவல்களில் இருந்தோ கணினியில் இருக்கும் தகவல்களில் இருந்தோ நமக்கு தேவையான தகவலைப்பெற உதவுகின்றது. பொதுவாகப் பாவனையாளர்கள் ஓர் விடயம் சம்பந்தமாக தேடுதலை ஓர் சொல்லைவைத்து தேடுவார்கள். தேடு பொறிகள் சுட்டிகளைப் பயன்படுத்தி விரைவான தேடலை மேற்கொள்ளும். தேடுபொறிகள் என்பது பொதுவாக இணையத் தேடுபொறிகளை அல்லது இணையத் தேடற்பொறிகளையே குறிக்கும். வெறுசில தேடுபொறிகள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். இணைய தேடு பொறிகள் பல பில்லியன் பக்கங்களில் இருந்து நமக்குத் தேவையன மிகப் பொருத்தமான பக்கங்களைத் தேடித் தரும்.

வேறுசில தேடற்பொறிகள் செய்திக் குழுக்கள், தகவற்தளங்கள், திறந்த இணையத்தளங்களைப் பட்டியலிடும் DMOZ.org போன்ற இணையத் தளங்களைத் தேடும். மனிதர்களால் எழுதப்பட்ட இணையத் தளங்களைப் பட்டியலிடும் தளங்களைப் போன்றல்லாது தேடு பொறிகள் அல்கோரிதங்களைப் பாவித்துத் தேடல்களை மேற்கொள்ளும். வேறு சில தேடற்பொறிகளோ தமது இடைமுகத்தை வழங்கினாலும் உண்மையில் வேறுசில தேடுபொறிகளே தேடலை மேற்கொள்ளும்.

ஆரம்ப காலத்தில் ASCII முறை வரியுருக்களை கொண்டே தேடு சொற்களை உள்ளிட முடிந்தது. தற்போது ஒருங்குறி எழுத்துக்குறிமுறையை பல தேடுபொறிகளும் ஆதரிப்பதால் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் அவ்வம் மொழிப்பக்கங்களை தேடிப்பெறக்கூடியதாகவுள்ளது.

எவ்வாறு தேடு பொறிகள் வேலை செய்கின்றன

  1. இணையத்தில் தவழ்தல்
  2. சுட்டியிடுதல்
  3. தேடுதல்

தேடு பொறிகள் வையக வலையில் அல்லது உலகளாவிய வலைப் பக்கங்களில் இருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்களைச் சேமித்தே தேடல்களை மேற்கொள்ளுகின்றன. இவை இணையப் பக்கங்களை தவழ்வதால் (சில சமயங்களில் சிலந்திகள் என்று அழைக்கப் படுகின்றன) குறிப்பிடப் பட்ட பக்கங்களின் ஒவ்வோர் இணைப்பிற்கும் இவை செல்லும். சில சமயங்களில் சில பக்கங்களைத் தவிர்ப்பதற்கு ரோபோக்கள் முடிவு செய்யும். அவை இணையப் பக்கங்களை அலசி ஆராய்ந்து அவை எவ்வாறு சுட்டியிடப் படும் எனத் தீர்மானிக்கப்படும். கூகிள் போன்ற சில தேடுபொறிகள் முழுப்பக்கத்தையோ அல்லது பகுதியையோ சேமித்துக் கொள்ளும்.

தேடல்களை மேற்கொள்ளல்

தேடுபொறிகளில் தேடும்பொழுது ஒருங்குறியில் உள்ள சொற்களை இட்டுத் தேடலாம். யாஹூ! தேடல்களில் தேடல்களைத் தட்டச்சுச் செய்யும் பொழுதே நீங்கள் என்ன விடயத்தைத் தேட முற்படுகின்றீர்கள் என்று ஊகித்து ஆலோசனைகளை வழங்கும் இதே வசதி கூகிளிலும் பரீட்சாத்தகரமாக உள்ளது. ஓர் குறிப்பிட்ட தளத்தைத் தேடவிரும்புகின்றீர்கள் என்றால் தேடுபொறி site:ta.wikipedia.org என்றவாறு உள்ளீடு செய்தால் தமிழ் விக்கிபீடியாவில் உள்ள தேடுபொறி தொடர்பான கட்டுரைகளைத் தேடிக்கொள்ளும்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடுபொறி&oldid=950665" இலிருந்து மீள்விக்கப்பட்டது