மீட்பு (கிறித்தவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13: வரிசை 13:
உலகின் பல்வேறு பகுதிகளிலும், கடவுளின் மீட்பைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தோன்றின. ''"கடவுள் மனிதராகப் பிறக்க வேண்டும், மானிடருக்கு ஒழுக்கத்தை போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், மானிடரின் பாவங்களுக்கு பரிகாரமாக தனது உயிரையே பலியாக கையளிக்க வேண்டும்"'' என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
உலகின் பல்வேறு பகுதிகளிலும், கடவுளின் மீட்பைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தோன்றின. ''"கடவுள் மனிதராகப் பிறக்க வேண்டும், மானிடருக்கு ஒழுக்கத்தை போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், மானிடரின் பாவங்களுக்கு பரிகாரமாக தனது உயிரையே பலியாக கையளிக்க வேண்டும்"'' என்று மக்கள் எதிர்பார்த்தனர்.


கடவுள் தமது மீட்புத் திட்டத்தை ஆபிரகாம் வழியாக வெளிப்படுத்தினார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, ''"உலகின் அனைத்து இனத்தவரும் உன் '''வழிமரபின்''' மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்"'' என்றார்.
கடவுள் தமது மீட்புத் திட்டத்தை [[இசுரவேலர்|இஸ்ரயேலரின்]] குலமுதுவராகிய [[ஆபிரகாம்]] வழியாக செயல்படுத்த விரும்பினார். அவரது வழிமரபிலேயே '''உலக மீட்பர்''' தோன்றுவார் என்பதை ஆபிரகாமுக்கு தமது [[தேவதூதர்]] வழியாக முன்னறிவித்தார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, ''"உலகின் அனைத்து இனத்தவரும் உன் '''வழிமரபின்''' மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்"'' என்றார்.<ref>'''[[தொடக்க நூல்]] 22:18'''</ref> அதன் பிறகு இஸ்ரயேலில் தோன்றிய [[இறைவாக்கினர்]] பலரும், மீட்பரைப் பற்றி முன்னறிவித்து கடவுளின் வருகைக்காக உலகைத் தயார் செய்தனர்.


==மீட்பராம் கடவுள்==
==மீட்பராம் கடவுள்==

13:21, 29 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

கிறிஸ்தவ சமயத்தைப் பொறுத்தவரை, மீட்பு என்னும் சொல் பாவத்தில் இருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கிறது. உலக மக்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்கவே, மகனாகிய கடவுள் இவ்வுலகில் மனிதராகத் தோன்றினார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம், கடவுளின் மீட்புத் திட்டத்தைப் பற்றிய செய்திகளையேக் கொண்டிருக்கிறது.

உலகத்தில் பாவம்

விவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்க நூல், உலகில் பாவம் நுழைந்த விதத்தை கதை வடிவில் உருவகமாக விவரிக்கிறது. தொடக்கத்தில் கடவுள் தமது உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்து, உலகில் உள்ள அனைத்தின் மீதும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.[1] இவ்வுலகில் கடவுளுக்குரிய பராமரிப்பு பணிகளை செய்ய, மானிடருக்கு அனைத்து விதத்திலும் கடவுள் சுதந்திரம் அளித்திருந்தார். மானிடரின் சுதந்திரத்தை சோதித்துப் பார்க்கும் விதத்தில், ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ண கடவுள் தடை விதித்தார்.[2] மனிதர் கடவுளைப் போன்று மாற விரும்பி,[3] கடவுளின் கட்டளையைப் புறக்கணித்து பாவம் செய்தனர்.[4]

இக்கதை பின்வரும் கருத்தை உணர்த்துகிறது:

"கடவுளால் அவரது பணி செய்யப் படைக்கப்பட்ட மானிடர், உலகப் பொருட்களால் மயங்கி கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்தனர். அதன் விளைவாக, மானிடருக்கு மீட்பு தேவைப்பட்டது. எனவே உலக மீட்பருக்காக ஏங்குமாறு, மானிடரின் உள்ளங்கள் அகத்தூண்டுதல் பெற்றன."

இக்கதையை உண்மைச் சம்பவமாகக் கருதிய தொடக்கக்கால கிறிஸ்தவ அறிஞர்கள், பாம்பின் வடிவத்தில் வந்தது அலகையே என்றும், அலகையின் பேச்சை நம்பியே மானிடர் ஏமாந்ததாகவும் விளக்கம் அளித்தனர். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்று கூறியதை,[5] மீட்பருக்கான வாக்குறுதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இதில் பாம்பு அலகையையும், பெண் புதிய ஏவாளாகிய மரியாவையும், அலகையின் தலையைக் காயப்படுத்தும் பெண்ணின் வித்து இயேசு கிறிஸ்துவையும் குறித்து நிற்கின்றன.

மீட்புத் திட்டம்

உலகின் பல்வேறு பகுதிகளிலும், கடவுளின் மீட்பைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தோன்றின. "கடவுள் மனிதராகப் பிறக்க வேண்டும், மானிடருக்கு ஒழுக்கத்தை போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், மானிடரின் பாவங்களுக்கு பரிகாரமாக தனது உயிரையே பலியாக கையளிக்க வேண்டும்" என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

கடவுள் தமது மீட்புத் திட்டத்தை இஸ்ரயேலரின் குலமுதுவராகிய ஆபிரகாம் வழியாக செயல்படுத்த விரும்பினார். அவரது வழிமரபிலேயே உலக மீட்பர் தோன்றுவார் என்பதை ஆபிரகாமுக்கு தமது தேவதூதர் வழியாக முன்னறிவித்தார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, "உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.[6] அதன் பிறகு இஸ்ரயேலில் தோன்றிய இறைவாக்கினர் பலரும், மீட்பரைப் பற்றி முன்னறிவித்து கடவுளின் வருகைக்காக உலகைத் தயார் செய்தனர்.

மீட்பராம் கடவுள்

இயேசுவே மீட்பர்

ஆதாரங்கள்

  1. தொடக்க நூல் 1:26 'அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.'
  2. தொடக்க நூல் 2:16-17 'ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்" என்று கட்டளையிட்டுச் சொன்னார்.'
  3. தொடக்க நூல் 3:5 'பாம்பு பெண்ணிடம், "நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள்" என்றது.'
  4. தொடக்க நூல் 3:6 'பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள்.'
  5. தொடக்க நூல் 3:15
  6. தொடக்க நூல் 22:18
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீட்பு_(கிறித்தவம்)&oldid=940371" இலிருந்து மீள்விக்கப்பட்டது