இறையரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21: வரிசை 21:


==கிறிஸ்தவ நம்பிக்கை==
==கிறிஸ்தவ நம்பிக்கை==
[[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் தனிப்பட்ட மறைநூலான [[புதிய ஏற்பாடு]] கடவுளின் அரசை வரவிருக்கும் அரசாக மட்டுமே குறிப்பிடுகிறது. இறையாட்சி [[இயேசு கிறித்து|இயேசு]]வின் காலத்திலேயே வந்துவிட்டது<ref>'''[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 1:15''' "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்"</ref> என்றாலும், அதன் முழுமை உலகத்தின் முடிவிலேயே நிறைவுபெறும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. உலகின் முடிவில், கிறிஸ்து அரசருக்குரிய மாட்சியுடன் மீண்டும் வரும் நாளில் என்றென்றும் நிலைக்கும் இறையாட்சி செயலாக்கம் பெறும். பின்வரும் பகுதிகள் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை விவரிக்கின்றன:
[[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் தனிப்பட்ட மறைநூலான [[புதிய ஏற்பாடு]] கடவுளின் அரசை வரவிருக்கும் அரசாக மட்டுமே குறிப்பிடுகிறது. இறையாட்சி [[இயேசு கிறித்து|இயேசு]]வின் காலத்திலேயே வந்துவிட்டது<ref>'''[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 1:15''' "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது."</ref> என்றாலும், அதன் முழுமை உலகத்தின் முடிவிலேயே நிறைவுபெறும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கடவுளின் வழிகளில் இருந்து விலகி, [[மகனாகிய கடவுள்|இறைமகனை]]ப் புறக்கணித்த [[இசுரவேலர்|இஸ்ரயேலரிடம்]] இருந்து இறையாட்சி பறிக்கப்பட்டு, கடவுளுக்கு உண்மையாக நடக்கும் வேறொரு மக்கள் இனத்திடம் இறையாட்சி ஒப்படைக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்தார்.'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 21:43''' "உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்."</ref> உலகின் முடிவில், கிறிஸ்து அரசருக்குரிய மாட்சியுடன் மீண்டும் வரும் நாளில் என்றென்றும் நிலைக்கும் இறையாட்சி செயலாக்கம் பெறும். பின்வரும் பகுதிகள் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை விவரிக்கின்றன:


*
*


*
*

13:04, 27 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இறையரசு அல்லது இறையாட்சி என்பது கடவுளின் ஆட்சியைக் குறிக்க விவிலியத்தில் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இதை விண்ணக இறைவனின் அரசு என்ற பொருளில் விண்ணரசு என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது. விண்ணகம் வாழும் கடவுளின் அரசு, இந்த மண்ணகத்தில் மலர வேண்டும் என்பதே கிறிஸ்தவர்களின் எதிர்நோக்கு.

கடவுளின் ஆட்சி

கடவுளின் ஆட்சியைக் குறித்த நம்பிக்கைகள், ஆபிரகாமிய சமயங்களான யூதம், கிறிஸ்தவம் ஆகியவற்றின் மறைநூல்களில் காணப்படுகின்றன.

யூதர்களின் நம்பிக்கை

கடவுளின் நிலையான ஆட்சி பற்றி பழைய ஏற்பாட்டின் பலப் பகுதிகள் பின்வருமாறு விவரிக்கின்றன:

  • தோபித்து நூல்: "என்றும் வாழும் கடவுள் போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்: இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை."[1]
  • யோபு நூல்: "ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன; அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டுவார்."[2]
  • திருப்பாடல்கள் நூல்: "அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்."[3] "இறைவனே, என்றுமுளது உமது அரியணை; உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்."[4] "ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்; பூவுலகை அவர் நிலையப்படுத்தினார்; அது அசைவுறாது."[5]

கடவுளின் வரவிருக்கும் அரசைப் பற்றி, பழைய ஏற்பாட்டில் காணப்படும் செய்திகள் பின்வருமாறு:

  • எசாயா நூல்: "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்: படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்" [6]
  • தானியேல் நூல்: "விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்." [7] "வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது." [8]

கிறிஸ்தவ நம்பிக்கை

கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட மறைநூலான புதிய ஏற்பாடு கடவுளின் அரசை வரவிருக்கும் அரசாக மட்டுமே குறிப்பிடுகிறது. இறையாட்சி இயேசுவின் காலத்திலேயே வந்துவிட்டது[9] என்றாலும், அதன் முழுமை உலகத்தின் முடிவிலேயே நிறைவுபெறும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கடவுளின் வழிகளில் இருந்து விலகி, இறைமகனைப் புறக்கணித்த இஸ்ரயேலரிடம் இருந்து இறையாட்சி பறிக்கப்பட்டு, கடவுளுக்கு உண்மையாக நடக்கும் வேறொரு மக்கள் இனத்திடம் இறையாட்சி ஒப்படைக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்தார்.மத்தேயு 21:43 "உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்."</ref> உலகின் முடிவில், கிறிஸ்து அரசருக்குரிய மாட்சியுடன் மீண்டும் வரும் நாளில் என்றென்றும் நிலைக்கும் இறையாட்சி செயலாக்கம் பெறும். பின்வரும் பகுதிகள் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை விவரிக்கின்றன:

ஆதாரங்கள்

  1. தோபித்து 13:2
  2. யோபு 25:2
  3. திருப்பாடல்கள் 22:28
  4. திருப்பாடல்கள் 45:6
  5. திருப்பாடல்கள் 93:1
  6. எசாயா 9:6-7
  7. தானியேல் 2:44
  8. தானியேல் 7:13-14
  9. மாற்கு 1:15 "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது."

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறையரசு&oldid=938504" இலிருந்து மீள்விக்கப்பட்டது