பன்னாட்டு வேதியியல் ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: th:ปีสากลแห่งเคมี
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:سال جهانی شیمی
வரிசை 21: வரிசை 21:
[[en:International Year of Chemistry]]
[[en:International Year of Chemistry]]
[[es:Año Internacional de la Química]]
[[es:Año Internacional de la Química]]
[[fa:سال جهانی شیمی]]
[[fr:Année internationale de la chimie]]
[[fr:Année internationale de la chimie]]
[[is:Alþjóðlegt ár efnafræðinnar]]
[[is:Alþjóðlegt ár efnafræðinnar]]

09:15, 20 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

logo

ஐக்கிய நாடுகள், 2011 ஆம் ஆண்டை வேதியியலுக்கான அனைத்துலக ஆண்டு என அறிவித்தது. வேதியியலின் சாதனைகளையும், மனிதகுலத்துக்கு அதன் பங்களிப்பையும் நினைவு கூர்வதே இந்த அனைத்துலக ஆண்டின் நோக்கம். 2008 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபையினால் முறையாக வெளியிடப்பட்டது. தூய மற்றும் பயன்பாட்டு வேதியியலுக்கான அனைத்துலக ஒன்றியமும் யுனெசுக்கோவும் இது தொடர்பான நிகழ்வுகளின் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பானவை.

பின்னணி

2011 ஆம் ஆண்டை வேதியியலுக்கான அனைத்துலக ஆண்டாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை எத்தியோப்பியாவும் மேலும் 23 நாடுகளும் கூட்டாக முன்வைத்தன. இதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் பேண்தகு வளர்ச்சிக்கான கல்விக்கான பத்தாண்டு (2005 - 2014) இலக்குகளை அடைவதில் வேதியியலின் பங்களிப்பு எடுத்துக்காட்டப்பட்டது.

நோக்கம்

வேதியியல் தொடர்பான விழிப்புணர்வைப் பொது மக்களிடையே வளர்ப்பது, இளைஞர்களை இத்துறையின்பால் கவர்வது ஆகியவற்றுடன், உலகின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வேதியியலின் பங்கை எடுத்துக்காட்டுவதும் வேதியியலுக்கான அனைத்துலக ஆண்டின் நோக்கங்கள் ஆகும்.

நிகழ்வுகள்

உலகம் முழுவதிலும், நாடுகள் மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டன. அமெரிக்க வேதியியல் சங்கம், வேதியியலுக்கான அரச சங்கம், வேதியியல் தொழிற்றுறைச் சங்கம், அரச ஆசுத்திரேலிய வேதியியல் நிறுவனம் போன்ற தேசிய அமைப்புக்களும், வேதியியலுக்கும் மூலக்கூற்று அறிவியல்களுக்குமான ஐரோப்பிய சங்கம் போன்ற பிரதேசக் கூட்டமைப்புக்களும் தமது பகுதிகளில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தன.

இவற்றையும் பார்க்கவும்