வங்காளதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: km:បង់ក្លាដែស្ស
சி r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:बंगलादेश
வரிசை 176: வரிசை 176:
[[ko:방글라데시]]
[[ko:방글라데시]]
[[krc:Бангладеш]]
[[krc:Бангладеш]]
[[ks:बंगलादेश]]
[[ku:Bangladeş]]
[[ku:Bangladeş]]
[[kv:Бангладеш]]
[[kv:Бангладеш]]

23:26, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

வங்காளத்தேச மக்கள் குடியரசு
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
கணப்பிரஜாதந்திரி பாங்க்லாதேஷ்
கொடி of வங்காளத்தேசம்
கொடி
சின்னம் of வங்காளத்தேசம்
சின்னம்
நாட்டுப்பண்: அமர் சோனர் பங்களா
என் தங்கமான வங்காளம்
வங்காளத்தேசம்அமைவிடம்
தலைநகரம்தாக்கா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)வங்காளம்
மக்கள்வங்காளத்தேசர்
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு[1]
ஜுலூர் இரகுமான்
சேக் அசீனா
• முதன்மை உசாவுதுணை
அப்துல் ஹமீது
விடுதலை 
• கூற்றம்
மார்ச் 26 1971
திசம்பர் 16 1971
பரப்பு
• மொத்தம்
147,570 km2 (56,980 sq mi) (94ஆவது)
• நீர் (%)
7.0
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
150,448,340[2] (7ஆவது)
• அடர்த்தி
1,045/km2 (2,706.5/sq mi) (11ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2008 IMF[3] மதிப்பீடு
• மொத்தம்
$222.4 பில்லியன் (48ஆவது)
• தலைவிகிதம்
$1,374 (148vவது)
ஜினி (2000)31.8
மத்திமம்
மமேசு (2007) 0.547
Error: Invalid HDI value · 140ஆவது
நாணயம்வங்காளத்தேசத் தாக்கா (BDT)
நேர வலயம்ஒ.அ.நே+6 (BDT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+6 (இல்லை)
அழைப்புக்குறி880
இணையக் குறி.bd
  1. Adjusted population, p.4, "Population Census 2001, Preliminary Report". Bangladesh Bureau of Statistics. 2001-08. {{cite web}}: Check date values in: |date= (help)

வங்காளத்தேசம் (Bangladesh) ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது.

இந்நாட்டின் எல்லைகள் 1947ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது. 1947 ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின், இப்பகுதி கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயரில் பாக்கிஸ்தான் நாட்டின் பகுதியாக‌ இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாக்கிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர். மேற்கு பாக்கிஸ்தானுக்கும் கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக் கொண்டு வங்காளத் தேசம் என்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின், வங்காள தேசம், ஏழ்மை, இயற்கை அழிவுகள், பஞ்சம் ஆகிய பல இன்னல்களை மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் இராணுவ ஆட்சி, பேச்சுரிமை மறுக்கப்பட்ட நிலை, ஊழல் போன்ற பல துயர்களைக் கடந்து வந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மீண்டும் மக்களாட்சி மலந்துள்ள நிலையில் சிறிதளவு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

வரலாறு

புராதன காலத்தில் இந்தியாவில் காணப்பட்ட பதினாறு பெருங்குடியேற்றங்களுள் ஒன்றான வங்காளம் எனும் பெயரில் இது அறியப்பட்டது. இங்கு 12ம் நூற்றாண்டில் இஸ்லாம் மதம் பரவியது. துருக்கியத் தளபதியான பக்தியார் கில்ஜி இந்து மன்னனான லக்ஷ்மண் சேன் என்பவரைத் தோற்கடித்து வங்காளத்தின் பெரும் பகுதியையும் கைப்பற்றினார். பிற்பாடு இது முகலாயர் வசமானது.

1757 பிளாசிப் போரில் பிரிட்டிஷார் வங்காளத்தைக் கைப்பற்றினர். 1905ல் வங்காளத்தை இரண்டாகப் பிரிக்கும் பிரிட்டிஷாரின் முயற்சியால் இந்திய சுதந்திரப் போராட்டம் மேலும் வலுப்பெற்றது. இந்தியப்பிரிவினையை அடுத்து இஸ்லாமியப் பெரும்பான்மை கொண்ட கிழக்கு வங்காளம் கிழக்குப் பாகிஸ்தான் எனும் பெயரில் பாகிஸ்தானின் ஒரு பகுதியானது.

1954ல் உருது மொழியே நாட்டின் அதிகாரபூர்வ ஆட்சிமொழி என்ற பாகிஸ்தானின் அறிவிப்புக்கு எதிராக வங்காளியை கிழக்குப் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக்க வேண்டி மொழி இயக்கம் போராட்டத்தில் இறங்கியது.

1970-71 பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானில் அவாமி லீக் பெரும் வெற்றியீட்டியது. எனினும் பாகிஸ்தான் பிரதமர் யாஹியா கான் பாராளுமன்றத்தைக் கலைத்ததையடுத்து நாட்டில் பெரும் கலவரம் தலைவிரித்தாடியது. இதனையடுத்து கிழக்கு பாகிஸ்தானின் தலைநகரான டாக்காவின் மீது பாகிஸ்தான் ராணுவம் ”ஒப்பரேஷன் சேர்ச்லைட்” எனும் பெயரில் இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொண்டது.

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட ”முக்திவாஹினி” என்ற அமைப்பு பாகிஸ்தான் ராணுவத்துடன் கடுமையாகப் போராடியது. இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். 1971 டிசம்பர் 7ம் திகதி இந்தியா நேரடியாக பாகிஸ்தான் ராணுவத்துடன் மோதியது. 1972 ஜனவரி 11ல் கிழக்கு பாகிஸ்தான் ” பங்களாதேசம் எனும் பெயரில் புதிய நாடாக உருப் பெற்றது.

மேற்கோள்கள்

  1. Constitution of Bangladesh, Part V, Chapter 1, Article 66.
  2. CIA World Factbook 2007
  3. "Gross domestic product based on purchasing-power-parity (PPP) valuation of country GDP". World Economic Outlook Database (in English). International Monetary Fund. April 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29. {{cite web}}: Cite has empty unknown parameters: |month= and |coauthors= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேசம்&oldid=920276" இலிருந்து மீள்விக்கப்பட்டது