பகீரா கிப்லிங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: nl:Bagheera kiplingi
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: es:Bagheera kiplingi
வரிசை 39: வரிசை 39:
[[en:Bagheera kiplingi]]
[[en:Bagheera kiplingi]]
[[eo:Bagheera kiplingi]]
[[eo:Bagheera kiplingi]]
[[es:Bagheera kiplingi]]
[[fi:Bagheera kiplingi]]
[[fi:Bagheera kiplingi]]
[[fr:Bagheera kiplingi]]
[[fr:Bagheera kiplingi]]

22:15, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பகீரா கிப்லிங்கி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Dendryphantinae
பேரினம்:
இனம்:
B. kiplingi
இருசொற் பெயரீடு
பகீரா கிப்லிங்கி
Peckham & Peckham, 1896[1]

பகீரா கிப்லிங்கி (Bagheera kiplingi) என்பது மெக்சிக்கோ, கொஸ்டா ரிக்கா, குவாத்தமாலா உட்பட நடு அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை பாயும் சிலந்தி (jumping spider) வகை ஆகும். இச்சிலந்திகளின் உணவு வகை ஏனைய சிலந்திகளின் உணவு வகைகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றன. பொதுவாக சிலந்திகள் அனைத்தும் ஊனுண்ணிகள் ஆகும். இவை மட்டுமே தாவர உணவுகளை உண்ணும் சிலந்திகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது[2][3][4].

உணவு

பாயும் சிலந்திதேள் வகுப்பு வகுப்பைச் சேர்ந்த இவை 5-6 மிமீ நீளமானவை. புரதங்கள் நிறைந்த அக்காசியா வகைத் தாவரங்களின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலக்கியே வர வேண்டியிருக்கிறது.

இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக கொஸ்டா ரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் மீகன் என்பவரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 2009 இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கறி தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை பாயும் சிலந்திகளாதலால், தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை. அவ்வப்போது எறும்புகளால் அக்கேசியா தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றன. அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன. அக்காசியாக்கள் ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை[2][4].


மேற்கோள்கள்

  1. Platnick, Norman I. (2008): The world spider catalog, version 9.0. American Museum of Natural History.
  2. 2.0 2.1 Vegetarian spider, சயன்ஸ் நியூஸ் 174: 5.
  3. Exploitation of the Pseudomyrmex–Acacia mutualism by a predominantly vegetarian jumping spider (Bagheera kiplingi). The 93rd ESA Annual Meeting.
  4. 4.0 4.1 'Veggie' spider shuns meat diet, பிபிசி, அக்டோபர் 12, 2009

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகீரா_கிப்லிங்கி&oldid=920245" இலிருந்து மீள்விக்கப்பட்டது