பேச்சு:சொறி மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தலைப்பு பற்றி: வருந்துகிறேன், சிக்கல் தீர்ந்தது
சிNo edit summary
வரிசை 14: வரிசை 14:


:தவறுக்கு வருந்துகிறேன், சிங்கமுகன். மன்னியுங்கள். (நீங்கள் வேண்டுமென்றே மாற்றிச் சொல்வதாக நினைக்கவில்லை, முதல் பதிப்பு எங்கிருந்து வந்தது என அறிந்து கொள்ளவே கேட்டேன்.) முதலாவது பக்கத்தை உருவாக்கி அந்தச் சொல்லை இட்டதே [[பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்|நான் இயக்கிய தானியங்கிதான்]] என இப்போது அறிந்து கொண்டேன்! அதனால், இது தமிழ் இணையக்கழக அகரமுதலியில் இருந்து வந்துள்ள தகவல். இதுவே தொடரட்டும். அதுவே வழக்கிலும் இருக்கிறது என உறுதியாகத் தெரிந்தால் கூடுதல் மகிழ்ச்சி. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:02, 19 அக்டோபர் 2011 (UTC)
:தவறுக்கு வருந்துகிறேன், சிங்கமுகன். மன்னியுங்கள். (நீங்கள் வேண்டுமென்றே மாற்றிச் சொல்வதாக நினைக்கவில்லை, முதல் பதிப்பு எங்கிருந்து வந்தது என அறிந்து கொள்ளவே கேட்டேன்.) முதலாவது பக்கத்தை உருவாக்கி அந்தச் சொல்லை இட்டதே [[பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்|நான் இயக்கிய தானியங்கிதான்]] என இப்போது அறிந்து கொண்டேன்! அதனால், இது தமிழ் இணையக்கழக அகரமுதலியில் இருந்து வந்துள்ள தகவல். இதுவே தொடரட்டும். அதுவே வழக்கிலும் இருக்கிறது என உறுதியாகத் தெரிந்தால் கூடுதல் மகிழ்ச்சி. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:02, 19 அக்டோபர் 2011 (UTC)

நன்றிகள். நானும் அவ்வாறு நினைக்கவில்லை. எல்லாம் ஒரு நகைச்சேர்க்கவே. அன்புடன்.--[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 06:17, 19 அக்டோபர் 2011 (UTC)

06:17, 19 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
சொறி மீன் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு பற்றி

சொறிமுட்டை எனும் பெயர் வழக்கில் உள்ளது போல பெயர்க்காரணம் எழுதப்பட்டுள்ளது. இது வழக்கில் இருந்தால் சான்று எதுவும் உள்ளதா? கழகப் பேரகரமுதலியில் சொறி என அழைகப்படுவதாகத் தந்துள்ளார்கள். முட்டை எனும் ஒட்டு இது ஏதோ ஒரு வகை முட்டை என்பது போல மயக்கம் தருவதாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 13:38, 16 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

தமிழில் வழக்கத்தில் உள்ளதையே பெயராகக் கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் செல்லி மீன் என இருப்பதால் அதற்கு மாற்றாக மொழிப்பெயர்த்து தமிழிலும் அழைப்பது எங்ஙனம் பொருந்தும். காட்டாக Sea cow என்று அழைக்கப்படும் Dugong இன் தமிழ்ப்பெயர் கடற்பன்றி என்பதாகும். ஆனால் இன்று ஆங்கிலத்தில் என்ன வழங்குகின்றனரோ அதற்கு மாற்றக அப்படியே மொழிபெயர்த்து கடற்பசு என அழைப்பது பொருந்தாது என்பது என் தாழ்மையானக் கருத்து. தமிழகக் கடற்பகுதியில் காணப்படும் பெரும்பான்மையான உயிரினங்களுக்கு தமிழ்ப்பெயர் இருக்கிறது. இது இக்காலத்தில் மறைக்கப்பட்டுள்ளது அவ்வளவே. ஏன் பெரும்பான்மையான மக்கள் அறிந்திருக்கும் டால்பின் என்னும் பாலூட்டிக்கே தமிழில் பொமிகரா (Pomigra) என்னும் பெயர் 1850 முதல் மேற்கோள் உள்ளது. இந்திய மொழிகளிலேயே டால்பினின் பெயருக்கு மாற்று மொழியில் மேற்கோளிடப்பட்ட ஒரே மொழி தமிழாகும். உங்களுக்கு ஐயமிருப்பின் மேலே குறிப்பிட்ட அங்கிலப்பெயரை கூகுள் தேடலில் இட்டுப்பாருங்கள். முன்பு சொறிமுட்டை என்பதற்கு மேற்கோள் கொடுக்கப்படவில்லை. இப்போது கொடுத்திருக்கிறேன். மேலும் மேற்கோள் கொடுக்காமல் கட்டுரையை உருவாக்கியுள்ளேன். இன்னும் பதிவேற்றம் மீதம் உள்ளது.. அது கழிந்தவுடன் படிப்படியாக அதன் மேற்கோள்களையும் இடுகிறேன். அதற்கு சில காலம் பிடிக்கும். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:51, 16 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

சிங்கமுகன், நீங்கள் தந்துள்ள இணைப்பில் The Indian jelly fish, popularly known in Tamil as Muttai Chori belongs to the phylum Coelenterata, sub-phylum Medusozoa, class Scyphozoa, order Rhizostomeae, family Rhizostomatidae and genus Rhizostoma எனத் தரப்பட்டிருக்கிறது. Muttai Chori எப்படி சொறிமுட்டை ஆனது?--Kanags \உரையாடுக 21:26, 16 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

அது விக்சனரியால் ஆனது. விக்சனரியில் துலாவிய போது சொறிமுட்டை என்றே கிட்டியது. மேலும் அவர் முட்டை என்பது ஒட்டியதுப்போல் தோன்றியது என்றார். நான் அம்முட்டை நான் உருவாக்கவில்லை அது முன்னரே பயன்பாட்டில் உள்ளது என்பதற்காகவே அவ்விணைப்பை இட்டேன். நன்றிகளுடன்.--சிங்கமுகன் 09:43, 17 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

சிங்கமுகன், விக்சனரியில் இரு பக்கங்களில் சொறிமுட்டை என்பதை நீங்களே சேர்த்துள்ளீர்கள். காண்க: [1] [2]. ஆனால் இங்கு விக்சனரியில் துழாவியபோது கிடைத்ததாகச் சொல்கிறீர்கள். நீங்கள் அங்கு இந்தச் சொல்லை வேறு எந்தப் பக்கத்திலாவது பார்த்திருந்தீர்களா? (நீங்கள் சேர்த்திருக்கும் மேற்கோளை நான் இன்னும் பார்க்கவில்லை, அது தொடர்பில் சிறீதரன் கனகுவின் கேள்விக்கும் விடையளிக்க வேண்டுகிறேன். ஏற்கனவே வழக்குப்பெற்ற நல்ல தமிழ்ச் சொற்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதில் இங்குள்ள எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், புத்தாக்கங்களாக இருக்குமிடத்தில் பொருட்குற்றத்துடன் பதிந்துவிடக்கூடாது. -- சுந்தர் \பேச்சு 04:02, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

ஐயையோ நானும் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். மேலும் நீங்கள் முதலில் கொடுத்த தகவலை சொடுக்கிப் பாருங்கள். இதில் 30 சூலை 2010; இல் டமில்பாட் என்பவர் இதைத் திருத்தி இருப்பார். அதிலேயே சொறிமுட்டை என்பதுக் காணப்படுகிறது. அதில் விளக்கங்கள் மட்டும் தான் நான் எழுதி இருப்பேன். இரண்டாவது கொடுத்தத் தகவலில் தான் நான் பின்வரும் மூன்றுப் பெயர்களை முன்கொடுத்த இணைப்பில் இருப்பதுப் போலவே செர்த்திருப்பேன். நான் மாற்றிமாற்றிச் சொல்லலைங்க. நம்புங்க. நன்றிகளுடன்.--சிங்கமுகன் 05:53, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

தவறுக்கு வருந்துகிறேன், சிங்கமுகன். மன்னியுங்கள். (நீங்கள் வேண்டுமென்றே மாற்றிச் சொல்வதாக நினைக்கவில்லை, முதல் பதிப்பு எங்கிருந்து வந்தது என அறிந்து கொள்ளவே கேட்டேன்.) முதலாவது பக்கத்தை உருவாக்கி அந்தச் சொல்லை இட்டதே நான் இயக்கிய தானியங்கிதான் என இப்போது அறிந்து கொண்டேன்! அதனால், இது தமிழ் இணையக்கழக அகரமுதலியில் இருந்து வந்துள்ள தகவல். இதுவே தொடரட்டும். அதுவே வழக்கிலும் இருக்கிறது என உறுதியாகத் தெரிந்தால் கூடுதல் மகிழ்ச்சி. -- சுந்தர் \பேச்சு 06:02, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

நன்றிகள். நானும் அவ்வாறு நினைக்கவில்லை. எல்லாம் ஒரு நகைச்சேர்க்கவே. அன்புடன்.--சிங்கமுகன் 06:17, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சொறி_மீன்&oldid=903390" இலிருந்து மீள்விக்கப்பட்டது