சொறி மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 10: வரிசை 10:
'''சொறிமுட்டை''' (''Jellyfish''; [[மலையாளம்]]: കടൽച്ചൊറി, கடல்சொறி) என அழைக்கப்படும் உயிரினம் கடலில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வுயிர்கள் கடலுயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான படைப்பாகும். சொறிமுட்டைகள் இவ்வாழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலா அளவுக்கு அவை பரந்த நீர்நிலைகளில் காணக்கூடிய உயிராக இருக்கின்றன. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும் போது மிக அழகான உயிரினமாகவும் கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும் போது மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன. இதுவரை 2000க்கும் மேற்பட்ட சொறிமுட்டைச் சிற்றினங்கள் உலகில் அறியப்பட்டுள்ளன. இவை கடலின் கொடிய ஆழத்திலும் உலவும் பண்புள்ளதால் இன்னும் அனேக இனங்கள் அறியப்படாமல் இருக்கின்றன.

சொறிமுட்டை நிடேரிய (Cnidaria) உயிரினத்தொகுதியில் உறுப்பினராகவும், இத்தொகுதியிலேயே கடற்பவளங்களும் ([[பவளப் பாறைகள்]]), கடற்சாட்டைகளும் (Sea whip) மற்றும் [[கடற் சாமந்தி|கடற்சாமந்திகளும்]] வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுயிர்கள் நிடேரியத் தொகுதியில் காணப்படும் எளிமையான் முதுகெலும்பில்லாதவையும் அதே நேரத்தில் அதன் நகருந் தன்மை பிற உருப்பினர்களில் இருந்து மாறுபட்டும் இருக்கிறது.
சொறிமுட்டை நிடேரிய (Cnidaria) உயிரினத்தொகுதியில் உறுப்பினராகவும், இத்தொகுதியிலேயே கடற்பவளங்களும் ([[பவளப் பாறைகள்|பவழப்பாறைகள்]]), கடற்சாட்டைகளும் (Sea whip) மற்றும் [[கடற் சாமந்தி|கடற்சாமந்திகளும்]] வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுயிர்கள் நிடேரியத் தொகுதியில் காணப்படும் எளிமையான் முதுகெலும்பில்லாதவையும் அதே நேரத்தில் அதன் நகருந் தன்மை பிற உருப்பினர்களில் இருந்து மாறுபட்டும் இருக்கிறது.

இதன் உடற்தோற்றம் மைய அச்சிலிருந்து உடல் வட்டமாக வரையப்பட்டதைப் போன்றும் அவை சிறப்பான சமச்சீர்மையான நிலையில் காணக்கூடியதாக வுள்ளன. இதன் சமச்சீர்மையானத் தோற்றம் உடலின் எந்தப் பகுதியிலிருந்து இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலுடையவைகளாக இருக்கின்றன. இதன் உடலில் நரம்பு மண்டலங்கள் மட்டம் இருக்கின்றன. அவை ஒளி, மணம், அழுத்தம் மற்றும் புறத்தூண்டல்களை உணரும் நரம்பேற்பிகளை/உணர்வேற்பிகளை (nerve receptors) இருந்துவருகிறது. அதற்கு மூளைப் போன்று தனியமைப்புக் காணப்படுவதில்லை. இதன் உடலின் வெளிப்பகுதியாக புறத்தோல் (epidermis), உட்பகுதியாக குடற்தோல் (gastrodermis) என்னும் பகுதி குடற்பகுதிகளை போர்த்தியதுப் போலவும் காணப்படுகின்றன. புறத்தோலுக்கும் குடற்தோலுக்கும் இடைப்பட்டப் பகுதியாக அடர்ந்த, இழுவை வழவழப்புத்தன்மையுள்ள இடைப்பசை (mesoglea) பகுதிக் காணப்படுகிறது. இதன் உணவுமண்டலம் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டதுப்போல் தொண்டைப்பகுதி, இரைப்பை மற்றும் குடற்பகுதிகள் கொண்டதாக உள்ளது. ஒரு துவாரத்தின் முனையில் வாயும், பின்முனையில் குதமும் (anus) இடம் பெற்றுள்ளன. இவற்றுள் வாய்ப்பகுதியில் 4 - 8 வாய்க்கரங்கள்/வாய்நீட்சிகள் (oral arm) உணவை வாயினருகில் கொண்டுவருவதற்கு உணர்கொம்புகளுடன் (Tentacles) இணைந்து உதவுகிறது. இவ்வளவுப் பெற்றிருந்தும் இதன் மொத்த உடற்பகுதியில் 5% மே திடப்பொருளாகும் மீதியணைத்தும் திரவப்பொருளான நீரால் உருவாக்கப்பட்டவையாகும்.

வரிசை 30: வரிசை 30:
[[படிமம்:Chrysaora quinquecirrha.JPG|thumb|right|200px|]]
[[படிமம்:Chrysaora quinquecirrha.JPG|thumb|right|200px|]]

இதன் உணர்கொம்புகளின் கொத்தும் தன்மை பெரும்பான்மையாக வேண்டுமென்றே இருப்பதில்லை. அதன் உடலில் காணப்படும் தூரிகைப்போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமுட்டையைத் தூண்டி அதற்கு வினையான அவை கொத்துகின்றன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்கம் சில ஊறுகளையும், சில வலியையும் உண்டுச்செய்கின்றன. அதிலும் கடற்சாட்டை/கடற்குளவி (Sea wasp) சொறிமுட்டை மனிதர்களுக்கு மூச்சடைப்பு மட்டும் ஏற்படுத்தாமல் இதயத்தையும் செயலிழக்கச் செய்து மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளன.
இதன் உணர்கொம்புகளின் கொட்டும் தன்மை பெரும்பான்மையாக வேண்டுமென்றே இருப்பதில்லை. அதன் உடலில் காணப்படும் தூரிகைப்போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமுட்டையைத் தூண்டி அதற்கு வினையான அவை கொத்துகின்றன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்கம் சில ஊறுகளையும், சில வலியையும் உண்டுச்செய்கின்றன. அதிலும் கடற்சாட்டை/கடற்குளவி (Sea wasp) சொறிமுட்டை மனிதர்களுக்கு மூச்சடைப்பு மட்டும் ஏற்படுத்தாமல் இதயத்தையும் செயலிழக்கச் செய்து மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளன.
==வரலாறு==
==வரலாறு==
சொறிமுட்டைகள் பல காலங்களிலாக அறிஞர்களால் ஆயப்பட்டு வந்தாலும் இது பெரிதும் அறிவியல் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது அக்டோபர் 2007 ஆம் ஆண்டே. அப்போதுக் கண்டுபிடிக்கப்பட்ட சொறிமுட்டையின் புதைப்படிமங்கள் அதன் வரலாறை உலகிற்கு உணர்த்தியது. அவை 205 மில்லியன் ஆண்டுகளுக்குப் பழைமையானவை என்பது அறிவியல் உலகில் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் இன்றும் பல அறிய புதிய வகை சொறிமீன்கள் கண்டுப்பிடித்தவன்னம் இருக்கின்றன.

10:22, 17 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/மெடுசோசோஆ|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சொறிமுட்டை
புதைப்படிவ காலம்:505–0 Ma
Cambrian – Recent
அட்லாண்டிக் கடற்சொறிமுட்டை
கிரைசாஓரா குவின்குவேசிர்ரா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): மெடுசோசோஆ

சொறிமுட்டை (Jellyfish; மலையாளம்: കടൽച്ചൊറി, கடல்சொறி) என அழைக்கப்படும் உயிரினம் கடலில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வுயிர்கள் கடலுயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான படைப்பாகும். சொறிமுட்டைகள் இவ்வாழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலா அளவுக்கு அவை பரந்த நீர்நிலைகளில் காணக்கூடிய உயிராக இருக்கின்றன. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும் போது மிக அழகான உயிரினமாகவும் கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும் போது மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன. இதுவரை 2000க்கும் மேற்பட்ட சொறிமுட்டைச் சிற்றினங்கள் உலகில் அறியப்பட்டுள்ளன. இவை கடலின் கொடிய ஆழத்திலும் உலவும் பண்புள்ளதால் இன்னும் அனேக இனங்கள் அறியப்படாமல் இருக்கின்றன.

சொறிமுட்டை நிடேரிய (Cnidaria) உயிரினத்தொகுதியில் உறுப்பினராகவும், இத்தொகுதியிலேயே கடற்பவளங்களும் (பவழப்பாறைகள்), கடற்சாட்டைகளும் (Sea whip) மற்றும் கடற்சாமந்திகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுயிர்கள் நிடேரியத் தொகுதியில் காணப்படும் எளிமையான் முதுகெலும்பில்லாதவையும் அதே நேரத்தில் அதன் நகருந் தன்மை பிற உருப்பினர்களில் இருந்து மாறுபட்டும் இருக்கிறது.

இதன் உடற்தோற்றம் மைய அச்சிலிருந்து உடல் வட்டமாக வரையப்பட்டதைப் போன்றும் அவை சிறப்பான சமச்சீர்மையான நிலையில் காணக்கூடியதாக வுள்ளன. இதன் சமச்சீர்மையானத் தோற்றம் உடலின் எந்தப் பகுதியிலிருந்து இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலுடையவைகளாக இருக்கின்றன. இதன் உடலில் நரம்பு மண்டலங்கள் மட்டம் இருக்கின்றன. அவை ஒளி, மணம், அழுத்தம் மற்றும் புறத்தூண்டல்களை உணரும் நரம்பேற்பிகளை/உணர்வேற்பிகளை (nerve receptors) இருந்துவருகிறது. அதற்கு மூளைப் போன்று தனியமைப்புக் காணப்படுவதில்லை. இதன் உடலின் வெளிப்பகுதியாக புறத்தோல் (epidermis), உட்பகுதியாக குடற்தோல் (gastrodermis) என்னும் பகுதி குடற்பகுதிகளை போர்த்தியதுப் போலவும் காணப்படுகின்றன. புறத்தோலுக்கும் குடற்தோலுக்கும் இடைப்பட்டப் பகுதியாக அடர்ந்த, இழுவை வழவழப்புத்தன்மையுள்ள இடைப்பசை (mesoglea) பகுதிக் காணப்படுகிறது. இதன் உணவுமண்டலம் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டதுப்போல் தொண்டைப்பகுதி, இரைப்பை மற்றும் குடற்பகுதிகள் கொண்டதாக உள்ளது. ஒரு துவாரத்தின் முனையில் வாயும், பின்முனையில் குதமும் (anus) இடம் பெற்றுள்ளன. இவற்றுள் வாய்ப்பகுதியில் 4 - 8 வாய்க்கரங்கள்/வாய்நீட்சிகள் (oral arm) உணவை வாயினருகில் கொண்டுவருவதற்கு உணர்கொம்புகளுடன் (Tentacles) இணைந்து உதவுகிறது. இவ்வளவுப் பெற்றிருந்தும் இதன் மொத்த உடற்பகுதியில் 5% மே திடப்பொருளாகும் மீதியணைத்தும் திரவப்பொருளான நீரால் உருவாக்கப்பட்டவையாகும்.

சொறிமுட்டைகள் பல வடிவங்களிலும், அளவிலும் வண்ணங்களிலும் காணப்படுகின்றன. இவைகளில் சில அங்குலத்திற்குத் தாழ்வாகவும் சில ஏழடிக்கு மிகுந்த விட்டத்தையுடையதாகவும் இருக்கின்றன. அவற்றில் அதன் உணர்கொம்புகள் 100 அடிக்கு மிகுந்தும் காணவல்லவை. அவை எவ்வளவுப் பெரிய உயிரினமாக இருந்தாலும் அதனால் அதன் செங்குத்து நகர்தலிலேயே கட்டுப்பாடுடையதாகவும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அலைவிலங்குகளே யாகும். அதன் பக்கவாட்டு நகர்வு முற்றிலும் காற்றையும் நீரோட்டத்தையும் பொருத்தே அமைந்துள்ளன. அதன் மணிப்போன்ற அமைப்பு சுருங்கி புறத்தை நோக்கி உந்தி தள்ளுவதால் இவை மேல் நோக்கி உந்தப்பட்டு இவை மேலேச் செல்லுகின்றன.

சொறிமுட்டைகள் அதன் உணர்கொம்புகளைக் கொண்டு குத்தும் ஆற்றல் பெற்றவை. இவ்வுணர்கொம்புகளின் உறையமைப்பினுள் வாதங்களை உண்டுச்செய்யக்கூடிய நஞ்சு நிரப்பப்பட்டுள்ளது. அவை உணர்கொம்புகளுடன் ஏதேனும் தொடர்பில் கொள்ளும் போது அந்நச்சுகள் பாய்ச்சப்படுகின்றன. இவ்வுணர்கொம்புகளை சொறிமுட்டைகள் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்துகின்றன. சிற்சில நேரங்களில் அவை தன்னைப் பாதுக்காக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றன. இவ்வுணர்கொம்பில் உள்ள நச்சுக்கள் இரையை செயலிழக்க/வாதமடையச் செய்து அவை தப்பிப்பதில் இருந்து தடுக்கிறது. ஆனால் மனிதனைப் பொருத்தவரையில் இந்நச்சுகள் சிறு இடையூறுகளை உண்டாக்குவனவாக உள்ளது. இவைகள் உடலில் சிரங்கு, சொறி, அழற்சியை உண்டுச்செய்வதால் தான் இவைகளுக்கு சொறிமுட்டை என்றப் பெயர் உருவாகலானது. இந்நச்சிற்கு மிகையுணர்வூக்கத்தை ஏற்படுத்தும் வலிமையுள்ளதாக இருக்கின்றன. ஆனால் இக்கொம்புகளின் வீரியம் மிதவெப்பமண்டல கடற்பகுதிகளில் உள்ள சொறிமுட்டைகளில் மிகக்கூடுதலாகவும் அவை ஆளைக்கொள்ளும் அளவுக்கு வலிமையுள்ளதாகவும் இருக்கிறது [1]

பெயர்க்காரணம்

பூந்தொப்பிச் சொறிமுட்டை

இவைகள் அழகானவை மட்டுமல்ல இன்னல்களைக் கூட்டவல்லவை. இவைகளின் உணர்நீட்சிகளில் இருந்து பாய்சப்படும் நச்சானது மிகையுணர்வூக்கத்தை உண்டுச்செய்யக்கூடியவை. அவை உடலில் பலவித எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி சொறியை உண்டுச்செய்வதால் பெயரின் முற்பகுதி தோன்றியது. இதன் சமச்சீரான உடற்தோற்றம் அதன் அழகான குடை/முட்டைவடிவத் தலையமைப்பு இதற்கு சொறிமுட்டை அல்லது முட்டைசொறி என்ற பெயர் உருவாகக் காரணமாயின.[2]

பண்புகள்

சொறிமுட்டை/கடற்சொறி என்னும் உயிரினம் ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இதில் சில கடல் மேற்புரத்திலும் சில கடலின் அடிப்பகுதியிலும் வாழக்கூடியது. அதன் அளவு பல வகையாகவும், சிறிய நகக் கனுவளவுக்கும் அதே ஒரு குளிர்சாதனப்பெட்டி யளவிலும் காணப்படுகின்றன. இதன் உடல் பெரும்பாலும் ஒளியூடுருவும் தன்மையுள்ளதாகவும், சில அடர் வண்ணங்களிலும் இருக்கின்றன. இதிற் சில இப்பண்புகளையுடைத்து செவ்வூதா, மஞ்சள் மற்றும் காவி நிறங்களிலும் காணப்படுகின்றன. இதன் உடலில் அதிகப்படியான நீர்த்தன்மையும் வழவழப்புத் தன்மையும் கூடியுள்ளதால் அறிஞர்கள் இதை வழும்பலைவிலங்குகள் பிரிவில் பகுத்துள்ளனர்.

சொறிமுட்டை

இதற்கு முதுகெலும்புகள் மற்றும் முறையான சுவாசமண்டலங்கள் அற்றும் இருக்கின்றன. இது தன் உடலை உயிர்வளியால் நிரப்ப நீரில் விரவிக்கிடக்கும் வளியை விரவுதல் என்னும் முறையால் உள்வாங்கிக்கொள்கின்றன. இது நன்றாக நீந்தும் தன்மையற்றதாக உள்ளன. இவை தன் நகர்விக்கிற்கு நீரோட்டத்தையும் காற்றையும் சார்ந்து இருக்கின்றன. ஒரு இடத்தில் பல சொறிமுட்டைகள் கூட்டமாகக் காணப்பட்டால் அதை திரள்/படர்ச்சி என விவரிக்கிறோம். இக்கும்பலில் 100லிருந்து 1000வரையும் காணப்படும். அதிலும் பெட்டிச் சொறிமுட்டையின் கும்பலாக இருந்தால் மிகவும் தீங்கானவை/உயிர்ச்சேதம் விளைவிக்கூடியவையாக இருக்கும். இதில் ஆண் பெண் இரண்டும் முட்டை மற்றும் விந்துவை உற்பத்திச் செய்து நீரில் வெளியிடும். இவை எந்தவிதப் பாதுகாப்பின்றியும் அவை பருவச்சூழ்நிலை ஏற்படும் காலங்களில் குஞ்சுகள் தோன்றி வளர்ந்து ஒருப் புதுவுயிராக வடிவம்பெரும். இதன் வாழ்நாள் சில மணிநேரங்களில் தொடங்கி சராசரியாக ஆறுமாதக் காலமவரை நீளும். இதில் ஒரு சிற்றினம் இவற்றுள் மாறுபட்டு மரணத்தை ஒதுக்கி மீண்டும் தன் ஆயுளைத் தொடங்கும் தன்மையுள்ளதாக நம்பப்படுகிறது.

இதன் உணர்கொம்புகளின் கொட்டும் தன்மை பெரும்பான்மையாக வேண்டுமென்றே இருப்பதில்லை. அதன் உடலில் காணப்படும் தூரிகைப்போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமுட்டையைத் தூண்டி அதற்கு வினையான அவை கொத்துகின்றன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்கம் சில ஊறுகளையும், சில வலியையும் உண்டுச்செய்கின்றன. அதிலும் கடற்சாட்டை/கடற்குளவி (Sea wasp) சொறிமுட்டை மனிதர்களுக்கு மூச்சடைப்பு மட்டும் ஏற்படுத்தாமல் இதயத்தையும் செயலிழக்கச் செய்து மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளன.

வரலாறு

சொறிமுட்டைகள் பல காலங்களிலாக அறிஞர்களால் ஆயப்பட்டு வந்தாலும் இது பெரிதும் அறிவியல் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது அக்டோபர் 2007 ஆம் ஆண்டே. அப்போதுக் கண்டுபிடிக்கப்பட்ட சொறிமுட்டையின் புதைப்படிமங்கள் அதன் வரலாறை உலகிற்கு உணர்த்தியது. அவை 205 மில்லியன் ஆண்டுகளுக்குப் பழைமையானவை என்பது அறிவியல் உலகில் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் இன்றும் பல அறிய புதிய வகை சொறிமீன்கள் கண்டுப்பிடித்தவன்னம் இருக்கின்றன.

2004 ஆம் ஆண்டு அறிஞர்கள் மூன்று புதிய வகை இருகாண்ட்சி குடும்பச் சொறிமுட்டைகளைக் கண்டறிந்தனர். இது இவர்களுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியது. இது மேற்கு ஆசுதிரேலியாவில் கண்டறியப்பட்டது. இதில் வியப்பு என்னவாயின் கண்டுப்பிடிக்கப்பட்டவையிலேயே இது தான் மிகக்கொடிய நச்சுடையதாகவும், அதாகப்பட்டது நீரில் இருக்கும் போதும் நீரில் இல்லாத போதும். அதே ஆண்டில் ஒரு இனவுற்பத்தித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1952 ஆம் ஆண்டு இருகாண்ட்சி நோய் என்பது சொறிமுட்டை கொத்துதலில் வரும் நோய் என ஆசுதிரேலியாவைச் சேர்ந்த யூகோ பிலிக்கர் என்பவர் விளக்கினார். மேலும் தாக்கப்பட்ட நபர் ஒரு மணி நேரத்திற்குள்ளாக வாந்தி, பின் முதுகில் மிகுந்த வலியும் மார் வலியும் ஏற்படும் எனவும் விவரித்தார். 1964 ஆம் ஆண்டு சாக் பார்னசு என்னும் அறிஞர் சிறிய வகை சொறிமுட்டைத் தாக்கினால் நோயும் மரணமும் நேரும் என்பதை நிருபித்தார். இதை அவர் தன் மேலும் தன் மகன் மீதும் சோதித்து ஒரு மருத்துவரின் துணையுடன் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார்.

சில சொறிமுட்டையின் மின்னும் தன்மையை கடந்த சில ஆண்டுகளாக அறிஞர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒரு காலத்தில் இதன் தாக்கத்திற்கு மருந்துக் கண்டறிந்துச் சிகிச்சையளிக்கும் அளவுக்கு வளரும்.

வாழ்வியல்

சொறிமுட்டையின் குடை வாழ்வு சுழற்சு, 1-8:பிளானுக்குடம்பி மற்றும் வளர்சிதைமாற்றம் நடந்து பாலிப்பாக உருமாறல். 9-11: ஒடுங்கி (துண்டாகி இனப்பெருக்கம்) எப்பிக்குடம்பியாக மாறல். 21- 14: எப்பிரென் என்னும் பருவத்திலிருந்து முதிர்ந்த/நன்கு வளர்ச்சியடைந்த சொறிமுட்டை
கடல்வாழ்வில் சொறிமுட்டை, முனீச், செர்மனி

அவை ஞாலமுழுதும் உள்ள கடற்பகுதிகளில் மேற்தொட்டு அடிவரைக் காணப்படுகிறது. சமீபக் காலங்களில் இதன் எண்ணிக்கை கூடி ஆசுதிரேலிய அறிஞரான முனை. அந்தோனி ரிச்சார்ட்சன் தெறிவித்துள்ளார். இதற்கு நாம் மிகக் கூடிய அளவில் பிடிக்கும் மீன்களாலும் மற்றும் கடற்பரப்பில் நாம் புறந்தள்ளும் சாக்கடைக்கழிவு மற்றும் உரக்கழிவில் இருந்துப் பெறப்படும் ஊட்டத்தினாலும் தான் இவைகளின் எண்ணிக்கைக் கூடியுள்ளன என முனைவர் விவரிக்கிறார்.

பசிபிக்கடலில் கூட்டமாகக் காணப்படும் சொறிமுட்டை வகை - கிரைசஓரா பச்செசன்சு ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

சாதாரணமாக சொறிமுட்டையின் எண்ணிக்கைப் பருவத்தைப் பொருத்து மாறுபடுவதுண்டு அதிலும் அவைகளுக்கு கிடைக்கும் உணவைப்பொருத்து வேறுபடுவதுண்டு. அதுவும் அவ்வுணவுக்கிடைப்பது அரிதாகவும் காலச்சூழ்நிலையைச் சார்ந்தும் உள்ளன. வெப்ப மற்றும் கடலளவுக் கூடும் காலங்களில் குறிப்பாக வசந்தகாலம் மற்றும் கோடைக்காலங்களில் பாசி மற்றும் இதர உயிர்களின் இனப்பெருக்கம் கூடுவதால் இவைகளில் எண்ணிக்கையும் கூடும் அதுவும் இடத்தைப் பொருத்தே மாறுபடும். சப்பானில், நொமுராச் சொறிமுட்டை என்கிற இனம் இரண்டு மீ. நீளமும் அதே அளவுக்கு விட்டமுடையதாகவும் அவையின் எடை 200 கி.கி. மிகுந்தும் எண்ணிக்கையிலும் கூடி தொழிற்சார்ந்த மீனவர்களுக்கு பெரும் குழப்பத்தையும் இன்னலையும் விளைவிக்கின்றன. இதன் திரட்சி உலகின் பல பகுதிகளான கருங்கடல், காச்பியன் கடற்களில் பெரும் ஏற்றத்தைக் கண்டுவருகின்றன. எற்றும் மேற்குப் பகுதிகளான கடல்நீர்நிலைகளிலும் மற்றும் மெடிட்டேரினியன் கடற்பகுதிகளிலும் கடும் ஏற்றத்தைப் பெற்று வருகின்றன. இவ்வாறு சமீபக்காலங்களில் மிகக்கூடுதலாக திரள் உண்டாகிவருவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கிறது.

மிகுதியான சொறிமுட்டைகள் நீர்நிலைகளில் காணப்பட்டால் அது கண்டிப்பாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக மீன் பிடித்தல் மற்றும் அதன் விற்பனையுலகில் பல மாறுதல்களைச் சந்திக்க நேரிடும்.

சொறிமுட்டையின் எண்ணிக்கைக் கூடக்கூட அது சமச்சீர் சூழ்நிலை உருவாவதைத் தடுக்கிறது.

  • வேறு கடல் வாழ்வுயிரிகளுக்கு உணவுக்கிடைக்காமல் எல்லாவற்றையும் இவையே உண்ணும் நிலை ஏற்படும்.
  • கடற்கரைப் பகுதிகளில் குளிக்கச் செல்பவர்கள் கண்டிப்பாக அதன் தாக்குதளுக்கு உட்படுவது வாடிக்கையாகிவிடும்.
  • சுற்றுலாத்துறையும் கடும் வீழ்ச்சியடைய் வாய்ப்புள்ளது.

இவைகளின் எண்ணிக்கை கூடுதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற கடலுயிரிணங்களுக்கும் ஊறுதான். முதன்மையாக இதனால் தாக்கப்பட்டு உயிர்ச்சேதம் நீள வாய்ப்புள்ளது. சில உயிரிணங்கள் முற்றிலும் அழியும் நிலை ஏற்படலாம். சமீபத்தில் நமீபியா கடற்பகுதியில் நடந்த ஒன்று சிறந்து காட்டாகும். இதில் மிகுதியான மீன்பிடிப்பு மத்தியின வகை மீனை அக்கடற்கரைப் பகுதியிலிருந்தேக் குறைத்துவிட்டது. இதனால் இதை தனக்கு சாதகமான சூழ்நிலையாக மாறி சொறிமுட்டைகள் கூடுதல் உணவுக்கிடைக்கவே அது ஆக்கிரமிப்புச் செய்து மத்தியின மீன்களே முற்றிலும் அழிக்கப்பட்டு இதன் தலைமை மேலோங்கியுள்ளது.

படத்தொகுப்பு

ஓவியத் தொகுப்பு

மேற்கோள்

  1. http://www.jellyfishfacts.net/jellyfish.html
  2. Chidambaram L, 1984, Export oriented processing of Indian Jelly fish (Muttai Chori, Tamil) by Indonesian method at Pondicherry region, Mar. Fish. Infor. Serv. T & E Ser., 60: 1984 http://eprints.cmfri.org.in/3057/1/MFIS_60-2.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொறி_மீன்&oldid=901746" இலிருந்து மீள்விக்கப்பட்டது