சொறி மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{taxobox
{{Automatic taxobox
| fossil_range = {{Fossil range|505|0}} <small>[[Cambrian]]&nbsp;– [[Recent]]</small>
| fossil_range = {{Fossil range|505|0}} <small>[[Cambrian]]&nbsp;– [[Recent]]</small>
| taxon = மெடுசோசோஆ
| taxon = மெடுசோசோஆ

06:07, 16 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/மெடுசோசோஆ|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சொறிமுட்டை
புதைப்படிவ காலம்:505–0 Ma
Cambrian – Recent
அட்லாண்டிக் கடற்சொறிமுட்டை
கிரைசாஓரா குவின்குவேசிர்ரா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): மெடுசோசோஆ

சொறிமுட்டை (உச்சரிப்பு - chorrimuttai) {Jellyfish - en; கடல்சொறி (കടൽച്ചൊറി) - ml} என அழைக்கப்படும் உயிரினம் கடலில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வுயிர்கள் கடலுயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான படைப்பாகும். சொறிமுட்டைகள் இவ்வாழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலா அளவுக்கு அவை பரந்த நீர்நிலைகளில் காணக்கூடிய உயிராக இருக்கின்றன. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும் போது மிக அழகான உயிரினமாகவும் கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும் போது மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன. இதுவரை 2000க்கும் மேற்பட்ட சொறிமுட்டைச் சிற்றினங்கள் உலகில் அறியப்பட்டுள்ளன. இவை கடலின் கொடிய ஆழத்திலும் உலவும் பண்புள்ளதால் இன்னும் அனேக இனங்கள் அறியப்படாமல் இருக்கின்றன.

சொறிமுட்டை நிடேரிய (Cnidaria) உயிரினத்தொகுதியில் உறுப்பினராகவும், இத்தொகுதியிலேயே கடற்பவழங்களும் (coral - பவழப்பாறைகள்), கடற்சாட்டைகளும் (Sea whip) மற்றும் கடற்சாமந்திகளும் (Sea anemone) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுயிர்கள் நிடேரியத் தொகுதியில் காணப்படும் எளிமையான் முதுகெலும்பில்லாதவையும் அதே நேரத்தில் அதன் நகருந் தன்மை பிற உருப்பினர்களில் இருந்து மாறுபட்டும் இருக்கிறது.

இதன் உடற்தோற்றம் மைய அச்சிலிருந்து உடல் வட்டமாக வரையப்பட்டதைப் போன்றும் அவை சிறப்பான சமச்சீர்மையான நிலையில் காணக்கூடியதாக வுள்ளன. இதன் சமச்சீர்மையானத் தோற்றம் உடலின் எந்தப் பகுதியிலிருந்து இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலுடையவைகளாக இருக்கின்றன. இதன் உடலில் நரம்பு மண்டலங்கள் மட்டம் இருக்கின்றன. அவை ஒளி, மணம், அழுத்தம் மற்றும் புறத்தூண்டல்களை உணரும் நரம்பேற்பிகளை/உணர்வேற்பிகளை (nerve receptors) இருந்துவருகிறது. அதற்கு மூளைப் போன்று தனியமைப்புக் காணப்படுவதில்லை. இதன் உடலின் வெளிப்பகுதியாக புறத்தோல் (epidermis), உட்பகுதியாக குடற்தோல் (gastrodermis) என்னும் பகுதி குடற்பகுதிகளை போர்த்தியதுப் போலவும் காணப்படுகின்றன. புறத்தோலுக்கும் குடற்தோலுக்கும் இடைப்பட்டப் பகுதியாக அடர்ந்த, இழுவை வழவழப்புத்தன்மையுள்ள இடைப்பசை (mesoglea) பகுதிக் காணப்படுகிறது. இதன் உணவுமண்டலம் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டதுப்போல் தொண்டைப்பகுதி, இரைப்பை மற்றும் குடற்பகுதிகள் கொண்டதாக உள்ளது. ஒரு துவாரத்தின் முனையில் வாயும் (mouth), பின்முனையில் குதமும் (anus) இடம் பெற்றுள்ளன. இவற்றுள் வாய்ப்பகுதியில் 4 - 8 வாய்க்கரங்கள்/வாய்நீட்சிகள் (oral arm) உணவை வாயினருகில் கொண்டுவருவதற்கு உணர்கொம்புகளுடன் (Tentacles) இணைந்து உதவுகிறது. இவ்வளவுப் பெற்றிருந்தும் இதன் மொத்த உடற்பகுதியில் 5% மே திடப்பொருளாகும் மீதியணைத்தும் திரவப்பொருளான நீரால் உருவாக்கப்பட்டவையாகும்.

சொறிமுட்டைகள் பல வடிவங்களிலும், அளவிலும் வண்ணங்களிலும் காணப்படுகின்றன. இவைகளில் சில அங்குலத்திற்குத் தாழ்வாகவும் சில ஏழடிக்கு மிகுந்த விட்டத்தையுடையதாகவும் இருக்கின்றன. அவற்றில் அதன் உணர்கொம்புகள் 100 அடிக்கு மிகுந்தும் காணவல்லவை. அவை எவ்வளவுப் பெரிய உயிரினமாக இருந்தாலும் அதனால் அதன் செங்குத்து நகர்தலிலேயே கட்டுப்பாடுடையதாகவும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அலைவிலங்குகளே யாகும். அதன் பக்கவாட்டு நகர்வு முற்றிலும் காற்றையும் நீரோட்டத்தையும் பொருத்தே அமைந்துள்ளன. அதன் மணிப்போன்ற அமைப்பு சுருங்கி புறத்தை நோக்கி உந்தி தள்ளுவதால் இவை மேல் நோக்கி உந்தப்பட்டு இவை மேலேச் செல்லுகின்றன.

சொறிமுட்டைகள் அதன் உணர்கொம்புகளைக் கொண்டு குத்தும் ஆற்றல் பெற்றவை. இவ்வுணர்கொம்புகளின் உறையமைப்பினுள் வாதங்களை உண்டுச்செய்யக்கூடிய நஞ்சு நிரப்பப்பட்டுள்ளது. அவை உணர்கொம்புகளுடன் ஏதேனும் தொடர்பில் கொள்ளும் போது அந்நச்சுகள் பாய்ச்சப்படுகின்றன. இவ்வுணர்கொம்புகளை சொறிமுட்டைகள் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்துகின்றன. சிற்சில நேரங்களில் அவை தன்னைப் பாதுக்காக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றன. இவ்வுணர்கொம்பில் உள்ள நச்சுக்கள் இரையை செயலிழக்க/வாதமடையச் செய்து அவை தப்பிப்பதில் இருந்து தடுக்கிறது. ஆனால் மனிதனைப் பொருத்தவரையில் இந்நச்சுகள் சிறு இடையூறுகளை உண்டாக்குவனவாக உள்ளது. இவைகள் உடலில் சிரங்கு, சொறி, அழற்சியை உண்டுச்செய்வதால் தான் இவைகளுக்கு சொறிமுட்டை என்றப் பெயர் உருவாகலானது. இந்நச்சிற்கு மிகையுணர்வூக்கத்தை (Hypersensitivity) ஏற்படுத்தும் வலிமையுள்ளதாக இருக்கின்றன. ஆனால் இக்கொம்புகளின் வீரியம் மிதவெப்பமண்டல கடற்பகுதிகளில் உள்ள சொறிமுட்டைகளில் மிகக்கூடுதலாகவும் அவை ஆளைக்கொள்ளும் அளவுக்கு வலிமையுள்ளதாகவும் இருக்கிறது [1]

பெயர்க்காரணம்

பூந்தொப்பிச் சொறிமுட்டை

இவைகள் அழகானவை மட்டுமல்ல இன்னல்களைக் கூட்டவல்லவை. இவைகளின் உணர்நீட்சிகளில் இருந்து பாய்சப்படும் நச்சானது மிகையுணர்வூக்கத்தை உண்டுச்செய்யக்கூடியவை. அவை உடலில் பலவித எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி சொறியை உண்டுச்செய்வதால் பெயரின் முற்பகுதி தோன்றியது. இதன் சமச்சீரான உடற்தோற்றம் அதன் அழகான முட்டைவடிவத் தலையமைப்பு இதற்கு சொறிமுட்டை என்ற பெயர் உருவாகக் காரணமாயின.

பண்புகள்

சொறிமுட்டை/கடற்சொறி என்னும் உயிரினம் ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இதில் சில கடல் மேற்புரத்திலும் சில கடலின் அடிப்பகுதியிலும் வாழக்கூடியது. அதன் அளவு பல வகையாகவும், சிறிய நகக் கனுவளவுக்கும் அதே ஒரு குளிர்சாதனப்பெட்டி யளவிலும் காணப்படுகின்றன. இதன் உடல் பெரும்பாலும் ஒளியூடுருவும் தன்மையுள்ளதாகவும், சில அடர் வண்ணங்களிலும் இருக்கின்றன. இதிற் சில இப்பண்புகளையுடைத்து செவ்வூதா, மஞ்சள் மற்றும் காவி நிறங்களிலும் காணப்படுகின்றன.

சொறிமுட்டை

இதற்கு முதுகெலும்புகள் மற்றும் முறையான சுவாசமண்டலங்கள் அற்றும் இருக்கின்றன. இது தன் உடலை உயிர்வளியால் நிரப்ப நீரில் விரவிக்கிடக்கும் வளியை விரவுதல் என்னும் முறையால் உள்வாங்கிக்கொள்கின்றன. இது நன்றாக நீந்தும் தன்மையற்றதாக உள்ளன. இவை தன் நகர்விக்கிற்கு நீரோட்டத்தையும் காற்றையும் சார்ந்து இருக்கின்றன. ஒரு இடத்தில் பல சொறிமுட்டைகள் கூட்டமாகக் காணப்பட்டால் அதை திரள்/படர்ச்சி என விவரிக்கிறோம். இக்கும்பலில் 100லிருந்து 1000வரையும் காணப்படும். அதிலும் பெட்டிச் சொறிமுட்டையின் கும்பலாக இருந்தால் மிகவும் தீங்கானவை/உயிர்ச்சேதம் விளைவிக்கூடியவையாக இருக்கும். இதில் ஆண் பெண் இரண்டும் முட்டை மற்றும் விந்துவை உற்பத்திச் செய்து நீரில் வெளியிடும். இவை எந்தவிதப் பாதுகாப்பின்றியும் அவை பருவச்சூழ்நிலை ஏற்படும் காலங்களில் குஞ்சுகள் தோன்றி வளர்ந்து ஒருப் புதுவுயிராக வடிவம்பெரும். இதன் வாழ்நாள் சில மணிநேரங்களில் தொடங்கி சராசரியாக ஆறுமாதக் காலமவரை நீளும். இதில் ஒரு சிற்றினம் இவற்றுள் மாறுபட்டு மரணத்தை ஒதுக்கி மீண்டும் தன் ஆயுளைத் தொடங்கும் தன்மையுள்ளதாக நம்பப்படுகிறது.

இதன் உணர்கொம்புகளின் கொத்தும் தன்மை பெரும்பான்மையாக வேண்டுமென்றே இருப்பதில்லை. அதன் உடலில் காணப்படும் தூரிகைப்போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமுட்டையைத் தூண்டி அதற்கு வினையான அவை கொத்துகின்றன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்கம் சில ஊறுகளையும், சில வலியையும் உண்டுச்செய்கின்றன. அதிலும் கடற்சாட்டை/கடற்குளவி (Sea wasp) சொறிமுட்டை மனிதர்களுக்கு மூச்சடைப்பு மட்டும் ஏற்படுத்தாமல் இதயத்தையும் செயலிழக்கச் செய்து மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளன.

வாழ்வியல்

அவை ஞாலமுழுதும் உள்ள கடற்பகுதிகளில் மேற்தொட்டு அடிவரைக் காணப்படுகிறது. சமீபக் காலங்களில் இதன் எண்ணிக்கை கூடி ஆசுதிரேலிய அறிஞரான முனை. அந்தோனி ரிச்சார்ட்சன் தெறிவித்துள்ளார். இதற்கு நாம் மிகக் கூடிய அளவில் பிடிக்கும் மீன்களாலும் மற்றும் கடற்பரப்பில் நாம் புறந்தள்ளும் சாக்கடைக்கழிவு மற்றும் உரக்கழிவில் இருந்துப் பெறப்படும் ஊட்டத்தினாலும் தான் இவைகளின் எண்ணிக்கைக் கூடியுள்ளன என முனைவர் விவரிக்கிறார்.

பசிபிக்கடலில் கூட்டமாகக் காணப்படும் சொறிமுட்டை வகை - கிரைசஓரா பச்செசன்சு ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

சாதாரணமாக சொறிமுட்டையின் எண்ணிக்கைப் பருவத்தைப் பொருத்து மாறுபடுவதுண்டு அதிலும் அவைகளுக்கு கிடைக்கும் உணவைப்பொருத்து வேறுபடுவதுண்டு. அதுவும் அவ்வுணவுக்கிடைப்பது அரிதாகவும் காலச்சூழ்நிலையைச் சார்ந்தும் உள்ளன. வெப்ப மற்றும் கடலளவுக் கூடும் காலங்களில் குறிப்பாக வசந்தகாலம் மற்றும் கோடைக்காலங்களில் பாசி மற்றும் இதர உயிர்களின் இனப்பெருக்கம் கூடுவதால் இவைகளில் எண்ணிக்கையும் கூடும் அதுவும் இடத்தைப் பொருத்தே மாறுபடும். சப்பானில், நொமுராச் சொறிமுட்டை என்கிற இனம் இரண்டு மீ. நீளமும் அதே அளவுக்கு விட்டமுடையதாகவும் அவையின் எடை 200 கி.கி. மிகுந்தும் எண்ணிக்கையிலும் கூடி தொழிற்சார்ந்த மீனவர்களுக்கு பெரும் குழப்பத்தையும் இன்னலையும் விளைவிக்கின்றன. இதன் திரட்சி உலகின் பல பகுதிகளான கருங்கடல், காச்பியன் கடற்களில் பெரும் ஏற்றத்தைக் கண்டுவருகின்றன. எற்றும் மேற்குப் பகுதிகளான கடல்நீர்நிலைகளிலும் மற்றும் மெடிட்டேரினியன் கடற்பகுதிகளிலும் கடும் ஏற்றத்தைப் பெற்று வருகின்றன. இவ்வாறு சமீபக்காலங்களில் மிகக்கூடுதலாக திரள் உண்டாகிவருவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கிறது.

சித்திர அணிவகுப்பு

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொறி_மீன்&oldid=900800" இலிருந்து மீள்விக்கப்பட்டது