பயறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: bg, bo, ca, cs, da, de, dv, en, eo, es, et, fa, fi, fr, he, hi, id, ilo, it, ja, jv, kn, ko, lt, ml, mr, ms, nl, no, oc, pam, pl, ps, pt, ru, si, sv, te, th, tl, uk, uz, vi, zh
வரிசை 20: வரிசை 20:
==மேற்கோள்==
==மேற்கோள்==
{{Reflist}}
{{Reflist}}

[[bg:Папуда]]
[[bo:སྲན་ལྗང་།]]
[[ca:Mongeta mung]]
[[cs:Mungo fazole]]
[[da:Mung-Bønne]]
[[de:Mungbohne]]
[[dv:ނޫމުގު]]
[[en:Mung bean]]
[[eo:Mungfabo]]
[[es:Vigna radiata]]
[[et:Munguba]]
[[fa:ماش]]
[[fi:Mungopapu]]
[[fr:Haricot mungo]]
[[he:מש]]
[[hi:मूँग]]
[[id:Kacang hijau]]
[[ilo:Balatong]]
[[it:Vigna radiata]]
[[ja:リョクトウ]]
[[jv:Kacang ijo]]
[[kn:ಹೆಸರು ಕಾಳು]]
[[ko:녹두]]
[[lt:Spindulinė pupuolė]]
[[ml:ചെറുപയർ]]
[[mr:मूग]]
[[ms:Pokok kacang hijau]]
[[nl:Mungboon]]
[[no:Mungbønne]]
[[oc:Mongeta mungó]]
[[pam:Balatung]]
[[pl:Fasola złota]]
[[ps:مۍ]]
[[pt:Vigna radiata]]
[[ru:Бобы мунг]]
[[si:මුංඇට]]
[[sv:Mungböna]]
[[te:పెసలు]]
[[th:ถั่วเขียว]]
[[tl:Monggo]]
[[uk:Боби мунг]]
[[uz:Mosh]]
[[vi:Đậu xanh]]
[[zh:绿豆]]

18:55, 9 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். லெக்யூம் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி விதைகளே பயறுகள் ஆகும். ஆங்கிலத்தில் கடினமான மேற்புறத் தோல் அல்லது மேல் பரப்பைக் கொண்ட விதைகளை பல்ஸ் என குறிப்பிடுகின்றனர். இவற்றில் புரதசத்து மிகுந்துள்ளது. இவை ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிக புரதம் கிடைத்திடச் செய்யும்.

தொன்றுத் தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களை விட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகக் காணப்படுகின்றன. எனவே, இவற்றை எளிதாக பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளிலேயே அதிக சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு என்றால் அது மிகையல்ல [1].

பண்புகள்

முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28% புரதச்சத்தும் 60% கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. அதிலும் சோயா பயறில் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் காணப்படுகின்றது. இது பயறு வகைகளிலேயே அதிகம்.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும், தியாமின், நியாசின் போன்ற வைட்டமின்களும் இவற்றில் கூடுதலாகும். 100 கிராம் பயறில் 24.5 கிராம் புரதம், 140 மிகி. கால்சியம், 30 மி.கி. பாஸ்பரஸ், 8.3 மி.கி. இரும்புச்சத்து, 0.5மி.கி. தயாமின், 0.3மி.கி. ரிபோபிளேவின், 2.0மி.கி. நியாசின் போன்றவை உள்ளது. சராசரியாக பயறு வகைகளில் 345 கிலோ எரி சக்தியும் உள்ளன.

பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றது. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றன. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையை தவிர்த்திடும்[2].

முளைகட்டிய பயறு

பயறுகள் முளைவிட்ட நிலையில் காணப்படுதல்

பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. அதை அப்படியே பயன்படுத்துவதை விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டுச்செய்யும் தன்மைக்கிடையாது. எளிதில் செரிமாணமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம்/சர்க்கரை இட்டும் கழிக்கலாம். வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்[3].


குறிப்பு

  • வயிறு கோளாறுகள் உள்ளவர்கள் குறைவாக பயறு வகைகளை உட்கொள்வது நல்லது.

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயறு&oldid=895256" இலிருந்து மீள்விக்கப்பட்டது