ஆதி சங்கரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: cat change, replaced: பகுப்பு:ஆன்மீகவாதிகள் → பகுப்பு:ஆன்மிகவாதிகள் using AWB
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 19: வரிசை 19:
இளமை பிராயத்தில் [[கௌடபாதர்]] சீடரான [[கோவிந்த பகவத்பாதர்]] இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கலானார்.
இளமை பிராயத்தில் [[கௌடபாதர்]] சீடரான [[கோவிந்த பகவத்பாதர்]] இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கலானார்.


வேதிய [[உபநிஷத்]]கள் மற்றும் [[பாதராயணர்]] இயற்றிய [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திரங்களுக்கு]] விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் [[அத்வைதம்|அத்வைத]] [[வேதாந்தம்]] அதாவது இரண்டிண்மை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். இது மற்றும் அல்லாது [[பகவத் கீதை]], [[விஷ்ணு சஹஸ்ரநாமம்]] போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொது கருத்து. [[சிவானந்த லஹரி]], [[பஜ கோவிந்தம்]], [[விவேக சூடாமணி]], [[உபதேச சஹஸ்ரி]], [[கனகதாரா ஸ்தோத்திரம்]], [[சுப்ரஹ்மண்ய புஜங்கம்]] போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
வேதிய [[உபநிஷத்]]கள் மற்றும் [[பாதராயணர்]] இயற்றிய [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திரங்களுக்கு]] விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் [[அத்வைதம்|அத்வைத]] [[வேதாந்தம்]] அதாவது இரண்டிண்மை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். இது மற்றும் அல்லாது [[பகவத் கீதை]], [[விஷ்ணு சஹஸ்ரநாமம்]] போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொது கருத்து. [[சிவானந்த லஹரி]], [[பஜ கோவிந்தம்]], [[விவேக சூடாமணி]], [[உபதேச சாஹஸ்ரி]], [[கனகதாரா ஸ்தோத்திரம்]], [[சுப்ரஹ்மண்ய புஜங்கம்]] போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.


[[இந்திய துணைக்கண்டம்]] முழுவதும் பிரயாணித்து தெற்கில் [[சிருங்கேரி]], மேற்கில் [[துவாரகா]], வடக்கில் [[பதரிநாத்]] மற்றும் கிழக்கில் [[பூரி]] என்ற இடங்களில் நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான [[ஹஸ்தமாலகர்]], [[சுரேஸ்வரர்]], [[பத்மபாதர்]] மற்றும் [[தோடகர்]] என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். தமது 32ஆம் அகவையில் மரணம் அடைந்த இவர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் பிரமுகர் என்று கருதப்படுகிறார்.
[[இந்திய துணைக்கண்டம்]] முழுவதும் பிரயாணித்து தெற்கில் [[சிருங்கேரி]], மேற்கில் [[துவாரகா]], வடக்கில் [[பதரிநாத்]] மற்றும் கிழக்கில் [[பூரி]] என்ற இடங்களில் நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான [[ஹஸ்தமாலகர்]], [[சுரேஸ்வரர்]], [[பத்மபாதர்]] மற்றும் [[தோடகர்]] என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். தமது 32ஆம் அகவையில் மரணம் அடைந்த இவர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் பிரமுகர் என்று கருதப்படுகிறார்.

08:57, 16 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஆதி சங்கரர்
சங்கரரும் சீடர்களும் - ராஜா ரவி வர்மாவின் ஓவியம்
இயற்பெயர்சங்கர
தலைப்புகள்/விருதுகள்அத்வைதம் நிறுவியவர்,இந்து மறுமலர்ச்சி, சண்மதம் (ஆறுமதங்கள்) நிறுவியவர்
தத்துவம்அத்வைத வேதாந்தம்
குருகோவிந்த பகவத்பாதர்
மேற்கோள்ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷம் ("வயிற்றை நிரப்ப இவ்வளவு வேஷம்" போடுகிறான் மனிதன்)

ஆதிசங்கரர் (சமற்கிருதம்: Ādi Śaṅkara), ஏழாம் நூற்றாண்டு அன்றைய தமிழகத்தில் (இன்று கேரளத்திலுள்ள) "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.

இளமை பிராயத்தில் கௌடபாதர் சீடரான கோவிந்த பகவத்பாதர் இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கலானார்.

வேதிய உபநிஷத்கள் மற்றும் பாதராயணர் இயற்றிய பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டிண்மை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். இது மற்றும் அல்லாது பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொது கருத்து. சிவானந்த லஹரி, பஜ கோவிந்தம், விவேக சூடாமணி, உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் பிரயாணித்து தெற்கில் சிருங்கேரி, மேற்கில் துவாரகா, வடக்கில் பதரிநாத் மற்றும் கிழக்கில் பூரி என்ற இடங்களில் நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான ஹஸ்தமாலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். தமது 32ஆம் அகவையில் மரணம் அடைந்த இவர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் பிரமுகர் என்று கருதப்படுகிறார்.

காலம்

கி.மு நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.

துறவறம்

தமது நான்காம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

மனீஷா பஞ்சகம்

தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற பொது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.

அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச் சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆன்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுவதாக சங்கர விஜயம் கூறுகின்றது.

உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு அத்வைத ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த சம்பவம் ஆகும்.

இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

ஆறு மதங்களாக புதிய உருக்கொடுத்தல்

தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சத்தியை (சக்தியை_) வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.

அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.

வாதங்கள்

காபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மண்டன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர்.

இன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் எனும் ஊரில் சைவ சமயத்தவருடன் வாதிடுகின்றார் சங்கரர்.

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_சங்கரர்&oldid=875393" இலிருந்து மீள்விக்கப்பட்டது