புறாத்து ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 31°0′18″N 47°26′31″E / 31.00500°N 47.44194°E / 31.00500; 47.44194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:ஆறுகள் நீக்கப்பட்டது; பகுப்பு:ஆசிய ஆறுகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 23: வரிசை 23:
| state1 = சிரியா
| state1 = சிரியா
| state2 = ஈராக்
| state2 = ஈராக்
| state3 = சவீது அரேபியா
| state3 = சவூதி அரேபியா
| state4 = குவைத்
| state4 = குவைத்
| state_type = வடிநிலப் பகுதி
| state_type = வடிநிலப் பகுதி

16:19, 23 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

இயுபிரட்டீசு
அரபு மொழி: الفرات‎: al-Furāt[1], துருக்கியம்: Fırat[1], குர்தியம்: Firat, Syriac: ܦܪܬ‎: Prath, எபிரேயம்: פרתPrat
River
சிரியாவின் அலபியே என்னும் இடத்துக்கு அருகில் இயுபிரட்டீசு.
பெயர் மூலம்: பழைய பாரசீக உஃபராத்து விலிருந்து இடைகாலப் பாரசீக ஃப்ரட் ஊடாக துருக்கிய ஃபிராட் க்கு[1]
நாடுகள்  ஈராக்,  சிரியா,  துருக்கி
வடிநிலப் பகுதி துருக்கி, சிரியா, ஈராக், சவூதி அரேபியா, குவைத்
கிளையாறுகள்
 - இடம் பலிக், கபுர்
 - வலம் சஜுர்
நகரங்கள் பிரெசிக், அர்-ரக்கா, டெயிர் எசு-சோர், மயாடின், அடித்தா, ரமாடி, அபானியா, ஃபலூஜா, குஃபா, சமாவா, நசிரியா
அடையாளச்
சின்னங்கள்
ஆசாத் ஏரி, கடீசியா ஏரி, அப்பானியா ஏரி
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் முரத் சூ, thurukki
 - உயர்வு 3,520 மீ (11,549 அடி)
Secondary source
 - location கர சூ, துருக்கி
 - உயர்வு 3,290 மீ (10,794 அடி)
Source confluence
 - location கெபான், துருக்கி
 - உயர்வு 610 மீ (2,001 அடி)
கழிமுகம் சாட் அல்-அராப்
 - அமைவிடம் அல்-குர்னா, பாசுரா ஆளுனரகம், ஈராக்
 - ஆள்கூறு 31°0′18″N 47°26′31″E / 31.00500°N 47.44194°E / 31.00500; 47.44194
நீளம் 2,800 கிமீ (1,740 மைல்) approx.
வடிநிலம் 5,00,000 கிமீ² (1,93,051 ச.மைல்) approx.
Discharge for Hīt
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
டைகிரிசு - இயூபிரட்டீசு ஆறுகளின் வடிநிலப் படம் (மஞ்சள் நிறத்தில்)
டைகிரிசு - இயூபிரட்டீசு ஆறுகளின் வடிநிலப் படம் (மஞ்சள் நிறத்தில்)
டைகிரிசு - இயூபிரட்டீசு ஆறுகளின் வடிநிலப் படம் (மஞ்சள் நிறத்தில்)
விக்கிமீடியா பொது: இயூபிரட்டீசு

இயூபிரட்டீசு ஆறு (/juːˈfreɪtiːz/ (கேட்க), அரபு மொழி: الفرات‎: al-Furāt, எபிரேயம்: פרת‎: Prat, துருக்கியம்: Fırat, குர்தியம்: Firat), மேற்காசியாவில் உள்ள ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு ஆறு ஆகும். இப்பகுதியில் ஓடும் டைகிரிசு என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய மெசொப்பொத்தேமியாவை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, சாட்-அல்-அராப் (Shatt al-Arab) என்னும் இடத்தில் டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, பாரசீகக் குடாவில் கலக்கின்றது.

சொற்பிறப்பு

இந்த ஆற்றைப் பற்றிய மிகவும் பழைய குறிப்பு, தெற்கு ஈராக்கில் உள்ள சுருப்பக், நிப்பூர் ஆகிய இடங்களில் கிடைத்த ஆப்பெழுத்து ஆவணங்களில் காணப்படுகிறது. இந்த ஆவணங்கள் கிமு மூன்றாம் ஆயிரவாண்டின் நடுப் பகுதியைச் சேர்ந்தவை. சுமேரிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணங்களின்படி இந்த ஆற்றின் பெயர் புரானுனா. அக்காடிய மொழியில் இயூபிரட்டீசை புரத்து என அழைத்தனர். பழைய பாரசீக மொழியில் உஃபராத்து என அழைக்கப்பட்ட இந்த ஆற்றை, இடைக்காலப் பாரசீக மொழியில் ஃப்ரட் என்றும், துருக்கிய மொழியில் ஃபிரட் என்றும் அழைத்தனர். இதிலிருந்தே தற்கால ஆங்கிலப் பெயரான இயூஃபிரட்டீஸ் (Euphrates) பெறப்பட்டது. "நல்லது" என்னும் பொருள் கொண்ட பழைய பாரசீக மொழிப் பெயரான உஃபராத்து என்பதைப் பின்பற்றியே கிரேக்கச் சொல்லான Εὐφράτης (இயூஃபிரட்டீஸ்) உருவானது.

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறாத்து_ஆறு&oldid=851704" இலிருந்து மீள்விக்கப்பட்டது