அண்ணா அசாரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ms:Anna Hazare
சி r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: es:Anna Hazare
வரிசை 39: வரிசை 39:
[[bn:অন্না হজারে]]
[[bn:অন্না হজারে]]
[[en:Anna Hazare]]
[[en:Anna Hazare]]
[[es:Anna Hazare]]
[[fa:آنه هزاره]]
[[fa:آنه هزاره]]
[[gu:અણ્ણા હઝારે]]
[[gu:અણ્ણા હઝારે]]

18:11, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

கிசான் பாபட் பாபுராவ் அசாரே
படிமம்:Anna Hazare.jpg
பிறப்புசனவரி 15, 1940 (1940-01-15) (அகவை 84)
பிங்கார், மகாராட்டிரம், இந்தியா
அறியப்படுவதுநீர்ப்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்; தகவல் அறியும் உரிமைச் சட்டம்; ஊழல் எதிர்ப்பு இயக்கம்
சமயம்இந்து
பெற்றோர்லட்சுமிபாய் அசாரே (தாய்)
பாபுராவ் அசாரே (தந்தை)
வலைத்தளம்
http://www.annahazare.org

பரவலாக அண்ணா அசாரே (கிரந்தம்:அண்ணா ஹசாரே) என்று அறியப்படும் கிசான் பாபுராவ் அசாரே (Kisan Baburao Hazare) (பிறப்பு: சனவரி 15, 1938), ஓர் இந்திய சமூக சேவகர். மகாராட்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, ஓர் மாதிரி சிற்றூராக திகழ்ந்த,ராலேகாவ் சித்தி என்ற சிற்றூரின் மேம்பாட்டிற்காக இவராற்றிய பணிக்காக அறியப்பட்டார். இவரது பணிகளுக்கு அங்கீகாரமாக 1992ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியுள்ளது. நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டமாக்கலுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறப்புற பணியாற்றினார். தற்போது ஊழலுக்கு எதிராகப் போராடிவருகிறார். இவர் ஜன் லோக்பால் சட்டமாக்கலுக்காக 2011, ஏப்ரல் 5 ஆம் நாள் தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கினார்[1][2][3]. அரசு அலுவலகங்களில் ஊழல்களை விசாரிக்கும் உரிமை கொண்ட குறைகேள் அதிகாரி (இந்தியில்: லோக்பால்) ஒருவரை நியமிக்கும் சட்டமூலமே ஜன் லோக்பால் சட்டமூலம் ஆகும். 5 நாட்களாக உண்ணாநோன்பிருந்து வந்த அண்ணா அசாரே இந்திய நடுவண் அரசு அவரது கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றதை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டார்.[4][5].

ராளேகண் சித்தி

ராளேகண் சித்தி ஊர் மக்களை ஒன்று திரட்டி, தலைமைத்துவம் கொடுத்து ஒரு மாதிரி ஊராக மாற்றி அமைத்ததில் அசாரே அவர்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. இவரும் இளையோரும் சேர்ந்து இளையோர் ஒன்றியத்தை அமைத்தனர். பின்னர் நீர் விநியோக ஒன்றியத்தை அமைக்கவும் உதவி புரிந்தார். ஊரில் மதுபான பயன்பாடு அதிகமாக இருந்தால், அதை நிறுத்த ஊர் மக்களோடு சேர்ந்து நடவடிக்கைகள் எடுத்தார். வேளாண் உற்பத்தியைப் பெருக்க, தகுந்த நீர்பாசனம் தேவை என்பதை உணர்ந்து ஒரு watershed embankment நிர்மானித்தார். மண் அரிப்பைத் தடுக்க, பல்வேறு மரங்களையும் புல்களையும் நட்டனர். தானிய உற்பத்திக்கு மாற்றீடாக பால் உற்பத்தியைப் பெருக்க உதவினார். கல்வி, உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்தவும் இவர் உதவினார். சாதி கட்டமைப்பு தளர உதவினார். இவ்வாறு பல வழிகளில் முன்னின்று உழைத்து, இந்தியாவிலும், உலகில் பேண்தகு மாதிரி ஊராக ராளேகண் சித்தி மாற்றினார்.

லோக்பால் சட்டமாக்கலுக்கான போராட்டம்

அண்ணா அசாரேயின் 2ம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்

ஊழலெதிர்ப்புக்கான லோக்பால் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட வேண்டும் என்று போராடி வருகிறார். இது தொடர்பாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது அரசு பிரேரித்துள்ள லோக்பால் சட்டவரைவினை விட வலுமிக்கதாகவும் அம்புட்ஸ்மன் எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்தும் இயற்றப்பட்டுள்ளது. [6] இந்த சட்டவரைவை இந்தியப் பிரதமர் ஏற்க மறுத்துள்ளநிலையில், ஊழல் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் நடுவண் "லோக்பால்" மற்றும் மாநில "லோக் ஆயுக்த்" நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கும் வகையில் வலுவான லோக்பால் சட்டவரைவினை இயற்ற அரசு பிரதிநிதிகளும் குடிமக்கள் பிரதிநிதிகளும் இணைந்த கூட்டுக்குழு ஒன்றினை அமைக்கக் கோரி ஏப்ரல் 5, 2011 அன்று தில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் சாகும்வரை உண்ணாவிரப் போராட்டம் நடத்தினார்.[7].

மேற்கோள்கள்

  1. "Dharna-organised-in-support-of-Anna-Hazare". Times of India.. April 5, 2011. http://timesofindia.indiatimes.com/city/surat/Dharna-organised-in-support-of-Anna-Hazare/articleshow/7876785.cms. பார்த்த நாள்: 5 April 2011. 
  2. Anna Hazare's crusade against corruption continues
  3. அன்னா ஹசாரேவின் உண்ணா விரதம் - ஊழலை எதிர்த்து போராட்டம்
  4. "India activist Anna Hazare ends hunger strike". பிபிசி. 9 April 2011. http://www.bbc.co.uk/news/world-south-asia-13022337. பார்த்த நாள்: 9 ஏப்ரல் 2011. 
  5. "Govt issues notification on committee to draft Lokpal Bill". த இந்து. 9 ஏப்ரல் 2011. http://www.thehindu.com/news/national/article1637935.ece. பார்த்த நாள்: 9 ஏப்ரல் 2011. 
  6. Deshpande, Vinaya (29 March 2011). "Anna Hazare faults Lokpal Bill". The Hindu. http://www.hindu.com/2011/03/29/stories/2011032963791300.htm. பார்த்த நாள்: 5 April 2011. 
  7. "Anna Hazare to start fast unto death for strong Lokpal Bil". Hindustan Times. 5 April 2011. http://www.hindustantimes.com/Anna-Hazare-to-start-fast-unto-death-for-strong-Lokpal-Bill/Article1-681415.aspx. பார்த்த நாள்: 5 April 2011. 

வெளியிணைப்புகள்

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_அசாரே&oldid=845741" இலிருந்து மீள்விக்கப்பட்டது