ஒட்டக்கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 13: வரிசை 13:
* [[அரும்பைத் தொள்ளாயிரம்]]
* [[அரும்பைத் தொள்ளாயிரம்]]
* [[தக்கயாகப் பரணி]]
* [[தக்கயாகப் பரணி]]
* [[கலிங்கத்துப் பரணி]]
* [[கலிங்கத்துப் பரணி (ஒட்டக்கூத்தர்) |கலிங்கத்துப் பரணி]]


இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.
இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.

==ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்==
==ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்==
* ''புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர்'', புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149
* ''புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர்'', புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149

19:40, 6 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு.

நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், சில நூற்றாண்டுகள் பின் வாழ்ந்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இதே போல கம்பரும் ஒட்டக்கூத்தருக்குப் பின் வாழ்ந்தவர் என்னும் கருத்து உள்ளது.

பெயர்ப் பொருள்

கூத்தர் என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.

ஒட்டக்கூத்தரின் நூல்கள்

இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்

  • புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர், புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149
  • நான் கண்ட ஒட்டக்கூத்தர், சிறீநிவாச ரங்கசுவாமி, நாம் தமிழர் பதிப்பகம், 2004, ப்க்.1-90.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டக்கூத்தர்&oldid=837936" இலிருந்து மீள்விக்கப்பட்டது