அதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: ko:아탈라이
வரிசை 99: வரிசை 99:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=3085&ncat=11 தின மலர் நாளிதழில் அதலைக்காய் பற்றிய செய்தி]
* [http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=3085&ncat=11 தின மலர் நாளிதழில் அதலைக்காய் பற்றிய செய்தி]

[[en:Momordica cymbalaria]]


[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
[[பகுப்பு:கீழை நாட்டு வெப்பப்பகுதிக் கொடிகளின் பேரினம்]]
[[பகுப்பு:கீழை நாட்டு வெப்பப்பகுதிக் கொடிகளின் பேரினம்]]
[[பகுப்பு:இந்தியாவின் உயிரினவளம்]]
[[பகுப்பு:இந்தியாவின் உயிரினவளம்]]

[[en:Momordica cymbalaria]]
[[ko:아탈라이]]

08:44, 26 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

அதலை
அதலைக்காய்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
துணை சிற்றினம்:
பேரினம்:
Momordica (கீழை நாட்டு வெப்பப்பகுதிக் கொடிப் பேரினம்)
இனம்:
M. cymbalaria
இருசொற் பெயரீடு
Momordica cymbalaria (பல்லாண்டு வாழும் வெப்பப்பகுதிக் கொடியினம்)
Hook.f., 1871
வேறு பெயர்கள்

Luffa tuberosa (Roxb.)
Momordica tuberosa (Roxb.)

அதலை (Momordica cymbalaria வேறு அறிவியற் பெயர்கள்: Luffa tuberosa, Momordica tuberosa) பாகலுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஒரு கொடி இனமாகும். இது தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற தென் மாநிலங்களில் மகாராட்டிரத்திலும், கருநாடகத்திலும், ஆந்திராவிலும் காணப்படுகிறது.[1] பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்ட அதலைக்காய்கள் உடல்நலத்துக்கு உதவும் பல மருத்துவத் திறங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக நீரிழிவு, குடற்புழு போன்ற இடர்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.[2]

செடி அமைப்பு

இந்திய உருவா நாணயத்தை ஒத்த அளவில் ஒரு அதலைக்காய்

அதலைச்செடிகள் பொதுவாக இயல்பில் தரையில் படர்பவை. சில வேளைகளில் வயற்காடுகளில் வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப் படர்கின்றன. பல ஆண்டுகள் வாழும் இச்செடி ஒவ்வொரு ஆண்டும் வறட்சிக் காலத்தில் காய்ந்து விழுந்து விட்டாலும் மண்ணுக்கடியில் உள்ள கிழங்கு உயிருடன் இருக்கும். இவற்றின் இலைகளின் அடிப்பகுதி இதய வடிவாகவும் (chordate), எஞ்சிய பகுதி ஒருபுறம் சாய்ந்தோ (oblicular), சிறுநீரக வடிவிலோ (reniform) இருக்கும். ஒரே கொடியில் ஆண்-பெண் பூக்கள் தனித்தனியே இருக்கும். ஐந்து முதல் முப்பது மி.மீ. நீளம் வரை உள்ள ஒவ்வொரு ஆண் மலர்த்தார்த் தண்டிலும் (peduncle) இரண்டு முதல் ஐந்து மலர்கள் வரை இருக்கின்றன. பூந்தார்கள் இழைவடிவாகவும் (filiform), மென்மயிர்ப்படர்ந்து பூவடிச் செதில்களில்லாமலும் இருக்கின்றன. மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் நுனிவளர் தார் அமைப்பில் (racemose) இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன. பெண் மலர்த்தார் 28 மி.மீ. நீளத்தில் ஒரே ஒரு மலரைத் தாங்கி நிற்கும். காய்கள் 20-25 மி.மீ. நீளம் வரை இருக்கின்றன. காய்களின் கரும்பச்சை நிறப் புறத்தோலில் எட்டு நுண்ணிய வரைகள் இருக்கும். விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டை வடிவில் வழு வழுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கின்றன.[1]

வளர் பருவம்

இக்கொடி பெரும்பாலும் தானாக வளர்வது. இதை முறையாகப் பயிரிட்டு வளர்க்காவிட்டாலும் மற்ற பயிர்களின் வயல்களில் வரப்புகளில் இவை வளருவதை ஊக்குவிப்பர். இக்கொடிகள் பொதுவாக ஐப்பசியில் பூத்து, கார்த்திகை, மார்கழியில் காய்த்து தைத்திருநாள் வரை அறுவடை செய்யப்படுகின்றன.[1]

அதலைக்காய்களின் ஊட்டச்சத்துகள்

கூறு அதலைக்காய்[1] பாகற்காய்[3]
அண்மைப் பகுதிக்கூறுகள் (100 கிராமில் பகுதி கிராம்)
ஈரம் 84.30 83.20
நார்ப்பொருள் 6.42 1.70
மாவுச்சத்து 12.60 10.60
புரதம் 2.15 2.10
உணவு ஆற்றல் (கிலோ காலரி/100g) 73.00 60.00
ஊட்டப்பொருள் (100 கிராமில் பகுதி மி.கி.)
கால்சியம் 72.00 23.00
பொட்டாசியம் 500.00 171.00
சோடியம் 40.00 2.40
இரும்பு 1.70 2.00
செப்பு 0.18 0.19
மங்கனீசு 0.32 0.08
சிங்கு 2.82 0.46
பாசுப்பரசு 0.46 38.00
உயிர்ச்சத்து சி 290.00 96.00
β கரோட்டீன் 0.01 126.00

பார்வதி ஆய்வுக்குழுவினர் பல்வேறு ஆய்வுகள் வழியாக அதலைக்காய்களின் கூறுகளைப் பிரித்து அவற்றின் விகித அளவுகளை வெளியிட்டுள்ளனர். அணைமைப் பகுதிக் கூறுகள் அலசல் வழியாக ஈரம், நார், மாவுப்பொருள், புரதம் போன்றவற்றின் அளவுகள் ஏறத்தாழ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர் முழுவதும் எரித்த சாம்பலைக் கொண்டு வேதிப் பொருட்களின் விகிதத்தையும் அளந்துள்ளனர். இதே முறைகளில் முன்னதாக பாகற்காய்களின் மீது நடத்திய ஆய்வு முடிவுகளையும் ஒப்பீட்டுக்காகத் தந்துள்ளனர்.

மருத்துவத் திறம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதலை விளையும் பிற பகுதிகளிலும் நெடுங்காலமாக நீரிழிவு, குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். மருந்தாய்வர்கள் இவற்றைக் கொண்டு மாந்தரிலும் பிற விலங்குகளிலும் ஆய்வு செய்துள்ளனர். நீரில் கரைத்த அதலைக்காய்கள் நீரிழிவுக்காட்பட்ட முயல்களில் குருதியில் இருந்த குளுக்கோசின் அளவைக் குறைப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.[4] இச்செடிகளின் கிழங்குகளை அரைத்து எத்தனாலில் கரைத்து எலிகளுக்குப் புகட்டியபோது இதயத்தில் குருதிக்குழாய் அடைப்புகளின் போது ஏற்படும் திசு இறப்பைக் குறைப்பதாகவும் அறிந்துள்ளனர்.[5] கார்பன் டெட்ரா குளோரைடினாலும் பாராசிட்டமாலினாலும் விளையும் கல்லீரல் பாதிப்பையும் இவை தடுக்க உதவுகின்றன என்று அறியப்பட்டுள்ளது.[6]

இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும் கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர்.[7]

சமையல்

அதலைக்காய்ப் பொரியல்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாட்டுப்புறத்தில் அதலை காய்க்கும் காலத்தில் அவற்றை உட்கொள்கின்றனர். முறையாக பயிரிடப்படாமல் தாமாக வளரும் கொடிகளில் இருந்து பறித்து சிலர் மட்டுமே இவற்றின் பயனை அறிந்து பயன்படுத்துகின்றனர். இவற்றுக்கான முறைப்படியான சமையல் முறைகளும் வெளியில் தெரியாமல் இருந்தன. 1997-ஆம் ஆண்டில் தோட்டக்கலை ஆய்வாளர்கள் பார்வதி, குமார் ஆகியோர் தங்கள் ஆய்வுக்காக முறைப்படியான சமையல் முறைகளை உருவாக்கி பொரியல், எண்ணெய் வறுவல், புளிக்குழம்பு, ஊறுகாய், வடகம் ஆகியவற்றைச் செய்து மக்களின் விருப்பத்தைச் சுவை அலகில் அளந்துள்ளனர்.[1] அவர்களுடைய ஆய்வின்படி புளிக்குழம்பையும் வடகத்தையும் மக்கள் பொதுவாக விரும்பினார்களாம். முன்னதில் புளியும், பின்னதில் மோரும் கசப்புச்சுவையைக் குறைப்பதால் அவற்றை விரும்பியதாக அறிகின்றனர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Parvathi, S.; Kumar, V. J. F. (2002). "Studies on chemical composition and utilization of the wild edible vegetable athalakkai (Momordica tuberosa)". Plant Foods for Human Nutrition 57 (3/4): 215–222. doi:10.1023/A:1021884406024. 
  2. Duke, Jim. Mary Jo Bogenschutz. ed. Dr. Duke's Phytochemical and Ethnobotanical Databases. http://www.ars-grin.gov/cgi-bin/duke/ethnobot.pl?ethnobot.taxon=Momordica%20tuberosa. பார்த்த நாள்: 2011-06-25. 
  3. C. Gopalan; B. V. Rama Sastri; S. C. Balasubramanian; National Institute of Nutrition (India) (1989). Nutritive value of Indian foods. National Institute of Nutrition, Indian Council of Medical Research. http://books.google.com/books?id=biFBAAAAYAAJ. பார்த்த நாள்: 9 July 2011. 
  4. B. K. Rao, M. M. Kesavulu, R. Giri, C. Appa Rao (1999), Antidiabetic and hypolipidemic effects of Momordica cymbalaria Hook. fruit powder in alloxan-diabetic rats. Journal of Ethnopharmacology, volume 67, issue 1, pages 103–109., எஆசு:10.1016/S0378-8741(99)00004-5 PubMed
  5. K. Raju, R. Balaraman, Vinoth Hariprasad, M. Kumar, and A. Ali (2008), Cardioprotective Effect Of Momordica Cymbalaria Fenzl In Rats With Isoproterenol-Induced Myocardial Injury. Journal of Clinical and Diagnostic Research, volume 2, issue 1, pages 699–705
  6. Kumar, Pramod; Deval Rao, Lakshmayya and Ramachandra Setty (July 2008). "Antioxidant and hepatoprotective activity of tubers of Momordica tuberosa Cogn. against CCl 4 induced liver injury in rats" (pdf). Indian Journal of Experimental Biology 46: 510-513. http://nopr.niscair.res.in/bitstream/123456789/4538/1/IJEB%2046(7)%20510-513.pdf. பார்த்த நாள்: 2011-06-25. 
  7. P., Sethuraman; N. Grahadurai and M. K. Rajan (2010). "Efficacy of Momordica tuberosa leaf extract against the larvae of filarial mosquito, Culex quinquefasciatus" (pdf). Journal of Biopesticides 3 (1): 205-207. http://www.jbiopest.com/users/LW8/efiles/Sethuraman_V31.pdf. பார்த்த நாள்: 2011-06-25. 


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதலை&oldid=827815" இலிருந்து மீள்விக்கப்பட்டது