வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:


[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இசைக் கலைஞர்கள்]]

10:24, 15 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826-1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878ல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் (நாவல்) தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ் நாட்டில் அக்டோபர் 11 ஆம் நாள் 1826ல் குளத்தூரில் பிறந்தார். தொடர்வண்டியில் திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை தாயார் அரோக்கிய மரி அம்மையார்.

இவர் அறமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் 1856ல் தரங்கம்பாடியில் முனிசீப்பு வேலையில் அமர்ந்தார்.

ஆக்கங்கள்

இவர் ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:

  • 1862ல் சித்தாந்த சங்கிரகம் இது உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்
  • 1869ல் பெண்மதி மாலை - இந்நூல் பெண்களுக்கு ஏற்ற அற முறைகளை பாட்டுக்களாலும் உரைநடைப்பகுதிகளாலும் ஆக்கப்பட்டது.
  • 1873ல் மூன்று நூல்கள் திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பு இவைகளை புலப்படுத்துவது.
  • 1878ல் பிரதாப முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்தி்லும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • 1878ல் சர்வ சமய சமரசக் கீர்த்தனை ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
  • 1887ல் சுகுண சுந்தரி புதினம்
  • 1889ல் சத்திய வேத கீர்த்தனை
  • பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன் என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.

உசாத்துணை

கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1963.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதநாயகம்_பிள்ளை&oldid=82552" இலிருந்து மீள்விக்கப்பட்டது