பட்டுப் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: be:Вялікі шаўковы шлях
சி r2.5.4) (தானியங்கிமாற்றல்: kk:Ұлы жібек жолы
வரிசை 61: வரிசை 61:
[[ka:აბრეშუმის დიდი გზა]]
[[ka:აბრეშუმის დიდი გზა]]
[[kaa:Ullı jipek jolı]]
[[kaa:Ullı jipek jolı]]
[[kk:Ұлы Жібек Жолы]]
[[kk:Ұлы жібек жолы]]
[[ko:비단길]]
[[ko:비단길]]
[[ku:Riya Hevrîşimê]]
[[ku:Riya Hevrîşimê]]

00:42, 23 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

முதலாம் நூற்றாண்டில் பட்டுப் பாதை.


பட்டுப் பாதை என்பது பண்டைக் காலத்தில் கவிகை வண்டிகளும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் (Chang'an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 8000 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது.

பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.

பட்டுப் பாதை என்ற சொல்லுக்கு நிகரான Seidenstraße என்னும் ஜெர்மானியச் சொல்லை, 1877 இல், இப் பாதைக்கும் பெயராக வைத்தவர் பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் (Ferdinand von Richthofen) என்னும் ஜெர்மானியப் புவியியலாளர் ஆவார்.

வடக்குச் சீனாவின் வணிக மையங்களுக்கு அப்பால், பட்டுப் பாதை, வடக்கிலும் தெற்கிலுமாக இரு கூறாகப் பிரிந்து செல்கின்றது. வடக்குப் பாதை, புல்கர்-கிப்சாக் (Bulgar–Kypchak) பகுதியூடாக கிழக்கு ஐரோப்பாவுக்கும், கிரீமியன் தீவக்குறை க்கும் (Crimean peninsula) சென்று அங்கிருந்து, கருங்கடல், மர்மாராக் கடல் என்பவற்றைக் கடந்து பால்கன் பகுதியூடாக வெனிசை அடைகின்றது.

தெற்குப் பாதை, துருக்கிஸ்தான்-கோராசான் ஊடாக மெசொப்பொத்தேமியா, அனதோலியா சென்று அங்கிருந்து தெற்கு அனதோலியாவிலுள்ள அண்டியோச் ஊடாக மத்தியதரைக் கடலுக்கோ அல்லது, லேவண்ட் ஊடாக எகிப்துக்கும், வட ஆபிரிக்காவுக்குமோ செல்கிறது.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுப்_பாதை&oldid=824953" இலிருந்து மீள்விக்கப்பட்டது