ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: simple:African National Congress
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Африкалық ұлттық конгресс
வரிசை 52: வரிசை 52:
[[it:African National Congress]]
[[it:African National Congress]]
[[ja:アフリカ民族会議]]
[[ja:アフリカ民族会議]]
[[kk:Африкалық ұлттық конгресс]]
[[ko:아프리카 민족회의]]
[[ko:아프리카 민족회의]]
[[ku:ANC]]
[[ku:ANC]]

19:46, 21 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
African National Congress
தலைவர்ஜேக்கப் சூமா
தொடக்கம்ஜனவரி 8, 1912
தலைமையகம்லுதுலி மாளிகை
54 சாவர் வீதி
ஜோகானஸ்பேர்க்
கொள்கைமக்களாட்சி
பன்னாட்டு சார்புசோசலிசம்
நிறங்கள்மஞ்சள், பச்சை, கருப்பு
இணையதளம்
www.anc.org.za

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress, அல்லது ANC) என்பது தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியாகும். மே 1994 ஆண்டு முதல் இது தென்னாபிரிக்கத் தொழிற்சங்கக் கூட்டணி, தென்னாபிரிக்க பொதுவுடமைக் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளது. "இடதுசாரிகளின் ஒழுங்குமுறை சார்ந்த படை" எனட் தம்மை அழைத்துக் கொள்கிறது[1].

இவ்வமைப்பு முதன் முதலாக 1912 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் "தென்னாபிரிக்கப் பழங்குடியினரின் தேசிய காங்கிரஸ்" (South African Native National Congress) என்ற பெயரில் தென்னாபிரிக்க கருப்பினர்களின் உரிமைகளை அதிகரிக்கவென ஆரம்பிக்கப்பட்டது. ஜோன் டூபே என்பவர் இக்கட்சியின் முதலாவது தலைவர். இவருடன் எழுத்தாளரும் கவிஞருமான சோல் பிளாட்ஜி இவ்வமைப்பின் தொடக்ககால உறுப்பினராவார். இவ்வமைப்பின் பெயர் 1923 ஆம் ஆண்டில் தற்போது வழங்கும் "ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்" என்று மாற்றப்பட்டது. இதன் இராணுவப் பிரிவு 1961 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

நிறவெறிக் கொள்கை 1994 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த நாளில் இருந்து இக்கட்சியே ஆட்சியில் உள்ளது. 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும், அதன் பின்னர் 2004 ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் இக்கட்சி தனது பெரும்பான்மைப் பலத்தை அதிகரித்து வந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. ANC Party Declaration from the African National Congress, retrieved 15 May 2008

வெளி இணைப்புகள்