அரசு சார்பற்ற அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Үкіметтік емес ұйымдар
சி r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:ארגון חוץ ממשלתי
வரிசை 31: வரிசை 31:
[[fr:Organisation non gouvernementale]]
[[fr:Organisation non gouvernementale]]
[[gl:Organización non gobernamental]]
[[gl:Organización non gobernamental]]
[[he:ארגון חוץ ממשלתי]]
[[hi:अशासकीय संस्था]]
[[hi:अशासकीय संस्था]]
[[hr:Nevladina organizacija]]
[[hr:Nevladina organizacija]]

08:15, 21 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

ஒரு அரசு சார்பற்ற அமைப்பு தனியாரால் அல்லது அரச பங்களிப்போ, சார்பாண்மையோ அற்ற நிறுவனங்களினால் சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.

பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,000 அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும். ரஷ்யாவில் சுமார் 400,000 அரசு சார்பற்ற அமைப்புக்களும், இந்தியாவில் 1 மில்லியனுக்கும், 2 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான அமைப்புக்களும் இருப்பதாகக் கருதப்படுகின்றது.

வரலாறு

அனைத்துலக அரசு சார்பற்ற அமைப்புக்களின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து தொடங்குகின்றது எனலாம். இவை அடிமை ஒழிப்பு இயக்கம், பெண்கள் துன்பங்களுக்கு எதிரான இயக்கம் போன்றவை தொடர்பில் முக்கியமானவையாக இருந்தன. உலக ஆயுதக் களைவு மகாநாட்டுக் காலத்தில் இவற்றின் முக்கியத்துவம் உச்சக் கட்டத்தை எட்டியது எனலாம். எனினும் அரசு சார்பற்ற அமைப்பு என்னும் பெயர் 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்துக்குப் பின்னரே பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயத்தின் அத்தியாயம் 10 பிரிவு 71, அரசோ அல்லது உறுப்பு நாடுகளோ அல்லாத அமைப்புக்கள் ஆலோசனை வழங்கும் அமைப்புக்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசு_சார்பற்ற_அமைப்பு&oldid=823743" இலிருந்து மீள்விக்கப்பட்டது