பதிப்புரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Аўтарскае права
சி r2.5.4) (தானியங்கிஇணைப்பு: kk:Авторлық куәлік
வரிசை 61: வரிசை 61:
[[jv:Hak cipta]]
[[jv:Hak cipta]]
[[ka:საავტორო უფლება]]
[[ka:საავტორო უფლება]]
[[kk:Авторлық куәлік]]
[[ko:저작권]]
[[ko:저작권]]
[[ku:Copyright]]
[[ku:Copyright]]

22:51, 19 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

காப்புரிமைச் சின்னம்

பதிப்புரிமை (Copyright) என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது. சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.

காப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிபாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஒவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

முந்திய காலங்களில் பதிப்புரிமை சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது.காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது.தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.

சர்வதேச பதிப்புரிமை சட்டம்

இலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்பிற்க்கான பெர்ன் மாநாடு


இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது.இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும்.இம்மாநாடு தனது அங்க நாடுகள் தமது எல்லைகளில் கலை , இலக்கிய , அறிவியல் துறைகளில் உருவாகும் ஆக்கங்களுக்கு பாதுகாப்பு தர வலியுறுத்துகிறது.இம்மாநாடு தனது பல்வேறு முக்கிய அம்சங்களில் ஒன்றாக தேசிய நடத்துமுறையைக் கொண்டுள்ளது. இம்முறையின்படி ஒவ்வொரு அங்க நாடும் தமது குடிமக்களுக்கு தரும் பாதுகாப்பை மற்ற அங்கத்தினர் நாட்டின் குடிமக்களுக்கும் தருதல் வேண்டும்.

மேலும் பார்க்க

அறிவுசார் சொத்துரிமை

வணிகச் சின்னம்

புவிசார் குறியீடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிப்புரிமை&oldid=822526" இலிருந்து மீள்விக்கப்பட்டது