வரதட்சணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம்
வரிசை 3: வரிசை 3:
==வரதட்சணைக் கொடுமை==
==வரதட்சணைக் கொடுமை==


வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் [[கொடுமை|கொடுமையால்]] பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், புகுந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், புகுந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.


==இந்திய அரசின் சட்டங்கள்==
==இந்திய அரசின் சட்டங்கள்==

04:02, 4 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

வரதட்சணைக் கொடுமை

வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், புகுந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்திய அரசின் சட்டங்கள்

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்தியா அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை

  • வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

மகளிர் காவல் நிலையங்கள்

தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணைக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரதட்சணை&oldid=809447" இலிருந்து மீள்விக்கப்பட்டது