சோயா அவரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: frr:Soojabuan
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: jv:Dhelé
வரிசை 65: வரிசை 65:
[[it:Glycine max]]
[[it:Glycine max]]
[[ja:ダイズ]]
[[ja:ダイズ]]
[[jv:Dhelé]]
[[kn:ಸೋಯಾ ಅವರೆ]]
[[kn:ಸೋಯಾ ಅವರೆ]]
[[ko:대두]]
[[ko:대두]]

08:53, 2 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

சோயா அவரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
கி. மக்ஸ்
இருசொற் பெயரீடு
கிளைசீன் மக்ஸ்
(L.) Merr.

சோயா அவரை கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு அவரை இனத் தாவரம். ஆண்டுத் தாவரமான இது, சீனாவில் உணவாகவும், மருந்துகளிலும் 5,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பட்டு வருகின்றது. சோயா மனிதனுக்குத் தேவையான எல்லா அமினோ அமிலங்களையும் குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருப்பதனால், இது புரதச் சத்துக்கான சிறந்த மூலமாக உள்ளது. சோயா பல தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களில் சேர்பொருளாக உள்ளது. பால் பொருட்களுக்கான மாற்று உணவுப்பொருள்களும் இவற்றுள் அடங்கும்.

நீண்டகாலப் பயிரிட்டு வளர்க்கும் பிற தாவரங்களைப் போலவே தற்கால சோயாத் தாவரத்துக்கும், தானாகக் காட்டில் வளரும் சோயாத் தாவரத்துக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பயிரிட்டு வளர்க்கும் சோயா இனங்கள் பல வகைகளில் உள்ளன.

கிளைசீன் வைல்ட் (Glycine Willd) என்னும் தாவரப் பேரினம், கிளைசீன், சோஜா என்னும் இரண்டு துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படும் சோயா (G. max (L.) Merrill), காட்டுச் சோயா (G. soja Sieb.& Zucc.) என்பன இரண்டும் சோஜா துணைப்பேரினத்துள் அடங்குகின்றன. இரு இனங்களுமே ஆண்டுத் தாவரங்களே. கிளைசீன் சோஜா சீனா, ஜப்பான், கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் காட்டுத் தாவரமாக வளர்கிறது. சோயா அவரையின் காட்டு மூதாதை இதுவே. தற்காலத்தில் கிளைசீன் சோஜா குறைந்தது 16 வகையான பல்லாண்டுத் தாவர வகைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயா_அவரை&oldid=808025" இலிருந்து மீள்விக்கப்பட்டது