விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 103: வரிசை 103:
#--[[பயனர்:Manikandand|Manikandand]] 09:57, 23 சூன் 2011 (UTC)
#--[[பயனர்:Manikandand|Manikandand]] 09:57, 23 சூன் 2011 (UTC)
#--[[பயனர்:செல்வா|செல்வா]] 17:23, 23 சூன் 2011 (UTC)
#--[[பயனர்:செல்வா|செல்வா]] 17:23, 23 சூன் 2011 (UTC)
#----[[பயனர்:Karthickbala|கார்த்திக்]] 18:34, 23 சூன் 2011 (UTC)


==== எதிர்ப்பு ====
==== எதிர்ப்பு ====

18:34, 23 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிப்பீடியா நிர்வாகியாக்கும்படி(sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். நிர்வாகிகளின் பொறுப்பு என்ன, அவர்கள் என்ன செய்வார்கள் என்று அறிய நிர்வாகிகள் பக்கம் சென்று பார்க்கவும். ஆங்கில விக்கியில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.

விதிமுறைகள்

பண்புகள்

விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிப்பீடியா சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளுக்கு விக்கிப்பீடியா மீது விசேட அதிகாரமெதுவும் இல்லாவிட்டாலும், பல பயனர்களால், விசேடமாகப் புதியவர்களால் விக்கிப்பீடியாவின் தொடர்பாளர்களாகப் பார்க்கப்படுவது காரணமாக, ஓரளவு உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும் போது நல்ல மதிப்பிடு திறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்க வேண்டும். இத்தகைய பண்புகள் நியமனம் செய்யப்படுபவர்களிடம் உள்ளனவா என்று மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அவர்கள் போதிய அளவு காலம் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்து இருந்திருக்க வேண்டும். பெரும்பாலான புதிய நிர்வாகிகள் மூன்று மாதங்களுக்கு மேல் பங்களிப்பு செய்தவர்களாயும், 1000 தொகுப்புகளுக்கு மேல் செய்தவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையே நியமித்துக் கொள்ளலாம். ஆனாலும் மேற்சொன்ன எதிர்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.

நியமன முறை

நிர்வாகி நியமனத்திற்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் குறித்து பிற பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை கால அவகாசம் கொடுக்கப்படும். பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவில்லாதிருப்பின், இக்காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது). போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்து வரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக முன்னரே நீக்கி விடலாம். எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிப்பீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.

உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும். வாக்களிக்கும் போது, தயவுசெய்து நீங்கள் வாக்களிக்கும் நியமனத்தின் மொத்த வாக்குத் தொகையையும் உரியவாறு மாற்றவும். வாக்குத் தொகை மொத்தத்துக்கான குறியீட்டு வடிவம் பின்வருமாறு: (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை).

அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.

படிமுறைகள்

  1. நீங்கள் நியமிக்க விரும்புவர் மேல் குறிப்பிட்டதுக்கு ஏற்ப பொறுப்பு உள்ளதா எனபதை உறுதி செய்யவும்.
  2. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும்.
  3. இங்கு புதிய பகுதி ஒன்றில் அவரது பயனர் பெயரை பிரதியிடவும்.
  4. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும். அதன் கீழ் உங்கள் ஒப்பத்தை இடவும்.
  5. குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந் நியமனத்தை ஏற்றுக் கொண்டால் இப்பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக் கொள்ளவும்.
  6. திகதியை (00:00:00) இடவும். குறைந்தது ஏழு நாட்களுக்கு வாக்கு நடக்கும்.
  7. விக்கிப் பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/கருத்து எனது தமது நிலைப்பாடுகளை முன் வைக்க அழைக்கப்படுவார்கள்.
  8. குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கும் பட்சத்தில் அந்தப் பயனர் நிர்வாகியாக இருப்பார்.

முந்தைய வேண்டுகோள்கள்

நடப்பு வேண்டுகோள்

மாகிர் (சூன் 15, 2011 -சூன் 22, 2011) (வாக்கு: 18|0|0)

மாகிர், 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பல்வேறு வகைகளில் பங்களித்து வருகிறார். நேரடியாக கட்டுரையாக்கத்தில் முனைப்பாகச் செயல்படும் முன்னே, தமிழ் விக்கிப்பீடியா சார்ந்து பல இணையக் கருவிகளை உருவாக்கி உள்ளார். தற்போதும், வார்ப்புரு உருவாக்கம், தானியங்கிப் பராமரிப்பு உட்பட அவரது பல்வேறு பணிகள் நுட்பம் சார்ந்தவை. மாகிருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பது அவரது பணிகளைத் திறன்பட செய்ய உதவும். எனவே, மாகிருக்கு நிருவாக அணுக்கம் அளிக்க பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி 16:18, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

உங்களது பரிந்துரைக்கு மிக்க நன்றி இரவி. இந்த நிருவாக அணுக்கம் நுட்பம் சார்ந்த எனது பங்களிப்பிற்கு மேலும் உதவும். நன்றி. -- மாகிர் 04:38, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. -இரவி 16:18, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
  2. --P.M.Puniyameen 16:27, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
  3. --Natkeeran 16:32, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
  4. --மயூரநாதன் 17:59, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
  5. --Kanags \உரையாடுக 21:15, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
  6. --மணியன் 05:08, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  7. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:11, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  8. --சஞ்சீவி சிவகுமார் 06:34, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  9. --அஸ்வின் 07:13, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  10. --சிவகோசரன் 09:02, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  11. --செந்தி//உரையாடுக// 12:21, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  12. --சிவக்குமார் \பேச்சு 15:22, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  13. --சித்தாட்ரீம்ஸ் 10:52, 17 சூன் 2011 (IST)
  14. ----Santharooban 06:18, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]
  15. --சோடாபாட்டில்உரையாடுக 14:16, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]
  16. --குறும்பன் 11:56, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]
  17. --தகவலுழவன் 13:42, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]
  18. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:00, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]
  19. --செல்வா 17:21, 23 சூன் 2011 (UTC)[பதிலளி]
  20. ----கார்த்திக் 18:33, 23 சூன் 2011 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கருத்து

கேள்விகள்
  • தமிழ் விக்கிச்சூழலில் நிருவாகிகள் செய்ய வேண்டிய பணிகளுள் எது முன்னுரிமையானது என்று நீங்கள் கருதுகிறீர்கள். நிருவாகி அணுக்கம் கிடைக்குமெனில் அப்பணியினைச் செய்ய எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 05:13, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  1. சோடாபாட்டில், எனது கண்ணோட்டத்தில் தமிழ் விக்கியில் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் ஏராளமாக உள்ளது. தானியங்கி பணிகள் கிடப்பில் உள்ளது. உதா. ஊர்கள் பற்றிய கட்டுரை நூற்றுக்கணக்கில் சேர்க்கவேண்டியுள்ளது. தொழில்நுட்ப பங்களிப்பாளர்களை தவிக்கு பங்களிக்க தூண்டவேண்டும். பயிற்சி பெற்ற தானியங்கி பங்களிப்பாளர்கள் தவிக்கு இன்னும் அதிகம் இருக்க வேண்டும். விக்கியிடை இணைப்புகள் தொடர்ந்து சேர்க்கப்படவேண்டும்.
  2. விக்கி குறுந்தட்டுதிட்டம் வேகம் பெறாமல் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலும் பல மாணவர்களையும், ஆசிரியர்களையும் தவிக்கு பங்களிப்பாளர்களாக குறைந்தபட்சம் வாசகர்களாக கிடைக்கும். இதுவரை 250 கட்டுரைகள் அந்த திட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை 500 கட்டுரைகளாக்கி அந்தக் கட்டுரைகளில் (தானியங்கி உதவியுடன்), கட்டுரை திருத்தம் செய்ய கோரி அந்தந்த கட்டுரைகளில் அறிவிப்பு செய்யலாம் என்றிருக்கிறேன்.
  3. தவியை ஐஏஎஸ் தேர்விற்கு ஆரம்ப கட்ட தகவல்களைப் பெறும் களமாக உருவாக்கவேண்டும். காட்டாக ஐஏஎஸ் தேர்விற்கு நடப்பு நிகழ்வுகள், பத்திரிக்கை தலையங்கங்களை தினமும் படிக்க, கவனிக்க சொல்கிறார்கள். விக்கியிலும் அதுபோன்ற கட்டுரைகளை பங்களிப்பாளர்கள் அவ்வப்போது எழுதுகிறார்கள். ஆனால் இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் எழுதப்படவேண்டும். இதில் அனுபவமிக்கவர்களை விக்கி பங்களிப்பாளர்களாக மாற்ற முயற்சிக்கவேண்டும்.
  4. அநேக கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய வார்ப்புருக்களை பூட்ட நினைத்துள்ளேன். (சிறு தவறு ஏற்பட்டாலும் எல்லா கட்டுரைகளையும் சொதப்பிவிடும்). ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு விக்கி நிகழ்வுகளில் பங்காற்றிய அனுபவத்துடன் மற்ற விக்கியர்களுடன் இணைந்து மேலும் பட்டறைகள் நடத்த முயலுவேன். நன்றி -- மாகிர் 08:06, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
மாகிர், முன்கூட்டியே பல பக்கங்கள் / வார்ப்புருக்களைப் பூட்டுவது விரும்பத்தக்கதல்ல. குறிப்பிட்ட வார்ப்புரு / பக்கம் தொடர் விசமத்துக்கு ஆளானால் மட்டும் பூட்டுவது நன்று. ஒரு கணக்குக்கான தானியங்கி அணுக்கம் என்பது முன்கூட்டியே குறிப்பிட்ட பணிகளுக்கே வழங்கப்படுகிறது. எனவே, நிருவாகப் பொறுப்பு ஏற்ற பிறகு நீங்கள் மேற்கொள்ளும் புதிய பல்வேறு வகையான தானியங்கிப் பணிகளையும் முன்கூட்டியே முறையாக அறிவித்து மற்ற பயனர்களின் கருத்தறிந்து செயல்படுவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். நன்றி --இரவி 20:25, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
இரவி, தானியங்கி மட்டுமல்ல நிருவாகப் பொறுப்பும் கூட குறிப்பிட்ட சில பணிகளுக்காக மட்டுமே வழங்கப்படுவதை அறிவேன். எனினும் நினைவூட்டலுக்கு நன்றி. முறையாக அறிவிப்பு செய்த பிறகே எனது பணிகள் அமையும். -- மாகிர் 05:53, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]
  • மாகிர், இஆப (IAS) தேர்விற்குண்டான ஆரம்பகட்டத் தகவல்களைப் பெறும் களமாக விக்கிப்பீடியாவை மாற்ற வேண்டும் என்று கருதுவது நன்று. ஆனால் அதற்குத் தொழில்நோக்கானவர்களையும் (Professional) நீங்கள் கூறியுள்ளது போல அனுபவம் மிக்கோரையும் விக்கிப்பக்கம் வரவழைக்க வேண்டியிருக்கும். ஏனெனில், தகவல்பிழை என்பது கண்டிப்பாக இருக்கக்கூடாது. இவ்வாறு, அவர்களை இங்கு அழைத்துவர நீங்கள் ஏதேனும் திட்டம் வைத்துள்ளீர்களா? அவ்வாறு வந்தால், அவர்களுடைய பங்களிப்பு எந்த அளவிலும் எதை மையப்படுத்தியும் (கட்டுரை உருவாக்கம், தகவற்சேர்ப்பு, உள்ளதகவல்திருத்தம்) இருக்கும் என்று நினைக்கலாம்? --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:57, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]
சூர்யபிரகாசு, நல்ல கேள்வி. பள்ளி, கல்லூரிகளில் பட்டறைகளை நடத்துவதன் மூலம் கல்வியாளர்களை விக்கியின் பக்கம் ஒரளவு ஈர்க்க முடியும். விக்கி10 சென்னையில் கொண்டாடியபோது தமிழ் செய்தித் தளங்களின் உதவியால் நல்ல வரவேற்பிருந்தது. சென்னையில் நடைபெற்ற பட்டறைக்கும் அதிக வரவேற்பிருந்ததை அறிவீர்கள். அதுபோன்ற பட்டறைகள் இன்னும் அதிகம் நடத்தும் போது இதுபோன்ற பங்களிப்பாளர்களின் வருகை அதிகரிக்கும் என்பது திண்ணம். கட்டுரை உருவாக்கம், தகவற்சேர்ப்பு, உள்ளதகவல்திருத்தம் போன்றவைகளை நாம் வரையறுக்க முடியாது. அது அவரவர்களின் விருப்பம். பயனர்களின் பங்களிப்புகளை பார்த்து ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை நாம் வழங்கலாம். நன்றி -- மாகிர் 06:37, 19 சூன் 2011 (UTC)[பதிலளி]
  • என் தனிக்கருத்தே இது. மாகிர், மிகச்சிறந்த முறையிலே நிருவாகப் பணிகளைச் செய்ய இயலும் என நான் கருதுகின்றேன். நிருவாகப் பொறுப்பு இல்லாமலே பல பணிகளையும் பலரும் செய்யலாம் எனினும், மாகிர் போன்ற நிரலியறிவும், பங்களிக்கும் உளப்பான்மையும் உள்ளவர்கள் நிருவாகியாக இருப்பது த.வி-க்குப் பயன் அளிக்க வல்லது. ஆனால் இவற்றைப் பொது நன்மைக்காக, முறையுடன், தக்க திறந்த அணுகுமுறையுடன் செய்வது நல்லது. செய்வார் என்பது என் நம்பிக்கை. --செல்வா 17:31, 23 சூன் 2011 (UTC)[பதிலளி]

தேனி. மு. சுப்பிரமணி (சூன் 15, 2011 -சூன் 22, 2011) (வாக்கு: 17|0|0)

தேனி. மு. சுப்பிரமணி கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையிலும் சிறப்பாக பங்களித்து வருகிறார். தமிழ்நாடு சார்ந்த பல தகவல்களைத் தொகுத்துத் தந்தது இவரது சிறப்பான பங்களிப்புகளில் ஒன்று. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஏற்பாடுகளில் கலந்து கொண்டது, விக்கிப்பீடியா குறித்து தமிழில் நூல் எழுதியது, அனைத்து பயனர்களுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பது, இவரது பங்களிப்புகளை இன்னும் சிறப்பாகவும் முனைப்புடனும் செய்ய உதவும் என்று எண்ணுகிறேன். எனவே, தேனி. மு. சுப்பிரமணிக்கு நிருவாக அணுக்கம் அளிக்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி 16:18, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

என்னை நிருவாக அணுக்கத்திற்குப் பரிந்துரைத்த இரவிக்கு நன்றி. இரவியின் எதிர்பார்ப்பிற்கேற்பவும், தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள்/பங்களிப்பாளர்கள் அனைவரது ஒத்துழைப்புடனும் என்னுடைய விக்கிப்பணி மேலும் சிறப்பாக அமைய நிருவாக அணுக்கம் உதவும் என நம்புகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:05, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. - இரவி 16:18, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
  2. --P.M.Puniyameen 16:27, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
  3. --Natkeeran 16:32, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
  4. --மயூரநாதன் 18:00, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
  5. --Kanags \உரையாடுக 21:15, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
  6. --மணியன் 05:09, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  7. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:12, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  8. --சஞ்சீவி சிவகுமார் 06:34, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  9. --அஸ்வின் 07:13, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  10. --சிவகோசரன் 09:03, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  11. --செந்தி//உரையாடுக// 12:21, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  12. --சிவக்குமார் \பேச்சு 15:22, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
  13. --Santharooban 06:19, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]
  14. --குறும்பன் 11:56, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]
  15. --Gcsekaran 12:01, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]
  16. --Nan 13:17, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]
  17. --தகவலுழவன் 13:44, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]
  18. --Manikandand 09:57, 23 சூன் 2011 (UTC)[பதிலளி]
  19. --செல்வா 17:23, 23 சூன் 2011 (UTC)[பதிலளி]
  20. ----கார்த்திக் 18:34, 23 சூன் 2011 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கருத்து

கேள்விகள்

தமிழ் விக்கிச்சூழலில் நிருவாகிகள் செய்ய வேண்டிய பணிகளுள் எது முன்னுரிமையானது என்று நீங்கள் கருதுகிறீர்கள். நிருவாகி அணுக்கம் கிடைக்குமெனில் அப்பணியினைச் செய்ய எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 05:13, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகிகள் தேர்வில் கருத்து எனும் தலைப்பில் கேள்விகள் அவசியமில்லை என்று உரையாடல் பக்கத்தில் முன்பே எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன்.இருப்பினும் நிருவாகியாக அணுக்கம் பெறுபவர்கள் அந்த அணுக்கத்தைக் கொண்டு என்னென்ன பணிகளை செய்வார்? என்பதை முன்கூட்டியே அறிய விரும்பும் தங்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு ஒன்றும் செய்யாமலிருப்பதை விட, தமிழ் விக்கிப்பீடியாவின் தேவைகளை அறிந்து, அவற்றில் எனது திறனுக்கேற்ற செயல்பாடுகள் அனைத்தும் அவசியம் இருக்கும். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:54, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
கேள்விகள் குறித்தவைகளை வாசித்தேன். நாம் செய்யவேண்டிய முன்னேற்றப் பணிகள் ஏராளம். அப்படியிருக்க, பல பேச்சுபக்கங்களில், அதிக நேரம் செலவிடுவது, வருத்தமாக இருக்கிறது. அதற்கு மாற்றாக, சிறந்த கட்டுரைகளை, அனைவரும் இணைந்து எழுதுவோம். இந்த பணியினை நான் எடுத்து செய்யலாமென்று இருக்கிறேன் என்று கூறிய பிறகு, அதனைமுடிக்கவில்லையெனில், யாரும் தவறென எண்ணப் போவதில்லை.அடுத்தவர் குறிப்பிட்ட காலம் வரை, அந்த பணியினைச் செய்யாமல், மற்றவைகளைக் கவனிப்பர். எனவே, அறிதல் அவசியம். அறிதலுக்காக கேள்விகள் அவசியமே. இங்கு கேள்விகள், அரிதலுக்காக அல்ல. வணக்கம்14:15, 18 சூன் 2011 (UTC)உழவன்+உரை..
  • தேனி சுப்பிரமணி, "தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகிகள் தேர்வில் கருத்து எனும் தலைப்பில் கேள்விகள் அவசியமில்லை என்று உரையாடல் பக்கத்தில் முன்பே எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன்" என்கின்றீர்கள். ஆனால், கேள்விகள் தேவை என்று பிறர் பலரும் கருதுவதால்தானே கேள்விகள் கேட்கின்றார்கள் என்று நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் அல்லவா? விக்கிப்பீடியாவின் அடிப்படைகளில் ஒன்று ஒருவர் நன்னோக்கத்துக்காக, மேம்பாட்டுக்காகவே ஒன்றைச் செய்கின்றார்க் என்று கொள்ளல் வேண்டும் அல்லவா? நீங்கள் இவற்றை அறியாதவர்கள் இல்லை. விக்கிப்பீடியா பற்றி நூலே எழுதியுள்ளீர்கள். ஆனால் சோடாபாட்டிலின் கேள்விக்கு நீங்கள் தந்த மடலின் அணுகுமுறையை, அது தெரிவிக்கும் கருத்துக்கோணத்தை அருள்கூர்ந்து நடுநின்று நோக்குங்கள். மாற்றுக் கருத்தை வைத்தாலும் வளர்முகமாக, இணக்கம் ஏற்படுமாறும் கூறிச் செயல்படல் நல்லது அல்லவா? சோடாபாட்டில் கேட்ட கேள்விகள் மிகவும் முக்கியமானவை! நீங்கள் "அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு ஒன்றும் செய்யாமலிருப்பதை விட, தமிழ் விக்கிப்பீடியாவின் தேவைகளை அறிந்து, அவற்றில் எனது திறனுக்கேற்ற செயல்பாடுகள் அனைத்தும் அவசியம் இருக்கும்."என்று கூறியதை முதல் பகுதியை விட்டுவிட்டு, "தமிழ் விக்கிப்பீடியாவின் தேவைகளை அறிந்து, அவற்றில் எனது திறனுக்கேற்றவாறு செயல்படுவேன்" என்று மட்டும் கூறியிருந்தால், எப்படி இருந்திருக்கும் என்று அருள்கூர்ந்து ஒருசிறிது எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். முதல் பகுதியை இட்டிருப்பதால் என்ன பயன் என்று எண்ணிப்பாருங்கள்! நிருவாகி சில நேரம் பயனர்களிடையே சிக்கல்களைத் தீர்க்க வேண்டிய தேவை இருக்கலாம். அப்பொழுது தக்க அணுகுமுறை தேவைப்படும். சொல்வதை எப்படிச் சொல்ல வேண்டும், எப்படிச் சொன்னால் நடுநிலை பிறழாது இருக்கும், நம் சொற்கள் எவ்வாறு பிறரால் உள்வாங்கக்கூடும் என்றெல்லாம் ஓர் அறிதல் இருத்தல் வேண்டும். உங்கள் பங்களிப்புகளும் நீங்கள் நிருவாகியாக இருந்து அளிக்கும் பங்களிப்புகளையும் எல்லோரையும் போலவே நானும் மிகவும் வரவேற்கின்றேன், எதிர்பார்க்கின்றேன். எனினும் நீங்கள் இங்கே நான் குறிப்பிட்ட கருத்துகளை நல்ல முறையிலே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். நல்வாழ்த்துகள்!--செல்வா 17:52, 23 சூன் 2011 (UTC)[பதிலளி]