துறவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be:Манах மாற்றல்: eu:Monakotza
வரிசை 88: வரிசை 88:


[[als:Mönch]]
[[als:Mönch]]
[[be:Манах]]
[[bg:Монах]]
[[bg:Монах]]
[[bo:བཙུན་པ།]]
[[bo:བཙུན་པ།]]
வரிசை 101: வரிசை 102:
[[es:Monacato]]
[[es:Monacato]]
[[et:Munk]]
[[et:Munk]]
[[eu:Fraide]]
[[eu:Monakotza]]
[[fi:Munkki (uskonto)]]
[[fi:Munkki (uskonto)]]
[[fiu-vro:Muuk]]
[[fiu-vro:Muuk]]

09:04, 23 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

துறவி என்பது உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவர், சந்நியாசி. [1][2] துறவிகள் பெரும்பாலும் காவி அணிவது வழக்கம்.

துறவு பொதுக்கருத்து

  • "துறவு என்பது முதிர்ச்சி அடைந்த ஒரு மன நிலை.

இயற்கையுடன் மனிதன் நடத்தும் இறுதிப் போராட்டமே துறவு.

இல்லறத்தவரின் மன நிலை வேறு. அவர்களின் சிந்தனைத் தளங்கள் வேறு. இல்லறத்தவர்கள் மனைவியை அல்லது காதலியை காணும் போது அவர்களுக்கு காதல் உணர்வு வருகிறது, அதை அவர்கள் தடுக்க விரும்பவில்லை, அவர்களால் தடுக்க முடியவும் இல்லை. அதே போலத்தானே துறவிக்கும் இருக்கும் என சில பரந்த உள்ளம் படைத்தவர்கள் முடிவு கட்டி விடுகின்றனர். எனவே தான் “விடுய்யா … பாவம்…. நமக்கு ஆசை இல்லையா…. அதைப் போல அவனுக்கும் ஆசை இருக்குமையா” என, நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் வகையிலே கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஒருவன் முதலில் எதற்காக துறவு நிலையை மேற்கொள்ள வேண்டும் என எண்ணிப் பார்க்க வேண்டும். புத்தர் எதற்க்காக துறவு நிலையை மேற்கொண்டார். ஒரு நாள் அவர் ஒரு மிக வயதான மனிதர், ஒரு பெரு நோயாளி , ஒரு பிணம் ஆகியவற்றிக் கொண்டார். துன்பங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே மனிதன் இருப்பதாய் அவர் உணர்ந்து கொண்டு விட்டார். துன்பம் இல்லாத நிலையை அடைய அவர் உறுதியான முடிவு எடுத்து விட்டார். அந்த துன்பம் இல்லாத நிலையை, துன்பங்களில் இருந்து விடுபட்ட நிலையை அடைவதை தவிர வேறு எதுவும் தனக்கு அவசியமல்ல , முக்கியமல்ல என்பதை புத்தர் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டார். அன்பு மனைவியை, அருமைக் குழந்தையை விட்டு விட்டு துறவு பூண்டு காட்டுக்குப் போனார்.

இந்த்ரியார்த்தேஷு வைராக்கிய – மன அஹங்கார எவ ச ஜன்ம மிருத்யு ஜரா வியாதி சுக துக்க தோஷானு அனுதர்ஷன (கீதை (13-8))

பிறப்பு இறப்பு மூப்பு சாக்காடு உள்ள வாழ்க்கையை உணர்ந்து புலன் இன்பங்களை விட்டு வைராக்கிய மன நிலை அடைபவன்!என்கிறது கீதை!

இந்த உலகத்தில் நாம் இன்பம் என்று கருதும் ஒவ்வொரு பொருளும், உண்மையில் நாம் சிக்கிக் கொண்ட கண்ணி வலையே (trap) என்பதே துறவியின் மன நிலை .

யாதனின் யாதனின் நீக்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் (குறள் - 341, அத்தியாயம் - துறவு)

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை என்கிறார் வள்ளுவர்.

தன சவுக்கியமு தா நெறுகக யொருலகு தகு போதன சுகமா? கனமகு புலி கோ ரூப மைதே தியாகராஜனுதன சிசுபாலு கல்குனோ ராமா நீ யெட

இந்த உலகத்தவர் சிலர் செல்வம் மற்றும் சுகங்களை தேடியவாறே வுபதேசமும் செய்கின்றனர். பசுத்தோல் போர்த்திய புலி பால் குடுக்குமா என்கிறார் தியாகராஜர்!

இயற்கையிடம் வாங்கிய அடி போதும், இயற்கையே இனி நீ குடுக்கும் இன்பமும் வேண்டாம், துன்பமும் வேண்டாம், உன்னிடம் அடிமையாக வாழாமல் விடுதலை பெற்று சுதந்திரம் அடைவேன் என, வாங்கிய அடியின் வலியில், வேதனையின் மன உறுதி பெற்று ஒருவன் மேற்கொள்வதே துறவு." [3]

புத்த மதம்

புத்த மதக் கருத்து

புத்த மதத் துறவிகள்

படிமம்:Tenzin Gyatzo foto 1.jpg
தலாய் லாமா

சமண மதம்

சமண மதக் கருத்து

சமணம் மதத் துறவிகள்

இந்து மதம்

இந்து மதக் கருத்து

இந்து சமயம் "மனிதனின் வாழ்க்கையை பெரியோர்கள் நான்குவகையாக பிரித்தார்கள். அவைகள் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், துறவறம் என்று கூறப்படுகின்றன. அவற்றில் பிரம்மச்சரியம் என்பது கிரகஸ்தம் ஆவதற்கு முன்பு கடைபிடிக்கும் சாதகர் நிலை(பயிற்சி நிலை) எனவும், வனப்பிரஸ்தம் என்பது துறவறம் மேற்கொள்வதற்கான சாதகர் நிலை எனவும் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை பிறந்ததிலிருந்து பதினாறு வயது வரை பாலபருவம் எனவும் ,அந்த சமயம் அவனை எந்த நியதிகளும் கட்டுபடுத்துவதில்லை. அடிப்படைக் கல்வி மட்டுமே கட்டுபடுத்தும்.

பதினாறு வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை அவன் பிரம்மச்சாரி, அந்த சமயம் வாழ்க்கைகல்வியை கிரகஸ்தனாக இருப்பதற்கு வேண்டிய சகல விதமான விஷயங்களையும் படிப்பறிவாக அறிந்து கொள்கிறான்.

இருபத்து நான்கு வயதில் பிரம்மச்சரிய நிலையை முடித்து தான் கற்ற கல்வியை தனக்கென்று இறைவனால் உருவாக்கப்பட்ட மனைவியுடன் சேர்ந்து கிர்கஸ்தனாகி அனுபவ நிலைக்கு கொண்டு வருகின்றான். அந்த நிலை ஐம்பத்தாறு வயது வரை நீடிக்கிறது.

ஐம்பத்தாறு வயதிலிருந்து மனிதன் வனப்பிரஸ்த நிலைக்கு சென்றுவிடவேண்டும். அதாவது எதிலும் பொதுவான நோக்கம் கொண்டு துறவு நிலைப்பற்றி முழுமையாக படிப்பறிவாக அறிய வேண்டும். அதிகபட்சமாக அவன் எழுபத்திரண்டு வயதுக்கு மேல் வாழ்ந்தால் முற்றிலும் துறவியாகி விடவேண்டும்." [4] என்று மனிதன் வாழ்க்கையை நான்காகப் பிரித்துத் துறவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்கிறது

இந்து மதத் துறவிகள்

கிறித்துவ மதம்

ஆசிர்வாதப்பர் சபைத் கிறித்தவ துறவி

கிறித்தவத்தில் துறவி எனப்படுவோர் துறவற சபையில் சேர்ந்து, அச்சபையின் சட்டங்களுக்கு கீழ்படிந்து, கற்பு, ஏழ்மை, கேழ்படிதல் என்னும் வார்த்தை பாடுகளை எடுத்துக் கொண்டோரைக் குறிக்கும்.

கிறித்தவ துறவிகளுக்கும் குருக்களுக்கும் வேறுபாடு உள்ளது. எல்லா குருக்களும் துறவிகள் அல்லர்.

ஆதி திருச்சபைகளில் வனத்து சின்னப்பரை போல் துறவிகள் தனியே வாழ்கை நடத்தினர். பிற்காலத்தில் இத்தகையோர் ஒருங்கே கூடி ஒரு குழுமமாக செப வாழ்வில் இடுபட்டனர். இத்தகையோரை ஒழுங்கு படுத்த புனித ஆசிர்வாதப்பர் பல சட்டங்களை இயற்றினார்[5]. இவையே இன்றளவும் பல இடங்களில் உள்ளது.

இசுலாம் மதம்

இசுலாம் மதத்தைப் பொறுத்தவரை துறவுக்கு அனுமதியில்லாத நிலையே உள்ளது. இது குறித்து இசுலாம் தத்துவ நூல்களில் பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. [6]

இதையும் பார்க்க‌

கன்னித்துறவி

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=துறவி&oldid=799943" இலிருந்து மீள்விக்கப்பட்டது