எட்வின் ஆல்ட்ரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Баз Олдрын
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:बज़ एल्ड्रिन
வரிசை 60: வரிசை 60:
[[gl:Buzz Aldrin]]
[[gl:Buzz Aldrin]]
[[he:באז אולדרין]]
[[he:באז אולדרין]]
[[hi:बज़ एल्ड्रिन]]
[[hr:Buzz Aldrin]]
[[hr:Buzz Aldrin]]
[[hu:Edwin Aldrin]]
[[hu:Edwin Aldrin]]

08:55, 17 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

பஸ் ஆல்ட்ரின்
Buzz Aldrin
எட்வின் ஆல்ட்ரின்
விண்வெளி வீரர்
தேசியம் அமெரிக்கர்
தற்போதைய நிலை இளைப்பாறியவர்
பிறப்பு சனவரி 20, 1930 (1930-01-20) (அகவை 94)
கிளென் ரிட்ஜ், நியூ ஜேர்சி,  ஐக்கிய அமெரிக்கா
வேறு தொழில் போர் விமானி
படிநிலை கேணல், ஐக்கிய அமெரிக்க விமானப் படை
விண்பயண நேரம் 12 நாட்கள், 1 மணி, 52 நிமி
தெரிவு 1963 நாசா பிரிவு
பயணங்கள் ஜெமினி 12, அப்பல்லோ 11
பயண
சின்னம்

பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

விஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்றின் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார்.

Aldrin walks on the surface of the Moon during Apollo 11.

அக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக 02:56 UTC ஜூலை 21 (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.

Aldrin's lunar footprint in a photo taken by him, July 20, 1969.

"பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்[1][2].


மேற்கோள்கள்

  1. BuzzAldrin.com - About Buzz Aldrin: FAQ, பார்க்கப்பட்ட நாள் 2008-06-09
  2. Buzz Aldrin Quick Facts - Quick Facts - MSN Encarta

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வின்_ஆல்ட்ரின்&oldid=794896" இலிருந்து மீள்விக்கப்பட்டது