காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Theni.M.Subramaniஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 38: வரிசை 38:


[[பகுப்பு:பெண் நாயன்மார்கள்]]
[[பகுப்பு:பெண் நாயன்மார்கள்]]
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]

{{நாயன்மார்கள்}}
{{நாயன்மார்கள்}}



11:22, 29 மே 2011 இல் நிலவும் திருத்தம்

காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களுள் ஒருவராவர். இவர் காரைக்கால் மாநகரில் பிறந்தமையால் காரைக்கால் அம்மையார் என அழைக்கப்படுகிறார்.

இளமைக் காலம்

காரைவனம் எனப்பட்ட பகுதியில் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது இயற் பெயர் புனிதவதியாகும்.

இல்லறம்

திருமணப்பருவம் வந்ததும் பரமதத்தன் என்ற வணிகனுக்கு மணமுடித்து கொடுத்தனர் புனிதவதியின் பெற்றோர்.

மாங்கனி நிகழ்வு

ஒருசமயம் ஒரு சிவபக்தர் மூலமாக, இரண்டு மாங்கனிகளை பரமதத்தனிடம் கிடைக்கும்படி செய்தார் சிவன். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனை வீட்டிற்கு கொடுத்து விட்டான். சிவன், அவனது வீட்டிற்கு அடியார் வேடத்தில் சென்றார். கணவன் இல்லாத வேளையில் வந்த அவரை வரவேற்ற புனிதவதி அன்னத்துடன் ஒரு மாங்கனியையும் படைத்தாள். சாப்பிட்ட அடியார் அங்கிருந்து சென்று விட்டார். வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு அன்னம் பரிமாறிய புனிதவதி, ஒரு மாங்கனியை வைத்தாள். அதன் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டான் பரமதத்தன். கணவன் பேச்சை அப்படியே கேட்ட புனிதவதி செய்வதறியாது திகைத்தாள்.

சமையலறைக்குள் சென்று, தனக்கு ஒரு கனி கிடைக்க சிவனிடம் வேண்டினாள். அவள் கையில் ஒரு மாம்பழம் வந்து அமர்ந்தது. அதனை கணவனுக்கு படைத்தாள் புனிதவதி. முதலில் வைத்த மாங்கனியைவிட அதிக சுவையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டான். புனிதவதி நடந்ததை கூறினாள். பரமதத்தன் நம்பவில்லை. சிவன் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். புனிதவதியும் சிவனை வணங்கவே, கனி கைக்கு வந்தது. தன் மனைவி தெய்வப்பிறவி என நினைத்த பரமதத்தன், அவளை விட்டு பிரிந்தான்.

கணவனின் மறுமணம்

வேறு ஊருக்கு சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டான். அவளுக்கு பிறந்த குழந்தைக்கு "புனிதவதி' என்று பெயர் வைத்தான். புனிதவதி இதையறிந்து கணவனை அழைக்கச் சென்றான். அவன் அவளை தெய்வமாகக் கருதி காலில் விழுந்தான். இனி கணவனுடன் வாழ இயலாது என முடிவு செய்தாள்.

துறவறம்

புனிதவதியார் தன் கணவனுக்கான உடல் தனக்கு வேண்டாம் என்று சிவனை வேண்டி, சதையை உதிர்த்து, எலும்பாகி முதிய வடிவம் பெற்றார். அப்போது ""கைலாயம் வருக என அசரீரி உரைத்தது. கைலாயம் புனிதமான இடம் என்பதால், கால் ஊன்றாமல், தரையில் தலையை ஊன்றி தலைகீழாக கைலாயம் சென்றார் அந்த அம்மை. சிவன் அவரை எதிர்கொண்டு "அம்மையே" என்றார். தன் நடனத்தை காட்டியருளினார்.

எழுதியுள்ள நூல்கள்

கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியைல் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் இவரது இயற்பெயர் புனிதவதியார் ஆகும். நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர். இறைவனால் அம்மையே என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர் என்பர். இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (20 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் அமைந்தன.

இறைவனின் பெயர்கள்

இறைவனுக்கு அவர் பல பெயரிட்டு வழங்குகிறார். அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், ஒப்பினை இல்லவன், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன். ஆனால் சைவ சமயம் என்ற சொல்லுக்கு ஆதாரமான சிவன் என்ற சொல்லே அம்மையாரது பாடல்களில் எங்கும் காணப்படுகிறது.

ஆடற்பெருமானையே அவர் முழு முதலாகக் கருதி வழிபட்டாலும், தற்போது வழங்கும் நடராஜா என்ற பெயர் அவரால் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.


வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்கால்_அம்மையார்&oldid=778630" இலிருந்து மீள்விக்கப்பட்டது