பெருவிழுங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12: வரிசை 12:

'''1.''' [[நோய்க்காரணி]]கள்
'''2.''' Phagosome
'''3.''' [[இலைசோசோம்]]கள்
'''4.''' கழிவுப் பொருட்கள்
'''5.''' [[குழியமுதலுரு]]
'''6.''' [[கல மென்சவ்வு]]]]

'''1.''' [[நோய்க்காரணி]]கள்
'''2.''' Phagosome
'''3.''' [[இலைசோசோம்]]கள்
'''4.''' கழிவுப் பொருட்கள்
'''5.''' [[குழியமுதலுரு]]
'''6.''' [[கல மென்சவ்வு]]]]
===விழுங்கி அழித்தல் (Phagocytosis)===
===விழுங்கி அழித்தல் (Phagocytosis)===
பெருவிழுங்கியின் முக்கியமான தொழிகளில் ஒன்று [[நுரையீரல்|நுரையீரலில்]] முதிர்ச்சியடையாமலே இறந்து போகும் கலங்களை (necrotic cells) அகற்றுதல் ஆகும். நீடித்த [[அழற்சி]] நிலைகளில், இவ்வாறு இறந்த கலங்கள் அகற்றப்படுவது அவசியமாகும். இவ்வாறான இறந்த கலங்கள் அகற்றும் தொழிலைச் செய்யும் பெருவிழுங்கிகள் பொதுவாக நிலையானவையாகும். அதாவது நுரையீரல், [[கல்லீரல்]], [[நரம்பிழையம்]], [[எலும்பு]], [[மண்ணீரல்]], வேறு [[இணைப்பிழையம்]] போன்ற [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] நிலையாக இருந்து நோய்க்காரணி போன்ற வெளிப் பொருட்களை அழிப்பதுடன், தேவையேற்படின் புதிய பெருவிழுங்கிகளையும் உருவாக்கும்.
பெருவிழுங்கியின் முக்கியமான தொழிகளில் ஒன்று [[நுரையீரல்|நுரையீரலில்]] முதிர்ச்சியடையாமலே இறந்து போகும் கலங்களை (necrotic cells) அகற்றுதல் ஆகும். நீடித்த [[அழற்சி]] நிலைகளில், இவ்வாறு இறந்த கலங்கள் அகற்றப்படுவது அவசியமாகும். இவ்வாறான இறந்த கலங்கள் அகற்றும் தொழிலைச் செய்யும் பெருவிழுங்கிகள் பொதுவாக நிலையானவையாகும். அதாவது நுரையீரல், [[கல்லீரல்]], [[நரம்பிழையம்]], [[எலும்பு]], [[மண்ணீரல்]], வேறு [[இணைப்பிழையம்]] போன்ற [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] நிலையாக இருந்து நோய்க்காரணி போன்ற வெளிப் பொருட்களை அழிப்பதுடன், தேவையேற்படின் புதிய பெருவிழுங்கிகளையும் உருவாக்கும்.

பெருவிழுங்கியானது நோய்க்காரணிகளை உள்ளெடுக்கும்போது phagosome உருவாகும். பின்ன இது [[இலைசோசோம்|இலைசோசோமுடன்]] இணைந்து phagolysosome உருவாகும். இந்த phagolysosome இனுள் சுரக்கப்படும் [[நொதியம்|நொதியங்கள்]], வேறு [[நச்சுப்பொருள்|நச்சுப்பொருட்கள்]] போன்றவற்றால், நோய்க்காரணி [[சமிபாடு|சமிபாட்டுக்கு]] உட்படுத்தப்பட்டு அழிக்கப்படும்.

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

19:16, 11 மே 2011 இல் நிலவும் திருத்தம்

எலியில் பெறப்பட்ட ஒரு பெருவிழுங்கியின் தோற்றம். நோய்க்காரணியாக இருக்கும் சாத்தியமுடைய இரு துணிக்கைகளை விழுங்குவதற்காக தன் போலிக் கால்களை விரித்தபடியுள்ளது.

பெருவிழுங்கிகள் (Macrophages) எனப்படுபவை வெண்குருதியணுக்களில் ஒரு வகையான ஒற்றை உயிரணுக்களில் ஏற்படும் இழைய வேறுபாட்டின் மூலம் உருவாகும் இன்னொருவகை வெண்குருதியணுவாகும். இவை சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்களை உருவாக்கும், நோய்க்காரணிகள் போன்றவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் தன்மை கொண்டவை. மனிதரில் காணப்படும் பெருவிழுங்கிகள் கிட்டத்தட்ட 21 மைக்ரோமீற்றர் விட்டம் உடையவை[1].

ஒற்றை உயிரணுக்களும், பெருவிழுங்கிகளும் ஆபத்து விளைவிக்கக்கூடிய துணிக்கைகளை விழுங்கி, அவற்றை சமிபாடு அடையச் செய்வதன் மூலம் தொழிற்பாடு அற்றதாக்கிவிடும். வெளி துணிக்கைகள் நகராதனவாக இருந்தாலும், அல்லது நகருகின்றனவாக இருந்தாலும் பெருவிழுங்கிகள் அவற்றுக்கு எதிராகத் தொழிற்படும் ஆற்றல் கொண்டவை. பெருவிழுங்கிகள் பொதுவாக எல்லா வெளிப்பொருட்களையும் அழிக்கவல்ல நோயெதிர்ப்பு முறையிலும் (innate immune system), குறிப்பிட்ட நோய்க்காரணிக்கு எதிரான நோயெதிர்ப்பு முறையிலும் (adaptive immune system) தொழிற்பட வல்லது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராகத் தொழிற்படும்போது, அதனை நினைவில் கொண்டு மீண்டும் இலகுவாகவும், தொடர்ந்தும் தொழிற்படும் இயல்பைக் கொண்டிருக்கும். அத்துடன் இப்பெருவிழுங்கிகள் நிணநீர்க் கலங்கள், வேறும் நோயெதிர்ப்பு கலங்களையும் நோய்க்காரணிகளுக்கு எதிராகத் தூண்டி, அவற்றைத் தொழிற்படச் செய்யும்.

இவை போலிக் கால்களை அசைப்பதன் மூலம் அமீபாக்கள் போன்று அசையும் திறனுடையவை. இவற்றை ஓட்ட குழியநுண் அளவியல் (Flow cytometry), நோய்த்தடுப்பு இழைய வேதி சாயமூட்டல் (immunohistochemical staining) மூலம் குறிப்பிட்ட சில புரதங்களின் அடிப்படையில் அடையாளம் காணலாம்[2]. அப்புரதங்களில் சில CD14, CD11b, F4/80 (எலி)/EMR1 (மனிதன்), Lysozyme M, MAC-1/MAC-3, CD68 ஆகும்.

தொழிற்பாடு

ஒரு பெருவிழுங்கி நோய்க்காரணியை உள்ளெடுக்கும் படிமுறை:
a. விழுங்குதல் மூலம் உள்ளெடுத்தல், இதன்போது ஒரு phagosome உருவாகும்
b. இலைசோசோமும் phagosome உம் இணைந்து phagolysosome ஐ உருவாக்கும்; நோய்க்காரணியானது நொதியங்களால் உடைக்கப்படும்.
c. கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படும் அல்லது தன்மயமாக்கப்படும் (Assimilation) (c. படத்தில் காட்டப்படவில்லை)
பகுதிகள்:
1. நோய்க்காரணிகள்
2. Phagosome
3. இலைசோசோம்கள்
4. கழிவுப் பொருட்கள்
5. குழியமுதலுரு
6. கல மென்சவ்வு

விழுங்கி அழித்தல் (Phagocytosis)

பெருவிழுங்கியின் முக்கியமான தொழிகளில் ஒன்று நுரையீரலில் முதிர்ச்சியடையாமலே இறந்து போகும் கலங்களை (necrotic cells) அகற்றுதல் ஆகும். நீடித்த அழற்சி நிலைகளில், இவ்வாறு இறந்த கலங்கள் அகற்றப்படுவது அவசியமாகும். இவ்வாறான இறந்த கலங்கள் அகற்றும் தொழிலைச் செய்யும் பெருவிழுங்கிகள் பொதுவாக நிலையானவையாகும். அதாவது நுரையீரல், கல்லீரல், நரம்பிழையம், எலும்பு, மண்ணீரல், வேறு இணைப்பிழையம் போன்ற உறுப்புக்களில் நிலையாக இருந்து நோய்க்காரணி போன்ற வெளிப் பொருட்களை அழிப்பதுடன், தேவையேற்படின் புதிய பெருவிழுங்கிகளையும் உருவாக்கும்.
பெருவிழுங்கியானது நோய்க்காரணிகளை உள்ளெடுக்கும்போது phagosome உருவாகும். பின்ன இது இலைசோசோமுடன் இணைந்து phagolysosome உருவாகும். இந்த phagolysosome இனுள் சுரக்கப்படும் நொதியங்கள், வேறு நச்சுப்பொருட்கள் போன்றவற்றால், நோய்க்காரணி சமிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு அழிக்கப்படும்.

மேற்கோள்கள்

1. Krombach, F., Münzing, S., Allmeling, A. M., Gerlach, J. T., Behr, J., Dörger, M. (1 September 1997). "Cell size of alveolar macrophages: an interspecies comparison". Environ. Health Perspect. 105 Suppl 5: 1261–3. doi:10.2307/3433544. பப்மெட்:9400735.
2. Khazen, W., M'bika, J. P., Tomkiewicz, C., et al. (October 2005). "Expression of macrophage-selective markers in human and rodent adipocytes". FEBS Lett. 579 (25): 5631–4. doi:10.1016/j.febslet.2005.09.032. பப்மெட்:16213494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவிழுங்கி&oldid=763028" இலிருந்து மீள்விக்கப்பட்டது