கசையிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "நுண்ணுயிரியல்" (using HotCat)
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gl:Flaxelo
வரிசை 31: வரிசை 31:





[[பகுப்பு:நுண்ணுயிரியல்]]


[[ar:سوط (أحياء)]]
[[ar:سوط (أحياء)]]
வரிசை 38: வரிசை 40:
[[de:Flagellum]]
[[de:Flagellum]]
[[en:Flagellum]]
[[en:Flagellum]]
[[et:Vibur]]
[[es:Flagelo (biología)]]
[[eo:Flagelo]]
[[eo:Flagelo]]
[[es:Flagelo (biología)]]
[[et:Vibur]]
[[eu:Flagelo]]
[[eu:Flagelo]]
[[fa:تاژک]]
[[fa:تاژک]]
[[fi:Siima]]
[[fr:Flagelle]]
[[fr:Flagelle]]
[[io:Flagelo]]
[[gl:Flaxelo]]
[[he:שוטון]]
[[ht:Flajèl]]
[[id:Flagellum]]
[[id:Flagellum]]
[[io:Flagelo]]
[[is:Svipa]]
[[is:Svipa]]
[[it:Flagello (biologia)]]
[[it:Flagello (biologia)]]
[[he:שוטון]]
[[ja:鞭毛]]
[[jv:Flagelum]]
[[jv:Flagelum]]
[[ht:Flajèl]]
[[la:Flagellum (biologia)]]
[[la:Flagellum (biologia)]]
[[lt:Žiuželis]]
[[lt:Žiuželis]]
[[nl:Zweepstaartje]]
[[nl:Zweepstaartje]]
[[ja:鞭毛]]
[[no:Flagell]]
[[nn:Flagell]]
[[nn:Flagell]]
[[no:Flagell]]
[[pl:Wić]]
[[pl:Wić]]
[[pt:Flagelo]]
[[pt:Flagelo]]
வரிசை 63: வரிசை 67:
[[sl:Biček]]
[[sl:Biček]]
[[sr:Бич (биологија)]]
[[sr:Бич (биологија)]]
[[fi:Siima]]
[[sv:Flagell]]
[[sv:Flagell]]
[[te:కశాభము]]
[[te:కశాభము]]
வரிசை 70: வரிசை 73:
[[uk:Джгутик]]
[[uk:Джгутик]]
[[zh:鞭毛]]
[[zh:鞭毛]]

[[பகுப்பு:நுண்ணுயிரியல்]]

20:52, 8 மே 2011 இல் நிலவும் திருத்தம்

கசையிழை எனபது மெய்க்கருவிலி மற்றும் மெய்க்கருவுயிரிகளில் காணப்படும் நீண்ட சாட்டையைப் போல் உள்ள பகுதியை நாம் கசையிழை அல்லது நகரிழை என விளிக்கிறோம். இவை கலங்களின் இடப்பெயர்ச்சிக்குத் துணைப்புரிவதால் இவை நகரிழை எனவும் அழைக்கப்படுகிறது.

இவற்றின் நீளம் கலத்தின் நீளத்தை விட மிகுதியாகவும், குறுக்களவை விட பன்மடங்கு பெரிதாகவும் இருக்கும். மெய்க்கருவிலிகளில் குறிப்பிடும் படியாக விந்துவின் பின்னால் ஒற்றை நகரிழையாக காணப்படுகிறது. இவையே பாக்டீரியாவில் ஒன்றாகவோ ஒன்றுக்கு மேற்பட்டோ காணப்படுகிறது. இவை பொதுவாக கோலுயிரி பாக்டீரியாவில் காணப்படுகின்றன. கோளவுறு நுண்ணுழையாட்களில் இவை பெரும்பாலும் இருப்பதில்லை. இவற்றின் உதவியால் உயிர்கள் நீந்தி இடப்பெயர்ச்சி செய்கின்றன.

வகைப்பாடு

மூன்று வகையான கசையிழைகள் இதுவரை வரையறுக்கப்பட்டுள்ளது. அவை பாக்டீரியா, ஆர்கிபாக்டீரியா மற்றும் மெய்கருவிலி யாகும்.

  • பாக்டீரியாவின் கசையிழைகள் - திருகாணியைப்போல் சுற்றும் சுருள் வடிவத்தில் காணப்பெறும். அவை பாக்டீரியாக்களில் காணப்படும் பல வகை இடப்பெயர்ச்சியில் இரண்டு அசைவுகளை இது வெளிப்படுத்துகிறது.
  • ஆர்கிபாக்டீரியாவின் கசையிழைகள் - மேலோட்டமாக பார்க்கும் போது இவை மெய்பாக்டீரியாவிற்கு ஒத்திருந்தாலும், அவை தனித்துவம் வாய்ந்தவையாகவும் வேறாகவும் அறியப்படுகிறது.
  • மெய்க்கருவுயிரி கசையிழைகள் - இவை விலங்கு, தாவரம் மற்றும் புரோட்டிச்டு கலங்களில் வெளியே நீட்டப்பட்டு காணப்படும் உறுப்பு. இவை கலம் முன்னும் பின்னும் அசைய முற்பட செயலாற்றுகிறது. மெய்க்கருவுயிரி கசையிழைகள் மெய்க்கருவுயிரிகளின் சிலியா என்னும் உறுப்புடன் இணைத்து வரையறுக்கப்பட்டுள்ளது.

பாக்டீரியா கசையிழைகள்

கலச்சுவரை ஒட்டி உட்புறம் அமைந்துள்ள கலச்சவ்வுப் பகுதியில் வேர்ப்பகுதியும் நீண்ட சாட்டையைப் போல் கலச்சுவர்களுக்கு வெளியில் நீட்டியுள்ள உறுப்பு கசையிழை எனப்படும். இவை பாக்டீரியாவின் நகர்வுக்கு மிகவும் துணைப்புரிகிறது. இது 20 நானோமீட்டர் அடர்த்தியுள்ள வெற்றுக்குழாய் வடிவில் காணப்படும். இது ஃப்லாசெல்லின் என்னும் புரதத்தால் ஆனது. திருகாணிவடிவ நீண்ட கசையிழை மோட் கூட்டமைப்பு (Mot complex) என்னும் புரதத்தால் ஆன இயந்திர ஆற்றலால் இயங்குகிறது. இதன் அமைப்பு பாக்டீரியாவின் வகைகளான கிராம் சாயமேற்காத மற்றும் கிராம் சாயமேற்கும் இருதரப்புகளுக்கும் இடையில் வேறுபடுகிறது.

மேலும் பாக்டீரியாவில் இடம் பெற்ற கசையிழைகளின் எண்ணிக்கை மற்றும் இடம் குறித்து ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர். அவை, கசையிழையற்ற (atrichous) ஒற்றைக் கசையிழை (monotrichous), ஒருதுருவ கசையிழை (lophotrichous), இருதுருவ கசையிழை (amphitrichous) மற்றும் சுற்றுக்கசையிழை (peritrichous) ஆகியன.

ஆர்க்கீயா

ஆர்க்கி கசையிழை தனித்துவ மிக்க வடிவத்தில் மையப்பண்பை இழந்துக் காணப்படுகிறது. ஆர்கியல் ஃப்லாசெல்லின் புரதம் N - இணைப்பு கிளைக்கன் சேர்ப்பால் தனக்கேயுரிய அமைப்பும் பண்பும் கொண்டுக் காணப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கீழே வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது:

  • பாக்டீரியாவின் கசையிழை நீரிய அயனி (H+)/உப்பியத்தனிம (Na+) சோடியம் அயனிகளாலும் ஆற்றல் பெற்று இயங்குகிறது. ஆனால் ஆர்க்கியாவின் கசையிழை ATP என்னும் மூலக்கூறால் ஆற்றல் பெறுகிறது.
  • பாக்டீரியாவில் கூட்டு கசையிழைகள் தன்னிச்சையாக இயங்கும் ஆனால் இவைகளில் கசையிழைக் கற்றைகள் ஒத்த இயக்கங்களைப்பெற்று ஒரே அமைப்பில் இயங்கும்.
  • பாக்டீரியா கசையிழைகள் ஆர்க்கிய கசையிழைகளைவிட பெரிதாகவும், பெரிய வெற்றுக் குழல் போல் காட்சியளிக்கும்.

மெய்க்கருவுயிரி கசையிழைகள்

மெய்க்கருவுயிரிகளில் சிலியாவுடன் இணைந்து கசையிழைகளான உள்ளுருப்பை அண்டுலிப்போடியா என அறியப்படுகிறது. இவை ஒன்பது இணை நுண்குழாய் பிணைப்பால் ஆன கற்றையாகும். இவைகளுக்கு நடுவில் இரு ஒற்றை நுண்குழைய் காணப்படுகிறது. இந்த அமைப்பை நாம் ஆக்சோநீம் என விளிக்கிறோம்.

மேற்கோள்கள்

  • Bardy SL, Ng SY, Jarrell KF (February 2003). "Prokaryotic motility structures". Microbiology (Reading, Engl.) 149 (Pt 2): 295–304. doi:10.1099/mic.0.25948-0. PMID 12624192.
  • Jahn TL, Bovee EC (1965). "Movement and Locomotion of Microorganisms". Annual Review of Microbiology 19: 21–58. doi:10.1146/annurev.mi.19.100165.000321. PMID 5318439.
  • Lefebvre PA; Lefebvre, PA (2001). "Assembly and Motility of Eukaryotic Cilia and Flagella. Lessons from Chlamydomonas reinhardtii". Plant Physiol. 127 (4): 1500–1507. doi:10.1104/pp.010807. PMC 1540183. PMID 11743094.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசையிழை&oldid=760929" இலிருந்து மீள்விக்கப்பட்டது