பொது உரிமைப் பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lo:ສາທາລະນະສົມບັດ
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: az:İctimai varidat
வரிசை 30: வரிசை 30:
[[ar:ملكية عامة]]
[[ar:ملكية عامة]]
[[ast:Dominiu públicu]]
[[ast:Dominiu públicu]]
[[az:İctimai varidat]]
[[bar:Gmoafreiheit]]
[[bar:Gmoafreiheit]]
[[be-x-old:Грамадзкі набытак]]
[[be-x-old:Грамадзкі набытак]]

09:36, 4 மே 2011 இல் நிலவும் திருத்தம்

பொது உரிமைப் பரப்பு எனக்குறிப்பிடப்படுவது, அறிவுத்திறன் உடமை என்றும் கூறப்படும் எவராலும் கட்டுப்படுத்தப்படாத அல்லது உடமை கொள்ளாத எண்ணக்கரு தொகுப்பு ஆகும்.இச்சொற்றொடர் மூலம் இக்கருக்கள் பொது உடமை என்றும் எவரும் எக்காரணத்திற்காகவும் பயன்படுத்தலாம் எனவும் அறியலாம்.பலதரப்பட்ட அறிவுத்திறன் உடமைப் போலன்றி பொது உரிமைப்பரப்பினை வரையறுக்க இயலும்.பல்வேறு நாடுகளின் சட்டங்கள் பொது உரிமைப் பரப்பின் வீச்செல்லையை வெவ்வேறாக வரையறுத்துள்ளன.ஆகவே நாம் பொது உரிமைப் பரப்பினை விவாதிக்கையில் எந்த அதிகார பரப்பில் குறிப்பிடுகிறோம் என்பது முக்கியமானது.

பொது உரிமைப் பரப்பில் உள்ள ஆக்கங்களை காப்புரிமை பெற்ற ஆக்கங்களுடன் ஒப்பிடுவது வழக்கம். தற்கால சட்டங்களின்படி, ஓவியம்,காவியம்,இசை போன்ற எந்தவொரு மூல ஆக்கமும் அவை உருவாக்கப்பட்ட நேரத்திலிருந்தே சில காலம் (கால அளவு நாட்டிற்கெற்ப மாறும்) காப்புரிமை பெறுகின்றன.அக்கால அளவு முடிவுறும் வேளையில் அவ்வாக்கங்கள் பொது உரிமைப் பரப்பில் உள்ளதாகக் கருதப்படும்.ஓர் மதிப்பீட்டின்படி,உலகிலுள்ள அனைத்துப்புத்தகங்களிலும் 15% அளவே பொது உரிமைப் பரப்பில் உள்ளது;10% இன்னும் அச்சகத்தில் இருக்க, 75% புத்தகங்கள் காப்புரிமையால் பாதுகாக்கப்பட்டுள்ளன.[1]

வணிகக் குறிகள் ஓர் நிறுவனத்தின் வணிக நோக்கத்திற்காக தாம் மட்டுமே பயன்படுத்தும் பெயர்.சின்னங்கள் மற்றும் பிற அடையாளங்கள்.இவை காலக்கெடு எதுவுமின்றி பயன்படுத்தப் படலாம்;அவையும் புறக்கணிப்பு,பயன்பாடின்மை அல்லது தவறான பயன்பாடு என பொதுஉரிமைப் பரப்பில் வரலாம்.அதேபோல பயன்படாதிருந்து பொதுப்பரப்பில் உள்ள வணிகக்குறியை அந்நிறுவனம் மீண்டும் மீட்கலாம்.

ஆக்கவுரிமை என்பது ஓர் கண்டுபிடிப்பாளர் தமது கண்டுபிடிப்பை பதிந்து கொண்டு வேறெவரும் அதனை பாவிப்பதை தடை செய்வதாகும்.காப்புரிமைகள் போலவே ஆக்கவுரிமைகளும் குறிப்பிட்ட காலாளவிற்கே செல்லும்;அதன்பிறகு அவை எவரும் பாவிக்கும் வண்ணம் பொது உரிமைப்பரப்பைச் சாரும்.

மேற்கோள்கள்

  1. Kevin Kelly. Scan this Book!, New York Times, 14 May 2006.

உசாத்துணை

  • Fishman, Stephen, The Public Domain: How to Find & Use Copyright-Free Writings, Music, Art & More. ISBN 0-87337-433-9

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_உரிமைப்_பரப்பு&oldid=757312" இலிருந்து மீள்விக்கப்பட்டது