கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
15:04, 2 மே 2011 இல் நிலவும் திருத்தம்
ஈமோகுளோபின் அல்லது குருதிப் புரதம் அல்லது இரத்தப் புரதம் என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் குருதியில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது செங்குருதியணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. இது உடலில் குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம்.