குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5: வரிசை 5:

==குளம் கட்டுமாண முறைகள்==
==குளம் கட்டுமாண முறைகள்==
பள்ளம் நோக்கி ஓடும் மழை நீரை, தேக்கி வைக்க, குறுக்கே கட்டப்படும் அணை அநேகமாக ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கும். அதனை குளக்கட்டு என்பர். குளக்கட்டுகள் அநேகமாக நேராகவே காணப்படும். சில குளங்கள் விதிவிலக்காக சற்று வலைவுடன் உள்ளவைகளும் உள்ளன. இரண்டு அணைக்கட்டுக்களை கொண்ட குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழை அதிகரித்தால், குளம் நிரம்பி நீர் வெளியே பாய்வதற்கான வசதிகளும் குளத்தில் இருக்கும்.

===வாய்க்கால்===
குளத்தின் நீர் மக்களின் விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில், குளத்தை அண்மித்த கிராமங்களுக்கு, விவசாயத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நீர் வினியோகம் குறிப்பிட்ட திணைக்களத்தினால் வாய்க்கால் ஊடாக வழங்கப்படும். குளத்து நீர் வாய்க்கால் ஊடாக பல மைல்கள் தூரம் வரை வழங்கப்படும்.

===குளியல் மற்று ஏனைய பயன்பாடுகள்===
விவசாயத் தேவைகளுக்கு மட்டுமன்றி, குளத்தை அண்மித்து வாழும் மக்கள், குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் குளத்து நீரையே பயனபடுத்துவர். சிலர் குளத்தில் இருந்து பாய்ந்து செல்லும் வாய்க்கால் நீரை பயன்படுத்துவர்.

===குடிநீர்===
குளத்து நீரை மக்கள் அநேகமாக குடிநீராக பயன்படுத்துவதில்லை.

==ஆபத்து==
==ஆபத்து==

15:53, 12 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

குளம் (Tank) என்பது இயற்கையாய் பெய்யும் மழை நீரை, செயற்கையாய் அணையிட்டு மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய தேக்கி வைக்கும் இடமாகும். குளங்கள் அநேகமாக, மழைக் குறைவான பிரதேசங்களில் விவசாயத் தேவைகளுக்காக, மழைப் பெய்யும் காலத்தில், மழை நீர் நிரம்பி தாழ்வானப் பகுதி நோக்கி ஓடுவதை, குறுக்கே அணையிட்டு, சேமித்து, மழையில்லாத காலத்திலும் மக்களின் விவசாயத் தேவைகளுக்கு பயன்படும் வகையில் கட்டுவிக்கப்பட்டன. இவை அநேகமாக அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகளாகவே உள்ளன.

மக்கள் குடியிருப்புக்கள்

இயந்திரத் தொழில் முறைகள் அறிமுகமாகாதக் காலங்களில், மக்களின் பெரும்பான்மையோனரின் தொழில்கள், விவசாயமாகவே இருந்தன. அதனால் கட்டப்படும் குளங்களை அண்டியே மக்கள் குடியிருப்புகள் அமையப்பெற்றன. குளத்தின் நீர் வாய்க்கால் வழியாக விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அவை அமைக்கப்பட்டன. அதனால் குளத்தைச் சூழ பல விவசாயக் கிரமங்கள் தோற்றம் பெற்றதுடன், குளத்தை அண்மித்த ஊரின் பெயர் குளத்தின் பெயராகவே வைக்கப்பட்டன. அநேகமாக குளத்தை சூழ பல கிராமங்கள் இருக்கும். அவ்வாறான சமயம் அக்கிராமங்கள் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும், அந்த பிரதேசத்துக்கான பொது பெயராக குளத்தின் பெயராலாயே வழங்கப்படுகின்றது.

குளம் கட்டுமாண முறைகள்

பள்ளம் நோக்கி ஓடும் மழை நீரை, தேக்கி வைக்க, குறுக்கே கட்டப்படும் அணை அநேகமாக ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கும். அதனை குளக்கட்டு என்பர். குளக்கட்டுகள் அநேகமாக நேராகவே காணப்படும். சில குளங்கள் விதிவிலக்காக சற்று வலைவுடன் உள்ளவைகளும் உள்ளன. இரண்டு அணைக்கட்டுக்களை கொண்ட குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழை அதிகரித்தால், குளம் நிரம்பி நீர் வெளியே பாய்வதற்கான வசதிகளும் குளத்தில் இருக்கும்.

வாய்க்கால்

குளத்தின் நீர் மக்களின் விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில், குளத்தை அண்மித்த கிராமங்களுக்கு, விவசாயத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நீர் வினியோகம் குறிப்பிட்ட திணைக்களத்தினால் வாய்க்கால் ஊடாக வழங்கப்படும். குளத்து நீர் வாய்க்கால் ஊடாக பல மைல்கள் தூரம் வரை வழங்கப்படும்.

குளியல் மற்று ஏனைய பயன்பாடுகள்

விவசாயத் தேவைகளுக்கு மட்டுமன்றி, குளத்தை அண்மித்து வாழும் மக்கள், குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் குளத்து நீரையே பயனபடுத்துவர். சிலர் குளத்தில் இருந்து பாய்ந்து செல்லும் வாய்க்கால் நீரை பயன்படுத்துவர்.

குடிநீர்

குளத்து நீரை மக்கள் அநேகமாக குடிநீராக பயன்படுத்துவதில்லை.

ஆபத்து

கட்டப்பட்டிருக்கும் குளக்கட்டு மழை நீர் நிரம்பி வழிந்தாலோ அல்லது குளக்கட்டு உடைப்பெடுத்தாலோ, அதன் அண்மிக்க கிராமங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகும்.

இலங்கை குளங்கள்

இலங்கை வரலாற்றிலும் இலங்கையை ஆண்ட அரசர்கள் பல குளங்களை கட்டுவித்தனர். அவ்வாறு கட்டுவித்த குளங்கள் அந்த அரசர்களின் பெயர்களிலேயே அறியப்படுகின்றன. இக்குளங்கள் இலங்கையின் சமதரைப் பிரதேசங்களிலேயே உள்ளன. இலங்கையில் அதிகமான குளங்கள் வடகிழக்கு பகுதிகளிலேயே உள்ளன.

இந்திய குளங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளம்&oldid=741593" இலிருந்து மீள்விக்கப்பட்டது