உருளைக் கிழங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.2) (தானியங்கிஇணைப்பு: diq:Kartole
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fy:Ierdappel
வரிசை 71: வரிசை 71:
[[fi:Peruna]]
[[fi:Peruna]]
[[fr:Pomme de terre]]
[[fr:Pomme de terre]]
[[fy:Ierdappel]]
[[ga:Práta]]
[[ga:Práta]]
[[gan:土豆]]
[[gan:土豆]]

20:56, 26 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

உருளைக் கிழங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
துணைவகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சோ. டியூபரோசம்
'S. tuberosum'
இருசொற் பெயரீடு
சோலானம் டியூபரோசம்
Solanum tuberosum

லின்னேயசு

உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் (Solanum tuberosum) என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படும், ஒருவகைக் கிழங்காகும். உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும். இன்றைய பெரு நாட்டுப் பகுதியே உருளைக் கிழங்கின் தாயகம் எனப்படுகிறது[1] அங்கிருந்து 1536 இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு[2] ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது.[3] ஆண்டீய மலைப் பகுதிகளில் 1000 உக்கும் மேலான வெவ்வேறு வகை உருளைக்கிழங்குகள் விளைகின்றன. ஒரே பள்ளத்தாக்கிலும் கூட 100 வகையான உருளைக்கிழங்குகள் விளைகின்றன.[4]. முதலில் பெரு நாட்டில் தொடங்கி இருந்தாலும் இன்று பயிராகும் உருளைக்கிழங்கில் 99% சிலி நாட்டின் தெற்கு-நடுப் பகுதிகளில் இருந்து வந்த வகையே ஆகும். ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தப்பட்டபின் உருளைக்கிழங்கு அடிப்படை உணவு வகைகளில் ஒன்றாக மாரியது. ஆனால் உருளைக்கிழங்கில் பல வகைகள் இல்லாமல் ஒரே வகை பயிரிடப்பட்டதால் நோயால் தாக்குண்டது. 1845 இல் பூஞ்சைக் காளான் போன்ற, மெல்லிழைகள் நிறைந்த, ஒற்றை உயிரணு உயிரினமாகிய ஃவைட்டோஃவ்த்தோரா இன்ஃவெசுடான்சு (Phytophthora infestans) என்னும் ஒன்றால் ஏற்படும் ஒரு கொள்ளை நோயால் பெரிய அளவில் உருளைக்கிழங்கு பயிர்கள் தாக்குற்றுப் பரவி, மேற்கு அயர்லாந்தில் பெரும் பஞ்சம் ஏற்பட நேர்ந்தது[2]


சோவியத் ஒன்றியம் பிரிந்தபின்னர் உருளைக்கிழங்கு விளைச்சலில் சீனா முதலிடத்திலும்[3] இந்தியா இரண்டாம்[5] இடத்திலும் உள்ளன.


குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Spooner, David M.; Karen McLean, Gavin Ramsay, Robbie Waugh, and Glenn J. Bryan (Oct 2005). "A single domestication for potato based on multilocus amplified fragment length polymorphism genotyping". Proceedings of the National Academy of Sciences of the United States of America 102 (41): 14694-14699. http://www.pnas.org/cgi/content/full/102/41/14694. பார்த்த நாள்: 2008-02-15. 
  2. 2.0 2.1 "History of Potatoes". The Potato Council, Oxford, UK. பார்க்கப்பட்ட நாள் 2008-09-10.
  3. 3.0 3.1 China - World Potato Atlas
  4. Theisen, K (2007-01-01). "World Potato Atlas: Peru - History and overview". International Potato Center. Archived from the original on 2008-01-14. பார்க்கப்பட்ட நாள் 2008-09-10.
  5. India - World Potato Atlas - CIP-collab

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளைக்_கிழங்கு&oldid=727881" இலிருந்து மீள்விக்கப்பட்டது