ஏட்சி பனிமனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''ஓட்சி பனிமனிதன்''' என்பது இயற்கையாய்ப் பாதுகாக்கப்பட்ட ஒரு மம்மி ஆகும். இதன் வயது 5,300 ஆண்டுகளுக்கும் அதிகம். [[image:OetzitheIceman-glacier-199109b.jpg|thumb|widthpx|]]
'''ஓட்சி பனிமனிதன்''' என்பது இயற்கையாய்ப் பாதுகாக்கப்பட்ட ஒரு மம்மி ஆகும். இதன் வயது 5,300 ஆண்டுகளுக்கும் அதிகம். [[image:OetzitheIceman-glacier-199109b.jpg|thumb|widthpx|]]
இந்த மம்மி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆல்ப்சு மலைக்கருகில் ஆஸ்திரிய [[இத்தாலி]]ய நாடுகளின் எல்லையில் இரு ஜெருமானியர்களால் கண்டறியப்பட்டது.
இந்த மம்மி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆல்ப்சு மலைக்கருகில் ஆஸ்திரிய [[இத்தாலி]]ய நாடுகளின் எல்லையில் இரு ஜெருமானியர்களால் கண்டறியப்பட்டது.
வரிசை 14: வரிசை 13:

எக்ஸ் கதிர்ப்படங்களை ஆராய்ந்ததன் மூலம் பச்சை குத்தப்பட்ட இடங்களில் இருந்த எலும்புகள் தேய்ந்து இருந்தது அறியப்பட்டது. எனவே வலியைப் போக்குவதற்கு அக்குபங்சர் போன்ற சிகிச்சையாக இவன் பச்சைகுத்திக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

{{stub}}
[[en:Ötzi the Iceman]]

03:23, 11 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

ஓட்சி பனிமனிதன் என்பது இயற்கையாய்ப் பாதுகாக்கப்பட்ட ஒரு மம்மி ஆகும். இதன் வயது 5,300 ஆண்டுகளுக்கும் அதிகம்.

படிமம்:OetzitheIceman-glacier-199109b.jpg

இந்த மம்மி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆல்ப்சு மலைக்கருகில் ஆஸ்திரிய இத்தாலிய நாடுகளின் எல்லையில் இரு ஜெருமானியர்களால் கண்டறியப்பட்டது.

அறிவியலாளர்கள் புனைந்த ஓட்சியின் மறுகட்டமைப்பு
அறிவியலாளர்கள் புனைந்த ஓட்சியின் மறுகட்டமைப்பு

இந்த மம்மி யாருக்குச் சொந்தம் என இத்தாலிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் சட்டப்பூர்வப் பிரச்சினை ஏற்பட்டது. தற்போதைக்கு இந்த மம்மி இத்தாலி நாட்டில் உள்ள தெற்கு தைரோல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மரணத்தின் காரணம்

2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட எக்ஸ் கதிர்ப்படம் மற்றும் சி.டி. ஸ்கேன் படங்கள் மூலம் ஓட்சியின் இடது தோளில் அம்பு நுனி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அவனது உடையிலும் அதற்குப் பொருத்தமாக கிழியல் ஒன்று காணப்பட்டது. இக் கண்டறிதல் ஆராய்ச்சியாளர்களை ஓட்சி குருதிப் போக்கினால் இறந்திருக்கக் கூடும் என்று எண்ண வைத்தது. கூடுதல் ஆராய்ச்சிகளின் மூலம் மரணத்தின் முன் அம்பின் நுனிதவிர இதர பகுதிகள் நீக்கபட்டதையும் கை, மணிக்கட்டு மற்றும் மார்பு ஆகிய இடங்களிலும் காயம் இருப்பது கண்டறியப்பட்டது. தலைக்காயம் இருப்பது தலையில் அடிபட்டதை உணர்த்தியது.

தற்போதைக்கு தலைக்காயமே மரணத்திற்கான காரணம் என்று நம்பப்படுகிறது. ஆய்வாளர்கள் மரணத்தின் காரணம் கீழே விழுந்ததாலா அல்லது பாறையில் மோதவைக்கப்பட்டதாலா என்று உறுதியாய்க் கூற இயலாமல் உள்ளனர்.

பச்சை குத்தப்பட்டு இருந்தது

ஓட்சி பனிமனிதனின் உடலில் 57 இடங்களில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இவை கார்பனால் ஆனவை ஆகும். இவை லம்பார் முதுகெலும்பின் இருபுறமும் செங்குத்தாக வரையப்பட்டு இருந்தன. மேலும் வலது கால் மூட்டு மற்றும் இரு கணுக்கால் ஆகியவற்றிலும் ஏராளமான இடங்களில் பச்சை குத்தப்பட்டு இருந்தது.

எக்ஸ் கதிர்ப்படங்களை ஆராய்ந்ததன் மூலம் பச்சை குத்தப்பட்ட இடங்களில் இருந்த எலும்புகள் தேய்ந்து இருந்தது அறியப்பட்டது. எனவே வலியைப் போக்குவதற்கு அக்குபங்சர் போன்ற சிகிச்சையாக இவன் பச்சைகுத்திக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏட்சி_பனிமனிதன்&oldid=713969" இலிருந்து மீள்விக்கப்பட்டது